Friday, October 22, 2010

கடவுள் தத்துவம் Vs அறிவியல்-ஒரு விளக்கம்

நண்பர்களே,
சென்ற பதிவில் நான் சொல்ல வந்த கருத்து சரியாகச் சொல்லப்படவில்லை என்றே நினைக்கிறேன்.காரணம் அதற்கு வந்த மறுமொழிகள்.கண்டிப்பாக ,கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற வாதமில்லை அது.முதலில் நான் ஆத்திகன் அல்ல என்பதை சொல்லிக் கொள்கிறேன்.அதற்காக நாத்திகனா என்றால் அதுவும் இல்லை.என்னுடைய கடவுள் தத்துவம் என்பது தனிப்பட்டது.எந்த வழிபாட்டு முறைகளிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.ஓஷோ சொன்னபடி "உங்கள் பிரார்த்தனைகளை யாரும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை" என்பதை நம்புகிறேன்.

கடவுள் தத்துவம் -அறிவியல் என்று தலைப்பு வைத்ததற்குக் காரணம் அறிவியல் மூலமாக நாத்திகத்தை நிறுவும் முயற்சி சரியாக வருமா என்பதுதான் என் அடிப்படைக் கேள்வி.ஏனெனில் அறிவியல் எல்லாக் கேள்விகளுக்கும் விடை தராது என்பதுதான் நான் சொல்ல விரும்புவது.ஒவ்வொரு அறிவியல் விளக்கங்களிலும் ஏதேனும் ஒரு இடத்தில் கடவுளை நுழைத்து விட முடியும் என்று நான் நினைக்கிறேன்.

தத்துவமாக உள்ள இந்த கடவுள் நம்பிக்கையை உறுதிப் படுத்திக் கொள்ள ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் (கடவுளை நம்புகிற) வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு சம்பவம் இருக்கத்தான் செய்கிறது.அதை நாத்திகர்கள் தற்செயல் என்றால் ஆத்திகர்கள் கடவுள் செயல் என்கிறார்கள். அறிவியல் எல்லா விஷயங்களுக்கும் விளக்கம் தருமா? எனவேதான் கடவுள் மறுப்புக்கு அறிவியல் சரியான கருவி இல்லை என்று நினைக்கிறேன்.

தத்துவங்களை அறிவியல் முறியடித்ததே இல்லையா என்ன?என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது.உதாரணமாக பூமி உருண்டை என்ற விஷயத்தை அறிவியல் வெளிப்படுத்தியது.ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் இங்கே பூமி என்பது கண்ணால் காணக் கூடிய உணரக் கூடிய ஒரு பொருள்.எனவே அது சாத்தியமானது.ஆனால் கடவுள்? கண்ணால் பார்க்க முடியாத ஒரு விஷயம் கடவுள் என்பது மனிதர்களின் நம்பிக்கை.இந்த நம்பிக்கையை பருப்பொருள்களை மட்டும் ஆராய்கிற அறிவியல் துணை கொண்டு முறியடிக்க முடியுமா என்பதுதான் என் கேள்வி.இம்முறை கேள்வியை சரியாகக் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.தொடர்ந்து பேசுவோம்.
20 comments:

கையேடு said...

//நம்பிக்கையை பருப்பொருள்களை மட்டும் ஆராய்கிற அறிவியல் துணை கொண்டு முறியடிக்க முடியுமா என்பதுதான் என் கேள்வி//

ஒப்புக்கொள்கிறேன், ஆனால், நம்பிக்கையை அறிவியல் என்றில்லை எதைக் கொண்டும் பொய்யாக்க முடியாது. அது நம்புகிறவரின் தீவிரத்தைப் பொறுத்தது.

அறிவியல் ஒரு திறந்த சிந்தனைத் தொகுப்பு, அத்தொகுப்பில் பலவற்றுக்கு விடை இல்லை, ஆனால் அந்த வெற்றிடத்தை வெற்றிடமாகவே வைத்திருக்கிறது அறிவியல்.

அறிவியலில் பதில் இல்லை என்றால் அவ்விடத்தில் நீங்களும், நானும், மற்றவரும் சிந்தித்து உழைத்து, பதிலை நிரப்ப வேண்டும். அது நமது அறிதல் தீவிரத்தையும் போதையையும் பொறுத்தது.

வால்பையன் said...

பூமி தட்டையானது என்ற பழம் மூட நம்பிக்கையை போன்றது தான் நண்பா, கடவுள் நம்பிக்கையும், அறிவியல் நிச்சயம் நிருப்பிக்கும் கடவுள் என்ற தேவை உலகுக்கு இல்லை என்று!

ராஜ ராஜ ராஜன் said...

நாத்திகமும் ஒரு வாழ்க்கை முறையே...!

விரைவில் வலுப்பெறும் அம்முறை...!

தருமி said...

இறை மறுப்பு என்பதும் பக்தி போல் ஒரு தனிமனித உணர்வே. யாரும் சொல்லி நான் நாத்திகனாகவில்லை. என் எண்ணங்கள், உணர்வுகள் - இவைகளோடு அறிவியலை இணைத்து என் கேள்விகளுக்கு நான் பதில் அளித்துக் கொண்டு ... நாத்திகனானேன்.இது சுய சிந்தனையின் முடிவு. ஆனால் இந்த முடிவுக்கு யாரையும் நான் இழுக்க முடியாது. அதற்கு அறிவியல் மட்டுமல்ல வேறெதுவுமே துணை வராது.

தருமி said...

for follow-up comments

தருமி said...

