Thursday, October 14, 2010

கடவுள் தத்துவம் Vs அறிவியல்

நண்பர்களுக்கு வணக்கம்,
எப்போதும் அரைத்துக் கொண்டிருக்கிற மாவுதான் என்றாலும் என் கருத்தையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் இந்தப் பதிவு.தருமி அய்யா அவர்கள் இதற்குப் பதில் தர இசைந்திருக்கிறார்கள்.பதிவின் நோக்கம் கண்டிப்பாக யாருடைய விரோதத்தையும் சம்பாதிப்பது அல்ல .
***********

கலை என்கிற வடிவம் ஏற்பட்டதும் விமர்சனம் என்கிற விஷயம் வந்துவிட்டது போலத்தான் கடவுளும்.வேதங்களிலும் ,பைபிளிளும்,குரானிலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன .சமீபமாக தவற விட்டுவிட்ட இடுகைகளைப் படிக்கையில் பலர் எப்போதும் அடித்துக் கொண்டிருக்கிற ஜல்லியான கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக (நினைத்துக் கொண்டு) அவர்கள் காண்பிக்கிற அறிவியல் விஷயங்களையும் படிக்க நேர்ந்தது.

கடவுள் இல்லை என்று சொல்வதும், அதற்கு ஆதாரங்களை அடுக்குவதும் ஒன்றும் புதிய விஷயமல்ல.பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருப்பதுதான்.இருப்பினும் மனித குலத்தின் ஆதாரமான இந்த விஷயத்தை, ஆணிவேரைப் போல உறுதியான இந்த நம்பிக்கையை பரிணாம தத்துவமோ, ஜீன் மேப்பிங்கோ, கடவுள் துகளோ அசைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.காரணம்?

1.எல்லாக் கேள்விகளுக்கும் விடை தரும் நிலையில் அறிவியல் இன்று இல்லை.எப்போது அந்த நிலை வரும் என்றும் யாராலும் சொல்ல முடியாது.

2. கடவுளை நம்பி வாழ்க்கையை கடத்துகிற சாமானியனுக்கு அறிவியல் விஷயங்கள் எட்டுவதில்லை.

அது ஏன்? அல்லது அது எதனால்? என்ற கேள்விகள் அறிவியலின் ஒவ்வொரு விளக்கங்களுக்கும் கேட்கப்படுமாயின் ஏதோ ஒரு இடத்தில் அறிவு அல்லது அறிவியல் நின்று விடுகிறது.அதற்கு மேல் பதிலில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.`விஞ்ஞானம் எந்தப் புள்ளியில் நின்று விடுகிறதோ அந்தப் புள்ளியில் இருந்துதான் மெய்ஞ்ஞானம் ஆரம்பிக்கிறதுஎன்பார் கண்ணதாசன்.


கடந்த 16/08/2010 அன்று இரவு Discovery channel- ல் (மறு) ஒளிபரப்பான Stephan Hawking’s Special-The Origin Of Universe என்கிற நிகழ்ச்சியில் அவரால் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம்அறிவியலால் ப்ரபஞ்சம் தோன்றிய கணங்களை விவரிக்க முடிந்தாலும் அது ஏன் நிகழ்ந்தது என்பதைக் கூற முடியாது (Although science may solve the problem of how the universe began, it can’t answer the question why does the universe bother to exist).இந்த வாக்கியம் ஆத்திகத்திற்கு செளகர்யமான ஒன்றாகப்படுகிறது எனக்கு.

முன்பு சொன்னபடி பரிணாமக் கொள்கையிலும் அறிவியல் பதிலளிக்க முடியாமல் திணறும் இடங்களில் கடவுள் தத்துவம் செளகரியமாக உட்கார்ந்து கொள்ள நிறைய இடமிருக்கிறது.குரங்கில் ஒரு கிளை மட்டும் ஏன் மனிதனாக வேண்டும்?மற்றது ஏன் குரங்காகவே இருக்க வேண்டும்? அந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணம் என்ன? என்று ஆராயத் தொடங்கினால் எந்த நிலை வரை அறிவியலில் தெளிவான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? எனவே பரிணாமக் கொள்கை என்பது இறைவன் ஏழு நாட்களில் உலகைப் படைத்தான் என்பதை வேண்டுமானால் கேள்விக்குள்ளாக்கலாமே தவிர கடவுள் இல்லை என்பதை மறுக்க உதவும் என்று எனக்குத் தோன்றவில்லை.

மேலும் இந்தப் பரிணாம வளர்ச்சி நடைபெற்ற பல்லாயிரம் ஆண்டுகளைத்தான் உருவகமாக ஏழு நாட்கள் என்று சொல்கிறார்கள் என்று ஒரு வரியில் ஆத்திகர்கள் எதிர்வாதம் செய்ய முடியும்.(மனிதர்களின் காலமும் இறைவனின் காலமும் வேறு வேறு என்பது இந்துத்வமும், கிறித்தவமும் சொல்கிற விஷயம்).ஆக இந்த அறிவியல் கருதுகோள்களும் கோட்பாடுகளும் ,சில நம்பிக்கைகளை மட்டுமே இல்லை என்று தெளிவாக்குகிறதே தவிர, எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரமான கடவுள் தத்துவத்தை தெளிவாக்குகிற அல்லது மறுக்கிற கோட்பாடுகள் எதுவுமே இன்றைய அறிவியலில் கிடையாது. உங்களால் அவர்களுடைய சடங்குகளை அல்லது சிறு கருதுகோள்களை வேண்டுமானால் அசைத்துப் பார்க்க முடியுமே தவிர அடிப்படை நம்பிக்கையை அல்ல.

அறிவியலால் புது உயிரிகளை உண்டாக்க முடிகிறதுதான், ஆனால் அதற்கும் இயற்கையில் இருந்து ஒரு செல் வேண்டும்.இல்லை கிராஸ் பாலினேஷனா? மலடாக இருக்கும்.அதில்தான் இறைவனின் கைங்கர்யம் அடங்கியுள்ளது என்பார்கள்.இவற்றையெல்லாம் தெளிவாக்குகிற அறிவியல் தத்துவம் ஏதேனும் வரும் வரையில் அல்லது என்றைக்கு இயற்கையின் எவ்விதத் துணையும் இல்லாமல் அறிவியல் புது உயிரை உருவாக்குகிறதோ அன்று வரை , சிரித்துக் கொண்டே ஆத்திகர்கள் சொல்கிற,

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்

உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள்

உளனென இலனென இவை குணமுடைமையில்

உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே


என்கிற தத்துவத்தை இறுக்கத்துடன் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைதான் பார்க்க முடியும், மறுத்துப் பேச இயலாது.பேசுவதும் வீண்.தெளிவான நேர்கோட்டில் செல்கிற வாதம்தான் முடிவுக்கு இட்டுச் செல்ல முடியும், இந்த விவாதம் வட்டத்தில் சுழல்வது போல முடிவில்லாதது.எத்தனையோ நூற்றாண்டுகள் பழமையான விவாதம் இது,இன்னமும் முடிவுக்கு வரவேயில்லை என்பதே அதற்கு அத்தாட்சி.


56 comments:

வால்பையன் said...

பல நூற்றாண்டுகளாக மனிதன் உடையணியவில்லை

பல நூற்றாண்டுகளாக மின்சாரம் என்ரால் என்னவென்றூ தெரியாது

பல நூற்றாண்டுகளாக வானவியல் தெரியாது

ஆனா கண்டுபிடிச்சிடோம்ல, அது போல இதையும் கண்டுபிடிப்போம், அதற்கு தேடலை நிறுத்தால் தொடர வேண்டும்!

தேவன் மாயம் said...

முதலில் நாம் வாழும் பிரபஞ்ச எல்லைளையே வறையறை செய்ய இயலவில்லையே!

