Tuesday, December 7, 2010

சங்கமம் 2010 – தயாராகுங்கள்!!!!

நண்பர்களே,

ஈரோடு நண்பர்களின் சங்கமம் நிகழ்ச்சி சென்ற வருடம் போலவே இந்த வருடமும் நடக்க இருக்கிறது.நான் மதுரை நண்பர்களுடன் வருவதாக இருக்கிறேன் . நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.நண்பர்களின் பதிவு .......



இப்பொழுதுதான் கைகள் பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றதுபோல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம்தணிந்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்றுஉருண்டோடியிருக்கிறது.சென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடுஇன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில்முன்னெடுக்க விரும்புகிறோம்.
வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும்ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப்பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் எனஅனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராகஇருக்கிறோம்
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்.நிகழ்ச்சியில்…
நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும்
எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்.

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் எனவிடை கொடுக்க திட்டமிடுகிறோம்.உங்கள் வருகையே எங்களின் வெற்றி!இந்தசங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாகஎழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாகநடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடுஅழைக்கிறேன்.அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாககருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்எங்கள் கொங்கு மண்ணுக்குரியமணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...


விபரங்களுக்கு….
கதிர் 99653-90054
பாலாசி 90037-05598

கார்த்திக் 97881-33555
ஆரூரன் 98947-17185
வால்பையன் 99945-00540

ராஜாஜெய்சிங் 95785-88925

சங்கமேஸ் 98429-10707
ஜாபர் 98658-39393
நண்டு நொரண்டு 94861-35426
மற்றும்குழும மின்னஞ்சல் erodetamizh@gmail.com

நன்றி ஈரோடு கதிர்.