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீதர்

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு விவாதம் துவங்குகிறது - தருமி பதிலளிக்கிறேன் என உறிதி அளித்ததனால் எழுதப்பட்ட இடுகையா - வாலின் வாதம் எனக்குப் பிடிக்கிறது - பொறுத்திருந்து பார்ப்போம் - நல்வாழ்த்துகள் ஸ்ரீ - நட்புடன் சீனா

பீர் | Peer said...

கடவுள் என்பது நம்பிக்கை. இருக்கிறான் என்று நாமும் இல்லை என்று நம் சகோதரர்களும் நம்புகிறோம், அவ்வளவே.

இவர்களிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்பது, இல்லாத ஒன்றிலிருந்து ஏதாவதொன்றை உருவாக்கிக் காட்டுங்கள். (அதாவது மூலப்பொருள் இல்லாமல் ஒரு பொருளை உருவாக்குதல்) இது கடவுளால் மட்டுமே முடியும்.

இருக்கிறது என்று நம்பிக்கையாளர்களும், இல்லை என்று நம்பிக்கை இல்லாதவர்களும் அவரவர் நம்பிக்கையுடனே சகோதரர்களாக இருந்துவிட்டால் குழப்பமில்லை.

(அட... மீள்வரவு இடியுடனா?, என்னையும் மீண்டும் எழுத வச்சுடுவீங்க போலயே)

Radhakrishnan said...

மிகவும் சிறப்பாக இருக்கிறது.

இல்லை என்பதில் கூட இறைவன் இருக்கிறான் என சொல்லும்போதே இறைவன் குறித்தான தேடல்கள் முடிவுக்கு வந்து விடுகின்றன.

இறைவன் தேடி கண்டெடுக்கும் பொருள் அல்ல.

நமது தேடல்கள் வாழ்விற்கான தேடலாகத்தான் இருக்க இயலும். இறைவன் நமது வாழ்வில் ஒருபோதும் குறுக்கே வருவதில்லை. வந்ததில்லை.

அறிவியல் ஒருபோதும் இறைவனை தேட துணிந்தது இல்லை. எப்படி இது நடந்தது, எப்படி இது நடந்து இருக்க கூடும் என்பதில் தான் அறிவியலின் தேடல் இருக்கிறது என்பதுதான் நாம் உணர வேண்டிய ஒரு உண்மை.

நல்ல பதிவு, நன்றி.

sriram said...

நல்ல விவாதம் ஸ்ரீ..
பாப்போம் என்ன கருத்துக்கள் வருதுன்னு..

கடவுள் என்பது உள்ளுக்குள் தேட வேண்டிய ஒன்று என்பது என் கருத்து.
தேடிக்கொண்டு இருக்கிறேன், தேடலின் விடை கிடைக்குதோ இல்லயோ, நெறய Baggage இறக்கி வைத்துக்கொண்டே இருக்கிறேன். வெகுவிரைவில் ரொம்ப லைட்டா ஆவேன்னு நெனைக்கிறேன்..

பீர் : அருமையான வாதம்.
உங்களை இவ்விடுகை மீண்டும் எழுத வைத்தால் மகிழ்ச்சியே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...

பரபரப்பான விவாதங்களுக்காக..

ராவணன் said...

//பீர் | Peer said...

கடவுள் என்பது நம்பிக்கை. இருக்கிறான் என்று நாமும் இல்லை என்று நம் சகோதரர்களும் நம்புகிறோம், அவ்வளவே.

இவர்களிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்பது, இல்லாத ஒன்றிலிருந்து ஏதாவதொன்றை உருவாக்கிக் காட்டுங்கள். (அதாவது மூலப்பொருள் இல்லாமல் ஒரு பொருளை உருவாக்குதல்) இது கடவுளால் மட்டுமே முடியும்.

இருக்கிறது என்று நம்பிக்கையாளர்களும், இல்லை என்று நம்பிக்கை இல்லாதவர்களும் அவரவர் நம்பிக்கையுடனே சகோதரர்களாக இருந்துவிட்டால் குழப்பமில்லை.

(அட... மீள்வரவு இடியுடனா?, என்னையும் மீண்டும் எழுத வச்சுடுவீங்க போலயே)//

பீர் அவர்களுக்கு அன்பான வணக்கக்கள்.நம்ம மருத போல(நம்ம ஜெய்ஹிந்புரமா).

உங்களிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்பது, இல்லாத ஒன்றிலிருந்து ஏதாவதொன்றை உருவாக்கிக் காட்டுங்கள். (அதாவது மூலப்பொருள் இல்லாமல் ஒரு பொருளை உருவாக்குதல்) இது யாராலும் முடியாது.

உங்கள் கடவுளால் முடியும் என்றால் நம் பூமியைப் போன்று இன்னொரு பூமியை நம் பூமிக்குப் பக்கத்தில் உருவாக்கச்சொல்லுங்கள்.இது உங்களின் கடவுளால் முடியாது என்றால் நம் பூமி சூரியனைச் சுற்றாமல் நிலையாக ஒரே இடத்தில் இருக்கச் செய்ய இயலுமா?

கடவுளை நம்பும் அனைவருக்கும் ஒரே கேள்வி, நீங்கள் நம்பும் கடவுள் நான் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

என்ன? நம்பமாட்டீர்களா?பின் நீங்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே.

அன்பின் பீர் அவர்களே,
கடவுளுக்கு உருவம் இல்லை என்று நம்பும் நீங்கள்,அனைத்தையும் படைத்த கடவுள் தனக்கென ஓர் உருவத்தை உருவாக்கிக் கொள்ள இயலாதவர் என்றா கருதுகிறீர்கள்.

பீர் | Peer said...

அன்பின் ராவணன்,

ஆம், நம்ம ஜெய்ஹிந்த்புரம் தான். (அண்ணே காதுல விழாதுல்ல?) :)

அதான் ஒரே வார்த்தையில் சொன்னேனே, நம்பிக்கை

என் நம்பிக்கை,
கடவுள் ஒருவனே, அவன் உருவமற்றவன். எத்தேவையும் இல்லாதவன். (டாட்)

விவாதத்திற்கு,
நம் பூமி போல் இன்னொன்று இல்லை என்று சொல்கிறீர்களா?

சூரியனும் மற்ற கொள்களும் அதன் சுற்றுவட்டப் பாதையில் சுழன்று இறைவன் இருக்கிறான் என்பதற்கு சாட்சி சொல்கிறது. இது கடவுளால் விதிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன்.

Thamiz Priyan said...

சூரியன் தொடர்பாக மட்டும் ஒரு கருத்து.
பிரபஞ்சத்தின் எல்லை என்னவென்று இன்னும் எல்லை வரையறுக்கப்படவில்லை. நாம் பார்க்கும் சூரியன் தவிர இன்னும் பல ஆயிரம் சூரியன்கள் உள்ளன. அவைகளும் ஒவ்வொரு வட்டப்பாதையிம் சுழன்று கொண்டு இருக்கின்றன. நாம் இருக்கும் சூரிய மண்டலத்தின் ரகசியங்களே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல ஆயிரம் சூரியன்களையும், அவைகளின் வட்டப்பாதைகளையும், அதில் சுழலும் கோள்கள் பற்றியும், அவைகளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பின் ஸ்ரீ....

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் எழுத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


இங்கே பலருக்கும், கடவுள் குறித்த உளச் சிக்கல் இருப்பதாகவே உணர்கின்றேன். இங்கே பலரும் மத மறுப்பை, இறை மறுப்பாக நினைத்துக் கொள்கின்றனர்.

”இந்து” மதம் என்ற பொதுப்பெயரால் தெய்வங்களுக்குள் உறவுகளை ஏற்படுத்தி, தனித்தனியான வழிபாட்டு முறைகளை வகுத்ததும் தான் இறைமறுப்பு பிரச்சாரத்தின் அடிப்படை என்று நினைக்கின்றேன்.

மதங்களின் பெயரால், கடவுள்களின் பெயரால், சாத்திரங்களின் பெயரால், அல்லல்படுத்தப்பட்ட மனிதவெறுப்பின் வெளிப்பாடே பெரியார் பகுத்தறிவுக் கொள்கை. பெரியாரை தெளிவாகப் படித்தவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள்.

தந்தைபெரியாரே கூட தொடக்க காலத்தில் மத எதிர்ப்பாளரே. இறை எதிர்ப்பாளர் அல்ல.

தருமி said...

ஊரிலிருந்து இப்போதான் இரு மணி நேரத்திற்கு முன் வந்தேன்.

....... இதோ வந்திர்ரேன்...

Anonymous said...

//அறிவியல் பதிலளிக்க முடியாமல் திணறும் இடங்களில் கடவுள் தத்துவம் செளகரியமாக உட்கார்ந்து கொள்ள நிறைய இடமிருக்கிறது//

கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவள் அல்ல..இருப்பினும் முட்டாள் அல்ல மேற்கூறிய அந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு உண்மையான கூற்றும் கூட...இந்த தலைப்பு பலரால் இன்றும் அலசப்படும் ஒன்றே..பதிலுக்கு காத்திருப்போம் ஸ்ரீ

க.பாலாசி said...

நல்ல இடுகைங்க.. என் ஜென்மத்திலும்
இதற்கான தெளிவான பதில்கள் கிடைக்கப்போவதில்லை.

கையேடு said...

//எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரமான கடவுள் தத்துவத்தை தெளிவாக்குகிற அல்லது மறுக்கிற கோட்பாடுகள் எதுவுமே இன்றைய அறிவியலில் கிடையாது. உங்களால் அவர்களுடைய சடங்குகளை அல்லது சிறு கருதுகோள்களை வேண்டுமானால் அசைத்துப் பார்க்க முடியுமே தவிர அடிப்படை நம்பிக்கையை அல்ல. //

மிகவும் அயர்ச்சி தரும் ஒரு விவாதம் உண்டென்றால் அது கடவுள் பற்றியதாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

நம்பிக்கை என்பது எவ்வித தர்க்கங்களுக்கும் உட்படாதது, அங்கே சிந்தனைக்கு இடமில்லை. அதோடு உரையாடலுக்கும், சிந்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

கடவுளைப்பற்றிய தேடல் அல்லது ஞானத் தேடலாக இப்போது மாற்றி வழங்கப்படுவது அல்லது விற்கப்படுவது, முடிவை முன்னிறுத்தி வழிமுறையைத் துழாவும் வேலையாகவே இருக்கிறது. இது அறிவியல் முறைக்கு முற்றிலும் எதிரானது.

இந்தியக் கலாச்சாரப் பின்னணியில், இந்தக் கடவுள்/ஞானத் தேடல் போன்ற சொல்லாடல்கள் இந்திய செயல்திறனையும், சிந்தனைத் திறனையும் மழுங்கச்செய்ததில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்ற வெளிப்படையான குற்றாச் சாட்டையும் முன்வைக்கிறேன்.

அறிவியல் முறை முன்முடிவற்ற சிந்தனையின் மேல்தான் கட்டி எழுப்பப்படுகிறது. அதனால் நம்பிக்கைகளுக்கு அங்கே இடமில்லை.

கடவுள் தத்துவத்திற்கு அறிவியல் விளிம்பு எப்போதும் தேவை, ஆனால் அறிவியலை கடவுள் தத்துவத்தோடு ஒப்பிடுதல் அறிவியலுக்கு இழுக்குதான், பெருமை ஒன்றும் இல்லை.

கல்வெட்டு said...

.

கையேட்டின் October 19, 2010 4:58 PM பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.

அறிவியலை கடவுள் தத்துவத்தோடு ஒப்பிடுதல் அறிவியலுக்கு இழுக்குதான், பெருமை ஒன்றும் இல்லை.கடவுள் என்பது நம்பிக்கை.

அறிவியல் என்பது உண்மை.

அதனால்தான் Do you believe in god ? என்று கேட்கிறார்கள் யாரும் Do you believe in science or computer or math or electricity என்று கேட்பது இல்லை.

நம்பிக்கைக்கும் அறிவியல் உண்மைக்கும் உள்ள வித்தியாசம் மேற்சொன்ன எடுத்துக்காட்டில் இருந்து புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.


கடவுள் என்பது நம்பிக்கை என்று சொன்னால் இதில் பேசுவதற்கு என்றும் இல்லை.அப்படியா? உங்கள் நம்பிக்கை உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும் வரையில் எனக்கு பிரச்சனை இல்லை. யாரும் அதை அறிவியலோடு ஒப்பிட்டு அறிவியலை அசிங்கப்படுத்துபோது பிரச்சனை வருகிறது. :-(((

"I believe in God" என்று சொன்னால் அதற்கான எனது பதில் "may God bless you"

.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

ஹாகிங்கின் தனது சமீபத்திய 'Grand Design' என்ற புத்தகத்தில் " பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவைப்பட நேர்ந்திருக்காது!" என்று கூறியுள்ளார்! நான் படித்து விட்டேன்! நீங்கள்?
http://www.telegraph.co.uk/science/science-news/7976594/Stephen-Hawking-God-was-not-needed-to-create-the-Universe.html

ராவணன் said...

//பீர் | Peer said...

அன்பின் ராவணன்,

ஆம், நம்ம ஜெய்ஹிந்த்புரம் தான். (அண்ணே காதுல விழாதுல்ல?) :)

அதான் ஒரே வார்த்தையில் சொன்னேனே, நம்பிக்கை
என் நம்பிக்கை,
கடவுள் ஒருவனே, அவன் உருவமற்றவன். எத்தேவையும் இல்லாதவன். (டாட்)

விவாதத்திற்கு,
நம் பூமி போல் இன்னொன்று இல்லை என்று சொல்கிறீர்களா?

சூரியனும் மற்ற கொள்களும் அதன் சுற்றுவட்டப் பாதையில் சுழன்று இறைவன் இருக்கிறான் என்பதற்கு சாட்சி சொல்கிறது. இது கடவுளால் விதிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன்//

அன்பான பீருக்கு,

நான் கேட்டதற்கு நேரடி பதிலை உங்களால் கூறமுடியவில்லை.நான் தான் கடவுள் என்பதை நம்புகிறீர்களா?
கடவுள் என்பதற்கு ஏதாவது சிறுகுறிப்பு உள்ளதா?

எத்தேவையும் இல்லாதவன் எதற்காக உலகைப் படைக்கவேண்டும்,
உயிர்களைப் படைக்கவேண்டும்,
அதில் பிரிவினைகளை உருவாக்கவேண்டும்.what a sadist your god?
உங்கள் கடவுள் சும்மா மூடிக்கொண்டு அதாவது பொத்திக்கொண்டு இருந்திருந்தால் நமக்கு ஏன் இத்தனை அல்லல்.
வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட உங்கள் கடவுளின் குரூர புத்தியை என்னவென்பது?

உங்கள் நம்பிக்கையை உங்கள் மச்சுவீட்டினுள் வைத்திருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
வீதிக்கு வருவதினால் எங்களைப் போன்றவர்களும் பாதிப்படைகின்றார்கள்.
குஜராத்,அயோத்தி என்று கூப்பாடு போடுவதில் ஒன்றும் இல்லை.
ஒரு சமாதானமான உலகைப் படைக்க வக்கற்ற ஒரு கடவுள் தேவையா?
இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,இது மனிதர்களின் தீய எண்ணங்களால் நடைபெறுகின்றன என்று நீங்கள் கூறினால், நல்ல எண்ணங்களையுடைய மனிதர்களைப் படைக்கத் தெரியாதவன் எல்லாம் கடவுளா?

அன்பான பீருவிற்கு,
நீங்கள் இடியுடன் வருவீர்கள் என்பதற்காக அல்ல,யாராவது மடியுடன் பிற அமணன்(bhramins) வந்தாலும்,இல்லை தடியுடன் சிவசேனா,VHP, வந்தாலும் இதே பதில்தான்.

வார்த்தை said...

கடவுள் இருக்கிறார்,
கடவுள் இல்லை
என்பதெல்லாம் நம்பிக்கை.

ஆதாரம் தேவைப்படுவது அறிவியலுக்குத்தான்.
உண்மையில் இது அறிவியலாளனின் பிரச்சனை.
கடவுள் உண்டு என்று அவர்கள் சொல்லவும் நிரூபித்து காட்டவேண்டும்;
கடவுள் இல்லை என்று அவர்கள் சொல்லவும் நிரூபித்து காட்டவேண்டும்.

நம்பிக்கைக்கோ அவநம்பிக்கைக்கோ ஆதாரம் தேவையில்லை.
ஆனால் இருபுறமும் உள்ள அரைவேக்காடுகள் சும்மா இருப்பதில்லை.

அதுவரை கடவுள் நம்பிக்கையுள்ள / நம்பிக்கையற்ற
உங்களை நேரடியாகவோ / மறைமுகமாகவோ
வலிய வந்து ஏளனப்படுத்துவோரை

என்ன செய்யவேண்டுமோ செய்யுங்கள், பொழுது போக‌.....

வால்பையன் said...

விளையாட்டுல ஜெயிக்கிறவனை ஏத்துக்கலாம்,

ஏன் தோக்குறவனையும் ஏத்துக்கலாம்.

ஆனா சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு உதார் விடுது பாருங்க, அதுகளை பார்த்தா தான் கொஞ்சம் எரிச்சலா இருக்கு!

Chandru said...

கடவுளை நம்பாதவனுக்கு ஒவ்வொரு பொருளும் தானாகத் தோன்றியது என்ற பல கோடி நம்பிக்கை.
ஆனால் கடவுளை நம்பினவனுக்கு ஒரே ஒரு நம்பிக்கை கடவுள் மட்டும் தானாகத் தோன்றினார் என்பதுதான்.

தருமி said...

ஸ்ரீ,
உங்கள் பதிவில் நீங்கள் கொடுத்துள்ள சில வாதங்கள் எனக்குக் கொஞ்சமும் சரியாகத் தெரியவில்லை. அவைகளை முதலில் பட்டியலிட்டு விடுகிறேன் – சில பதில்களோடு.

கையேடு: நம்பிக்கை என்பது எவ்வித தர்க்கங்களுக்கும் உட்படாதது, அங்கே சிந்தனைக்கு இடமில்லை. அதோடு உரையாடலுக்கும், சிந்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். –கண்மூடிக்கொண்டு …….. ரொம்ப சரியா சொல்லிட்டார்.

கல்வெட்டு: Do you believe in god ? என்று கேட்கிறார்கள் யாரும் Do you believe in science or computer or math or electricity என்று கேட்பது இல்லை. இதிலேயே உங்கள் கேள்விகளுக்கு நல்ல பதில் இருக்கு …

//பலர் எப்போதும் அடித்துக் கொண்டிருக்கிற ஜல்லியான கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக (நினைத்துக் கொண்டு) அவர்கள் காண்பிக்கிற....//

அப்போ இறை மறுப்பாளர்கள் சொல்றதெல்லாம் “ஜல்லி” அப்டின்றீங்க. அப்புறம் ஏங்க அந்த ஜல்லி ஆளுங்க கிட்ட பதில் கேக்குறீங்க!!

//ஆணிவேரைப் போல உறுதியான இந்த நம்பிக்கையை ... .... அசைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.காரணம்? //

இந்த நம்பிக்கை எந்த அளவு உறுதியானது என்பதை எனது அடுத்த இடுகையில் சொல்ல உத்தேசம். பதிவிட்டதும் அதை இங்கு தொடுப்பாகக் கொடுக்கிறேன்.

//விஞ்ஞானம் எந்தப் புள்ளியில் நின்று விடுகிறதோ அந்தப் புள்ளியில் இருந்துதான் மெய்ஞ்ஞானம் ஆரம்பிக்கிறது’ என்பார் கண்ணதாசன்//
-- மிகத் தவறான ஒரு நினைப்பு; கணிப்பு. கண்ணதாசனின் கவிதை நயத்தைப் பாருங்கள். அது நன்றாக இருக்கும். அது போதும்.

//இந்த வாக்கியம் ஆத்திகத்திற்கு செளகர்யமான ஒன்றாகப்படுகிறது எனக்கு.... //

எங்க அஞ்சாங்கிளாஸ் வாத்தியாரின் கிறித்துவப் பாடத்தில் மனிதப் பரிமாணம் பற்றிப் பேசும்போது, அப்போ ஆதாமை கடவுள் படைக்கலைன்னு வச்சுக்குவோம்.. அந்த முதல் மனிதன் குரங்கிலிருந்து வந்தது; அதன் பின் அப்படியே போனால், கடைசியில் அமீபா வந்தது? (bacteria, virus இதெல்லாம் எங்களுக்கும் தெரியாது; அவருக்கும் தான்.) அமீபா எப்படி வந்ததுன்னு கேட்பார். ஆஹா! தெரியலையா...அங்கதான் கடவுள் வர்ரார். – நீங்க சொல்ற கதை ரொம்ப பழைய அரைச்ச மாவு!

//அடிப்படைக் காரணம் என்ன? என்று ஆராயத் தொடங்கினால் எந்த நிலை வரை அறிவியலில் தெளிவான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? ... //
ஏம்’பா ... பட்டப்படிப்பில் மனித பரிணாமத்தைப் படிக்காம சாய்ஸில் உட்டுட்டீங்களா?

//எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரமான கடவுள் தத்துவத்தை தெளிவாக்குகிற அல்லது மறுக்கிற கோட்பாடுகள் எதுவுமே இன்றைய அறிவியலில் கிடையாது.//
--- அது அறிவியலின் வேலை கிடையாது. இறைமறுப்பாளர்கள் அறிவியலின் துணை தேடிப்போய் அங்குள்ளவைகளை வைத்து தங்கள் இறைமறுப்புக்குக் காரணங்களைக் கொடுக்கிறார்களே ஒழிய, அறிவியலின் நோக்கமோ போக்கோ அதல்ல.

//இயற்கையின் எவ்விதத் துணையும் இல்லாமல் அறிவியல் புது உயிரை உருவாக்குகிறதோ அன்று வரை , சிரித்துக் கொண்டே ஆத்திகர்கள்//
----- ஆத்திகர்களின் “இந்த” சிரிப்பின் வரலாறு மிக நீளமானதே. அறிவியலைப் பார்த்து சிரிப்பதும், பின் அடங்குவதும் .. பின் மீண்டும் சிரிப்பதும் .......... இது ஒரு தொடர்கதை... முடிவதில்லை.

சிரியுங்கள் .......

தருமி said...

ஸ்ரீ,
அடுத்து வரும் என் 3 இடுகைகள் இப்பதிவோடு தொடர்புள்ளவைகளாக இருக்குமென நம்புகிறேன். அப்பதிவுகளின் தொடுப்புகளை இப்பதிவின் பின்னூட்டத்தில் அவ்வப்போது போட்டு விடுகிறேன். படித்துவிட்டு நம் உரையாடலைத் தொடரலாமென நினைக்கிறேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பின் சகோதரர் ஸ்ரீ,
கடவுள் மறுப்பாளர்கள் முன்வைக்கும் தியரியான பரிணாமவியல் கோட்பாடுகளை எனக்குத் தெரிந்து இரண்டு நபர்கள் இணையத்தில் தொடர்ந்து அறிவியல் ஆதாரங்களுடன் கேள்விக்குள்ளாக்கி வருகின்றார்கள். அவர்களுக்கு எந்த ஒரு பதிலையும் கடவுள் மறுப்பாளர்கள் முன்வைக்கவில்லை. அந்த சுட்டிகள்:
எதிர்க்குரல்: பரிணாமம் அழகிய உரையாடல்கள்
கார்பன் கூட்டாளி: பரிணாமம் பகுதிகள்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

மன்னிக்கவும்., எதிர்க்குரல் தளத்தின் சரியான சுட்டி:
எதிர்க்குரல்: பரிணாமம் அழகிய உரையாடல்கள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பின்னூட்டமிட்ட அணைத்து நண்பர்களுக்கும் நன்றி.ஆனால் நான் எதைச் சொல்ல நினைத்தேனோ அதை சரியாகச் சொல்லவில்லை என்று பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.மறுபடி முயற்ச்சிக்கிறேன்.

தருமி said...

பி.ஏ.ஷேக் தாவூத்,

விளம்பரங்களுக்கு நன்றி.

அதில் ஒரு பதிவு ஏற்கெனவே தெரிந்தது;இன்னொன்றையும் வாசித்தேன். பரிணாமம் உண்மையான அறிவியல் என்பதற்கு taxonomy, fossils, anatomy, vestigial organs, bio geography, paleontology, genetics, time scales என்று வண்டி வண்டியாக சான்றுகள் குவிந்திருக்கின்றன. ஆனால் மத நம்பிக்கையாளர்களுக்கு இதெல்லாமே "வெறும் கட்டுக் கதைகள்"!!

ஆனால் தனி மனிதன் ஒருவர் குகைக்குள் சென்று திரும்பி வந்து "கடவுள் என்னோடு பேசினார்; கட்டளை கொடுத்தார்" என்பதுவும், அதிலும் (ஒரு சின்ன உதாரணமாக..) எல்லோரும் நாலு மனைவிகள் கட்டிக் கொள்ளலாம்; ஆனால் எனக்கு மட்டும் பத்தோ பதினொன்றோ என்று சொல்வதெல்லாம் அப்படியே "முழு உண்மை" என்கிறீர்களே .. அந்த தத்துவம்தான் புரியவில்லை.

அதோடு அந்தப் பதிவுகளை வாசிக்கும்போது டார்வின், ஹாக்கின்ஸ்,ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கள் சான்றுகளோடு தரும் அறிவியல் உண்மைகளை ஒத்துக் கொள்பவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை; ஆனால் குரானை அப்படியே நம்புவர்கள் மட்டுமே அதி புத்திசாலிகள் என்ற தோரணை. அதனால் அவைகளை அதி புத்திசாலிகள் மட்டும் வாசிப்பது நல்லது.

இன்னொன்றும் பார்த்தேன். என்னையும் சேர்த்து அங்கே பின்னூட்டம் இடுபவர்கள் கொஞ்சம் "பூசி மெழுகி"தான் கேள்விகளைக் கேட்கிறோம்... தேங்காயைப் போல் உடைத்து கேட்க பல இருந்தும்.காரணம் என்னவென தெரியவில்லை.

விந்து விவாதம் பதிவுகளில் முடிந்த பின் எனக்குத் தோன்றிய உண்மை: இதைவிட சுவற்றில் முட்டிக் கொள்ளலாம்!

தருமி said...

http://dharumi.blogspot.com/2010/04/come-be-my-light.html

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பின் தருமி அய்யா,
விளம்பரங்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய இடத்தினில் இருப்பவர் ஆஷிக் அஹமத் அவர்கள் தான். ஆனால் நீங்கள் நன்றி சொல்கிறீர்களே என ஆச்சர்யமாக தான் இருக்கிறது. வழக்கமாக அறிவியல் அடிப்படையில் பரிணாமம் குறித்து கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் இல்லாத போது பேசுபொருளை விட்டு விட்டு வேறொன்றுக்கு தாவுவது நாத்திகர்களின் வழக்கம். அதற்கு தாங்களும் விதிவிலக்கல்லவே. ஆஷிக் தளத்தினில் உங்களை உடைத்து கேட்பதை தடுப்பது எது என்பதை அறிந்து கொண்டு மீண்டும் தங்கள் அங்கே சென்று உடைத்து கேட்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
(குறிப்பு: நான் குறிப்பிட்ட ஆஷிக் தளத்தினில் நீங்கள் ஒன்றிரண்டு பின்னூட்டங்களை போட்டு விட்டு மறந்தோ அல்லது மறைந்தோ போய் விடுவீர்கள். எங்கேயாவது முழுமையாக உரையாடியிருக்கிரீர்களா? இதை அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன். வேறொன்றுமில்லை. பின்னூட்டம் இடுவதும் அல்லது உரையாடுவதும் உங்களின் தனிப்பட்ட உரிமை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் தான் துறை சார்ந்த வல்லுநர் என்று ஒருவர் உங்களின் சுட்டிகளை கொடுத்தார் ஆஷிக் தளத்தினில். அதனால் தான் கேட்கிறேன்.)

Aashiq Ahamed said...

சகோதரர் ஷேக் தாவுத்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//நான் குறிப்பிட்ட ஆஷிக் தளத்தினில் நீங்கள் ஒன்றிரண்டு பின்னூட்டங்களை போட்டு விட்டு மறந்தோ அல்லது மறைந்தோ போய் விடுவீர்கள். எங்கேயாவது முழுமையாக உரையாடியிருக்கிரீர்களா? இதை அறிந்து கொள்வதற்காக கேட்கிறேன்//

உங்களுடைய இந்த கருத்து தவறு. தருமி ஐயா அவர்கள் ஒரு தடவை உரையாடி இருக்கின்றார். அந்த உரையாடலை கீழ உள்ள சுட்டியில் பார்க்கலாம்.

http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

//விளம்பரங்களுக்கு நன்றி//

தருமி ஐயா அவர்களின் இது போன்ற கருத்துக்களுக்கு (நக்கல்களுக்கு) பதில் தராமல் இருப்பது நலம். இது அவர்களது எண்ண ஓட்டத்தை நன்றாகவே வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றது. முடிந்தால் என்னுடைய பதிவுகளுக்கு ஐயா போன்றவர்கள் பதில் அளிக்கட்டும். இல்லையென்றால் செல்லட்டும். அது அவர்களது இஷ்டம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

தருமி said...

//எங்கேயாவது முழுமையாக உரையாடியிருக்கிரீர்களா? //

ஹா .. நல்ல ஜோக்!

உரையாடியது மட்டுமல்ல.. அங்கங்கே சில கேள்விகளும் கேட்பதுண்டு. முதல் முதல் எழுதியதில் 21 கேள்விகளில் முதல் ஏழெட்டு கேள்விகளுக்கு மேல் யாரும் பதில் தர வரவில்லை.

Sin of Khalwa, லாய்லாஹ் … இப்படியாகச் சில விஷயங்களைப் பற்றிக் கேட்டேன். இதுவரை பதிலில்லை.

இப்படி கூட ஒரு கேள்வி - இன்னும் பதிலில்லை. 3. female genital mutilation ஆப்ரிக்க நாடுகளில் உள்ளது என்று என்னைத் திருத்திவிட்டார் மாலிக். ஆனால் நான் உங்கள் நபியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, இதுவும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதைச் சொல்லும் போது மெளனமாகி விடுவதும் ...

ஷேக் தாவூத் ... இது போல் நிறைய.

இன்னும்கூட கேள்வி கேட்கலாம்தான். ஆனாலும் விந்து பற்றிய விவாதம் போல்தானே 1400 வருஷக் கதை எல்லாமும் இருக்கும்.
அதனால் குறைத்துக் கொண்டேன்.

தருமி said...

//முடிந்தால் என்னுடைய பதிவுகளுக்கு ஐயா போன்றவர்கள் பதில் அளிக்கட்டும். //

punctuated equilibria பற்றிகூட எழுதணும் ஆனால் அப்படியெல்லாம் எழுத முனைப்பு குறைவாக ஆகிவிட்டது. ஏனென்றால் எந்த விவாதமானாலும் விந்து பற்றிய விவாதம் போல்தானே 1400 வருஷக் கதை எல்லாமும் இருக்கும்.
அதனால் குறைத்துக் கொண்டேன்.

தருமி said...

பி.ஏ.ஷேக் தாவூத்,

//அறிவியல் அடிப்படையில் பரிணாமம் குறித்து கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் இல்லாத போது பேசுபொருளை விட்டு விட்டு வேறொன்றுக்கு தாவுவது நாத்திகர்களின் வழக்கம்.//

ஒன்று செய்யலாம். என் பதிவுகளில் 'மதங்கள்' என்ற label-ல் இருப்பதைப் பார்த்து விட்டு,அதன்பின் ஆத்திகர்களின் வழக்கம் என்ன என்று கூறுங்களேன்.

Aashiq Ahamed said...

சகோதரர்கள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் கடந்த சில மாதங்களாக பரிணாமம் குறித்த தகவல்களை Evolution st(he)ory > Harry Potter stories என்ற தலைப்பில் பதிவேற்றி வருகின்றேன். இங்கு கருத்து தெரிவித்துள்ள சகோதரர் ரஞ்சித் (கையேடு) மற்றும் தருமி ஐயா அவர்கள் என்னுடன் இது குறித்து அந்த பதிவுகளில் உரையாடி இருக்கின்றார்கள்.

சகோதரர் ரஞ்சித் அவர்களுடனான உரையாடல்,
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories.html

தருமி அவர்களுடனான உரையாடல்,
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

பரிணாமம் தொடர்பான அனைத்து கட்டுரைகளையும் காண,
http://ethirkkural.blogspot.com/search/label/Evolution%20Theory

மேலும் "செயற்கை செல்" குறித்த தகவல்களை -- செயற்கை செல் எதனை பொய்பிக்கின்றது? கடவுளையா? நாத்திகத்தையா? -- என்ற தலைப்பில் பதிவேற்றியிருக்கின்றேன்.
http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html

என்னுடைய பெரும்பாலான பரிணாம கட்டுரைகள் அறிவியலாளர்களின் கருத்துக்களை வைத்தே எழுதப்பட்டவை.

நாத்திகத்தை உண்மைப்படுத்துவதற்கு பரிணாமத்தையும், செயற்கை செல் ஆய்வையும் துணைக்கு அழைத்து வரும் சகோதரர்கள் என்னுடைய பதிவுகளை பார்வையிட்டு விட்டு உங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம். இறைவன் நாடினால், உங்களுக்கு பதிலளிக்க முயற்சிக்கின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

தருமி said...

//முடிந்தால் என்னுடைய பதிவுகளுக்கு ஐயா போன்றவர்கள் பதில் அளிக்கட்டும்.//

அறிவியல் உண்மைகளை ஒத்துக் கொள்பவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை; ஆனால் குரானை அப்படியே நம்புவர்கள் மட்டுமே அதி புத்திசாலிகள் என்ற தோரணை. அதனால் அவைகளை அதி புத்திசாலிகள் மட்டும் வாசிப்பது நல்லது.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

//அறிவியல் உண்மைகளை ஒத்துக் கொள்பவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் இல்லை; ஆனால் குரானை அப்படியே நம்புவர்கள் மட்டுமே அதி புத்திசாலிகள் என்ற தோரணை. அதனால் அவைகளை அதி புத்திசாலிகள் மட்டும் வாசிப்பது நல்லது//

உணர்ச்சிவசப்படுவதால் ஒரு உபயோகமும் இருக்க போவதில்லை.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

//முதல் முதல் எழுதியதில் 21 கேள்விகளில் முதல் ஏழெட்டு கேள்விகளுக்கு மேல் யாரும் பதில் தர வரவில்லை.
Sin of Khalwa, லாய்லாஹ் … இப்படியாகச் சில விஷயங்களைப் பற்றிக் கேட்டேன்.இதுவரை பதிலில்லை//

தருமி ஐயா அவர்களுக்கும் எனக்கும் இடையே அவரது தளத்தில் நடந்த உரையாடல்...
http://dharumi.blogspot.com/2009/09/blog-post.html


நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

கையேடு said...

First i apologize to Mr.Sri for continuing here and for typing in english too.

//சகோதரர் ரஞ்சித் அவர்களுடனான உரையாடல்,
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories.html//

I am still awaiting to see some answers.

1.On what basis Hoyle arrived at his numbers? on which, the article and Hoyle's narrations are built.

He started with some figures from particle physics and claims something for bio-chemical reactions. My question and curiosity is centred right there?
Hope our friend Aashiq will explain his understanding in detail.

Looks like that cosmologist already did a grand unification of all.. :))

Hoyle has his own rights to have opinions, but its worth to speak based on his scientific arguments than his opinions and articles based on Hoyle's comments from wikipedia.

2.My next question in feedback.

//Nature can create patterns but not the informations//

இதை முடிவான உண்மையாகக் கூறுகிறீர்களா அல்லது அறிவியல் இப்படி தீர்மானமாக அறிவித்துவிட்டதா.

Moreover, i felt the whole blog of ethirkural was highly prejudiced. The best thing for me was to use my right to ignore and proceed on my own.

Aashiq Ahamed said...

Dear brother Ranjith,

Assalaamu Alaikum,

I am totally disappointed with your comment here. I have given the link of our discussion here and that is not to tell who is better and who is not. I simply gave the link and let the readers decide on their own.

//Moreover, i felt the whole blog of ethirkural was highly prejudiced//.

We know each other for some time now. If you feel my blog is prejudiced, what stopped you from telling me that? atleast you could have informed me that through mail. isn't it?

You came to a third blog and telling the readers that "ethirkkural is highly prejudiced". Does this seem fair to you?

So, I strongly condemn your statement and I sincerely request you to explain me in what way you are prejudiced....

Thanks and take care,

Your brother,
Aashiq Ahamed A

தருமி said...

ashiq ahamed,
i would not call your posts prejudiced as kaiyedu said.
it is a little bit more than that - just seeing one side of the argument alone; for instance:

பரிணாமம் உண்மையான அறிவியல் என்பதற்கு taxonomy, fossils, anatomy, vestigial organs, bio geography, paleontology, genetics, time scales என்று வண்டி வண்டியாக சான்றுகள் குவிந்திருக்கின்றன. ஆனால் உங்களுக்கு இதெல்லாமே "வெறும் கட்டுக் கதைகள்"!!

ஆனால் தனி மனிதன் ஒருவர் குகைக்குள் சென்று திரும்பி வந்து "கடவுள் என்னோடு பேசினார்; கட்டளை கொடுத்தார்" என்பதுவும், அதிலும் (ஒரு சின்ன உதாரணமாக..) எல்லோரும் நாலு மனைவிகள் கட்டிக் கொள்ளலாம்; ஆனால் எனக்கு மட்டும் பத்தோ பதினொன்றோ என்று சொல்வதெல்லாம் அப்படியே "முழு உண்மை" என்கிறீர்களே .. இப்படி பேசுபவர்களை எப்படி அழைப்பது?

தருமி said...

பி.ஏ.ஷேக் தாவூத்

//நீங்கள் ஒன்றிரண்டு பின்னூட்டங்களை போட்டு விட்டு மறந்தோ அல்லது மறைந்தோ போய் விடுவீர்கள். எங்கேயாவது முழுமையாக உரையாடியிருக்கிரீர்களா?//

நானும் அறிந்து கொள்வதற்காக இதையே உங்களிடமும் கேட்கிறேன், பி.ஏ.ஷேக் தாவூத்.

தருமி said...

Aashiq Ahamed

குரான் அறிவியலைத் தருகிறது என்பதற்கி நிறைய சான்றுகள் தர முயற்சிக்கிறீர்கள். அதுபோல் குரான் கடவுளால் முகமதுவிற்குத் தரப்பட்டது என்பதற்கான சான்றுகள் என்ன?

தெரிந்து கொள்ள ஆசை.

தருமி said...

ஷேக் தாவூத்
இங்கேயுள்ள பின்னூட்டங்களைப் பாருங்கள். உங்களிடமேனும் பதில் இருந்தால் தாருங்கள்.

இப்போதைக்கு கேள்விகள் போதுமென நினைக்கிறேன். தேவையானால் சொல்லுங்கள்.

(பரிணாமக்காரர்கள் நீங்கள் சொல்வது போல் "ஓடுவதே" இல்லை)

தருமி said...

//ashiq ahamed,
i would not call your posts prejudiced as kaiyedu said.
it is a little bit more than that - just seeing one side of the argument alone; for instance: //

இப்படி சொல்லிவிட்டு இரு கேள்விகளும் கேட்டிருரிக்கேனே ..

வால்பையன் said...

//(பரிணாமக்காரர்கள் நீங்கள் சொல்வது போல் "ஓடுவதே" இல்லை) //

பரிணாமம் என்ற வார்த்தையே முதலில் முதவாதிகளுக்கு சொந்தமானது இல்லை!

எதையும் அதைற்கு முன்னர் என்ன என்று கேட்பதே பகுத்தறிவு! அப்படினா என்னான்னு கேட்பது மத அறிவு!

தருமி said...

பி.ஏ.ஷேக் தாவூத்,
"வழக்கம் போலவே" உங்கள் பதில்களுக்காகக் காத்திருக்கிறேன்.

ஏன் வழக்கம்போல என்று சொன்னேன் என்றால் நம்பிக்கையாளர்கள் பல நேரங்களில் பதில் சொன்னாமல் சென்றதற்கான லிஸ்ட் என்னிடம் நீளமாக ஒன்றிருக்கிறது.

Aashiq Ahamed said...

ஐயா தருமி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்...

//பரிணாமம் உண்மையான அறிவியல் என்பதற்கு taxonomy, fossils, anatomy, vestigial organs, bio geography, paleontology, genetics, time scales என்று வண்டி வண்டியாக சான்றுகள் குவிந்திருக்கின்றன. ஆனால் உங்களுக்கு இதெல்லாமே "வெறும் கட்டுக் கதைகள்"!!//


ஐயா, பரிணாமத்தை ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கின்றேன் என்பதை என்னுடைய தொடர் பதிவுகள் மூலமாக விளக்கி கொண்டுதான் வருகின்றேன். என்னுடைய பதிவுகளில் உள்ள பெரும்பாலான referenceகள் நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ அந்த அறிவியலாளர்கள் மற்றும் ஆய்விதழ்களில் இருந்து எடுக்கப்பட்டதே. நான் ஒன்றும் just like that சொல்லி சென்றுவிடவில்லை. அனைத்திற்கும் தெளிவான ஆதாரங்களை கொடுத்திருக்கின்றேன். என்னுடைய பதிவுகள் தவறென்றால் தயவுக்கூர்ந்து நான் கொடுத்த அந்த ஆதாரங்களில் என்ன தவறு என்றாவது சொல்லுங்கள். இல்லையென்றால் "இவர்கள் சும்மா இப்படித்தான் சொல்லுவார்கள்" என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருங்கள். ஒரு உபயோகமும் இருக்க போவதில்லை.

என்னுடைய பதிவுகளின் சுட்டியை இங்கு கொடுத்திருக்கின்றேன். படிப்பவர்கள் அவர்களாக முடிவெடுத்து கொள்ளட்டும், என்னுடைய வாதங்களில் அர்த்தம் இருக்கின்றதா இல்லையா என்று....

பரிணாமம் பொய்யான, அறிவியலே அல்லாத ஒரு கண்கட்டி வித்தை என்பதற்கு taxonomy, fossils, anatomy, vestigial organs, bio geography, paleontology, genetics, time scales என்று வண்டி வண்டியாக சான்றுகள் குவிந்திருக்கின்றன. இது தான் உண்மை.

Aashiq Ahamed said...

@தருமி ஐயா...

//ஆனால் தனி மனிதன் ஒருவர் குகைக்குள் சென்று திரும்பி வந்து "கடவுள் என்னோடு பேசினார்; கட்டளை கொடுத்தார்" என்பதுவும், அதிலும் (ஒரு சின்ன உதாரணமாக..) எல்லோரும் நாலு மனைவிகள் கட்டிக் கொள்ளலாம்; ஆனால் எனக்கு மட்டும் பத்தோ பதினொன்றோ என்று சொல்வதெல்லாம் அப்படியே "முழு உண்மை" என்கிறீர்களே .. இப்படி பேசுபவர்களை எப்படி அழைப்பது?//

//குரான் அறிவியலைத் தருகிறது என்பதற்கி நிறைய சான்றுகள் தர முயற்சிக்கிறீர்கள். அதுபோல் குரான் கடவுளால் முகமதுவிற்குத் தரப்பட்டது என்பதற்கான சான்றுகள் என்ன?//

ஐயா, தயவுக்கூர்ந்து முதலில் குரானை திறந்த மனதோடு முழுமையாக படித்து விட்டு வாருங்கள். நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு அதில் பதில் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.

எனக்கும் உங்களுக்கும் இடையே நடந்த உரையாடலின் சுட்டியை மறுபடியும் இங்கே கொடுக்கின்றேன்.

http://dharumi.blogspot.com/2009/09/blog-post.html

படிப்பவர்கள் பார்வைக்கே விட்டு விடுவோம்.

//(பரிணாமக்காரர்கள் நீங்கள் சொல்வது போல் "ஓடுவதே" இல்லை)//

இது என்ன புது கதையாக இருக்கின்றது. என்னுடைய பதிவுகளிலேயே இதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றனவே...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர்களே,
(இந்த பின்னூட்டம் ஆஷிக் தளத்தினிலும் இட்டிருக்கிறேன்.)
////தருமி said...
ஷேக் தாவூத்,
//நமது உள்ளூர் பரிணாமவியலாலர்களிட்த்தில் நீங்கள் முன்வைத்த கேள்விகள் கூட பதில்கள் இல்லாமல் பரணில் தூங்கி கொண்டிருக்கின்றன.//
a good bugle!! எப்பவுமே இப்படித்தானா ஷேக் தாவூத்?
உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லி நானும் கேள்வி கேட்டு 'அங்கன' காத்திருக்கிறேன். நீங்க இங்க என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கீங்க!!////
யார் விவாதத்தை விட்டு விலகி ஓடியவர்கள் என்பதை இந்த சுட்டியில் சென்று கருத்துக்களை படித்து மற்றவர்களே முடிவு செய்யட்டும்.
http://ethirkkural.blogspot.com/2010/07/evolution-stheory-harry-potter-stories_19.html

எப்போதும் போல பேசுபொருளை விட்டே விலகி இந்த பதிவிலும் கருத்து சொல்லுகின்றீர்களே அய்யா? ஒருவேளை பரிணாமவியலை நிருபிக்க தான் இப்படி "தாவித்தாவி" பேசுகிறீர்களா?

மற்றபடி இல்லை நாங்கள் (நாத்திகர்கள்) எதற்குமே அஞ்சாமல் அறிவியல்பூர்வமாக பரிணாமவியலை நிருபிப்போம் என்று சொன்னீர்களேயானால் தயவுசெய்து ஆஷிக் தளத்திலும் கார்பன் கூட்டாளி தளத்திலும் உங்களுக்கு நிறைய கேள்விகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லுங்கள். இதை முடித்து விட்டு குர்ஆன் இறைவேதமா அண்ட் முஹம்மத் நபி இறைதூதரா என்ற விவாதத்திற்கு செல்லுங்கள். முதலில் பரிணாமம் உண்மை என்பதை நிருபியுங்கள்.

G u l a m said...

நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
பரிணாமம் - கடவுள் குறித்த சகோதரர்களின் நேர்மறை / எதிர்மறை கருத்துக்கள் இங்கு பரிமாறப்படுகின்றன., இவ்வுலகத்திற்கு கடவுள் வேண்டாம் என்று சொல்லக்கூடிய சகோதரர்கள் கடவுள் கூறும் கோட்பாடுகளை விட மிக தெளிவான பொதுவான நடைமுறை சாத்தியக்கூறுகள் நிறைந்த சட்ட்ங்களை இவ்வுலகத்திற்கு தரவேண்டும் அஃது எல்லா தரப்பு மக்களுக்கும் பொதுவான நீதியை ஏற்படுத்த கடவுள் தேவையில்லை மனித கரங்களே போதும் என்று யாரும் வாதிட்டால்...என்னின் சில ஐயங்களுக்கு பதில் தாருங்கள்
கேள்விகள் இங்கே
http://iraiadimai.blogspot.com/2010/08/blog-post_15.html

http://iraiadimai.blogspot.com/2010/08/blog-post_09.html

Unknown said...

//எதையும் அதைற்கு முன்னர் என்ன என்று கேட்பதே பகுத்தறிவு! அப்படினா என்னான்னு கேட்பது மத அறிவு!//

நண்பர்கள் வால் பையன், தருமி மற்றும் சில கண்மூடி தனமாக பரிணாமத்தில் நம்பிக்கை வைக்கும் தோழர்கள்.

பரிணாமத்தில் இன்னும் நம்பிக்கை வைத்திருந்தால் பரிணாமம் பற்றிய நாம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தருவதே சிறந்தது, அதை விடுத்து வார்த்தை விளையாட்டில் அர்த்தம் இல்லை.

Unknown said...

//பரிணாமம் உண்மையான அறிவியல் என்பதற்கு taxonomy, fossils, anatomy, vestigial organs, bio geography, paleontology, genetics, time scales என்று வண்டி வண்டியாக சான்றுகள் குவிந்திருக்கின்றன. ஆனால் உங்களுக்கு இதெல்லாமே "வெறும் கட்டுக் கதைகள்"!!//

வண்டி வண்டியாக சான்றுகள் உள்ளன பரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதற்கு.

அதிக அளவில் கேள்விகள் தேங்கி இருக்கும் நிலையிலும் வாய் கூசாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பரிணாமம் என்பது சரி என வாதிட உங்களுக்கு எப்படி மனம் வருகிறது.

பகுத்தறிவாளர்கள் என்று தங்களை அழைத்து கொள்வோரும் கேள்விகளுக்கு பதில் இல்லையெனிலும் அதை மறைப்பது எப்படி என்பதிலயே தங்களின் கவனத்தை செலுத்து கின்றனர். அதை விடுத்து பரிணாம கொள்கையிளுருந்து வெளியே வாருங்கள் உண்மையான பகுத்தறிவாளர்களாக மாறலாம்.

தருமி said...

//பரிணாம கொள்கையிளுருந்து வெளியே வாருங்கள் உண்மையான பகுத்தறிவாளர்களாக மாறலாம்.

உங்களைப் போல ....

Santhini said...

மதங்கள் என்பவை என்ன ?
மனிதன் தோன்றிய காலம் தொட்டு சுமந்த கருத்துருவாக்கங்களும், பண்பாட்டு பழக்க வழக்கங்களும் தொகுக்கப்பட்ட நிறுவனங்கள்.

எது கடவுள் ?
கடவுள் என்பது உயிர் கொண்ட பேருயிரா ? "தான்" எனும் உணர்வு நிலை கொண்ட பிரபஞ்சம் எனும் உடல் சுமக்கும் பேரறிவா ?

பரிணாமம் என்பது என்ன ?
மனிதன் தான் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்ற "மூலம்" அறிதலின் தேடல். உயிரின் மூலத்தை அறிவது என்பது, மதங்களில் சொல்லப்படும்,
கடவுள் உயிரை உருவாக்கினான் என்கிற கருத்தை மறுதலிக்க உதவுமே அன்றி, கடவுள் இல்லை என்ற கருத்தை மறுதலிக்க உதவாது. இது போன்ற கருத்துருவாக்கங்கள் பல்லாயிரம் மலிந்து கிடக்கின்றன எல்லா மதங்களிலும்.

என் புரிதலில் மதங்கள் கடவுள் என்ற தனித்த உயிர் குறித்து பேசவில்லை. உருவ வழிபாடும், வெவ்வேறு பூகோள அமைப்பில் வாழ நேர்ந்த மனித நம்பிக்கைகளும் தொகுக்கப் பட்ட போது கடவுள் தனித்த உயிராக வடிவம் கொண்டு விட்டது.

எது இருக்கிறதோ அது இருக்கிறது
எது உருவானதோ அது உருவானது
எது அழிகிறதோ அது அழிகிறது
பொருள்கள் பகுக்கப்படும் துகள்களாக ...(Quantum physics for more info) .
எண்ணங்கள் பயணிக்கும் அலைகளாக
பார்க்க முடிந்தவை முடியாதவை
கேட்க முடிந்தவை முடியாதவை
உணர முடிந்தவை முடியாதவை
அளக்க முடிந்தவை முடியாதவை

வெப்பமாய், சக்தியாய், மின் காந்த அலைகளாய், கேட்கும் சத்தமாய், கேட்கா ஒலியாய், ஒளியாய், மண்ணாய், தனிமமாய் ......வேதிப்பொருளாய், அதில்
இயங்கும் உயிராய், எண்ணமாய்.....பிரபஞ்சம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

எது இருக்கிறதோ
எது உருவாகிறதோ
எது அழிகிறதோ
அது தன்னை வெளிப் படுத்திக் கொள்கிறது.
அது மனிதனின் எண்ணங்களில் வெளிப்படுகிறது.

"எது இருக்கிறதோ" "அது" கடவுள் என்ற பெயரில் அழைக்கப் பட்டது.
"எது இருக்கிறதோ" " அதை" அறிகிற ஆவலில் அறிவியல் அறிய முனைகிறது.
இருப்பது, இருப்பது, அறிவதும் இருப்பது .
இருப்பது கடவுளெனில்.
அறிவதும் கடவுளே.
அறிவது அறிவியல் எனில்
கடவுளும் அறிவதே.

Santhini said...

மதங்கள் என்பவை என்ன ?
மனிதன் தோன்றிய காலம் தொட்டு சுமந்த கருத்துருவாக்கங்களும், பண்பாட்டு பழக்க வழக்கங்களும் தொகுக்கப்பட்ட நிறுவனங்கள்.

எது கடவுள் ?
கடவுள் என்பது உயிர் கொண்ட பேருயிரா ? "தான்" எனும் உணர்வு நிலை கொண்ட பிரபஞ்சம் எனும் உடல் சுமக்கும் பேரறிவா ?

பரிணாமம் என்பது என்ன ?
மனிதன் தான் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்ற "மூலம்" அறிதலின் தேடல். உயிரின் மூலத்தை அறிவது என்பது, மதங்களில் சொல்லப்படும்,
கடவுள் உயிரை உருவாக்கினான் என்கிற கருத்தை மறுதலிக்க உதவுமே அன்றி, கடவுள் இல்லை என்ற கருத்தை மறுதலிக்க உதவாது. இது போன்ற கருத்துருவாக்கங்கள் பல்லாயிரம் மலிந்து கிடக்கின்றன எல்லா மதங்களிலும்.

என் புரிதலில் மதங்கள் கடவுள் என்ற தனித்த உயிர் குறித்து பேசவில்லை. உருவ வழிபாடும், வெவ்வேறு பூகோள அமைப்பில் வாழ நேர்ந்த மனித நம்பிக்கைகளும் தொகுக்கப் பட்ட போது கடவுள் தனித்த உயிராக வடிவம் கொண்டு விட்டது.

எது இருக்கிறதோ அது இருக்கிறது
எது உருவானதோ அது உருவானது
எது அழிகிறதோ அது அழிகிறது
பொருள்கள் பகுக்கப்படும் துகள்களாக ...(Quantum physics for more info) .
எண்ணங்கள் பயணிக்கும் அலைகளாக
பார்க்க முடிந்தவை முடியாதவை
கேட்க முடிந்தவை முடியாதவை
உணர முடிந்தவை முடியாதவை
அளக்க முடிந்தவை முடியாதவை

வெப்பமாய், சக்தியாய், மின் காந்த அலைகளாய், கேட்கும் சத்தமாய், கேட்கா ஒலியாய், ஒளியாய், மண்ணாய், தனிமமாய் ......வேதிப்பொருளாய், அதில்
இயங்கும் உயிராய், எண்ணமாய்.....பிரபஞ்சம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது

Santhini said...

Sorry ...repeated due to error.