பல ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆங்கில sci-fi புதினம் வாசித்தேன். வேறு ஒரு galaxy-யில் இருந்து ஒரு செய்தி வரும். அதனை இங்கே உள்ளவர்கள் 'கடவுளிடமிருந்து வந்த தேவதூதனின்' வார்த்தைகள் என்று சொல்லி அதையும் கும்பிட ஆரம்பித்து விடுவார்கள்!

♠ ராஜு ♠ said...

ரைட்டு.. நடக்கட்டும்.

ஊர்சுற்றி said...

இது தங்களின் முந்தைய இடுகையில் தெரிவிக்கப்பட்ட பின்வரும் வரிகளுக்கான பின்னூட்டம். விவாதம் இங்கே தொடர்வதால் இங்கே இடுகிறேன்.
//அறிவியலால் புது உயிரிகளை உண்டாக்க முடிகிறதுதான், ஆனால் அதற்கும் இயற்கையில் இருந்து ஒரு செல் வேண்டும்.இல்லை கிராஸ் பாலினேஷனா? மலடாக இருக்கும்.அதில்தான் இறைவனின் கைங்கர்யம் அடங்கியுள்ளது என்பார்கள்.//

பின்வரும் தொடுப்புகளைப் படியுங்கள்.
உயிர்களின் மூலகாரணியான 'Genome' ஐ, முற்றிலும் செயற்கையாக கணிணி மூலம் வடிவமைத்து தயாரித்துவிட்டார்கள். அது வெற்று செல்லில் தன்னை பிரதியெடுக்கத் தொடங்கிவிட்டது.
http://www.wired.com/wiredscience/2010/05/scientists-create-first-self-replicating-synthetic-life/

http://www.newstatesman.com/blogs/the-staggers/2010/05/intelligent-design-life

http://timesofindia.indiatimes.com/world/us/Man-plays-creator-Scientists-create-artificial-life-in-US-lab/articleshow/5960128.cms

http://santafegreenline.ning.com/profiles/blogs/has-man-created-life

ஜீனோம் எப்படியென்றால். ஒவ்வொரு செல்லினுள்ளும் இருக்கும் உயிர். செல் ஒரு உறை என்றால், உள்ளிருக்கும் உயிர்தான் இந்த ஜீனோம். இந்த ஜீனோமை கணிணி மூலம் வடிவமைத்து, எவ்வித இயற்கை DNA இல்லாமல், முற்றிலும் கெமிக்கல் மூலம் செய்து, அவற்றை ஒருங்கிணைத்து, ஒரு செல்லிற்குள் செலுத்த அது உயிருள்ள செல்லாக தன்னைப் பிரதியெடுக்கிறது.
-இதற்கும் ஒரு செல் தேவையாயிருக்கிறதே என்று கேட்பீர்கள். ஆனால், இங்கு செல்லின் சுவர்தான் தேவையாயிருக்கிறது(வாடகை கருப்பை போல). இதையும் மனிதனே வடிவமைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.....

..... விவாதிப்போம்.

ஊர்சுற்றி said...

இது தங்களின் முந்தைய இடுகையில் தெரிவிக்கப்பட்ட பின்வரும் வரிகளுக்கான பின்னூட்டம். விவாதம் இங்கே தொடர்வதால் இங்கே இடுகிறேன்.
//அறிவியலால் புது உயிரிகளை உண்டாக்க முடிகிறதுதான், ஆனால் அதற்கும் இயற்கையில் இருந்து ஒரு செல் வேண்டும்.இல்லை கிராஸ் பாலினேஷனா? மலடாக இருக்கும்.அதில்தான் இறைவனின் கைங்கர்யம் அடங்கியுள்ளது என்பார்கள்.//

பின்வரும் தொடுப்புகளைப் படியுங்கள்.
உயிர்களின் மூலகாரணியான 'Genome' ஐ, முற்றிலும் செயற்கையாக கணிணி மூலம் வடிவமைத்து தயாரித்துவிட்டார்கள். அது வெற்று செல்லில் தன்னை பிரதியெடுக்கத் தொடங்கிவிட்டது.
http://www.wired.com/wiredscience/2010/05/scientists-create-first-self-replicating-synthetic-life/

http://www.newstatesman.com/blogs/the-staggers/2010/05/intelligent-design-life

http://timesofindia.indiatimes.com/world/us/Man-plays-creator-Scientists-create-artificial-life-in-US-lab/articleshow/5960128.cms

http://santafegreenline.ning.com/profiles/blogs/has-man-created-life

ஊர்சுற்றி said...

ஜீனோம் எப்படியென்றால். ஒவ்வொரு செல்லினுள்ளும் இருக்கும் உயிர். செல் ஒரு உறை என்றால், உள்ளிருக்கும் உயிர்தான் இந்த ஜீனோம். இந்த ஜீனோமை கணிணி மூலம் வடிவமைத்து, எவ்வித இயற்கை DNA இல்லாமல், முற்றிலும் கெமிக்கல் மூலம் செய்து, அவற்றை ஒருங்கிணைத்து, ஒரு செல்லிற்குள் செலுத்த அது உயிருள்ள செல்லாக தன்னைப் பிரதியெடுக்கிறது.
-இதற்கும் ஒரு செல் தேவையாயிருக்கிறதே என்று கேட்பீர்கள். ஆனால், இங்கு செல்லின் சுவர்தான் தேவையாயிருக்கிறது(வாடகை கருப்பை போல). இதையும் மனிதனே வடிவமைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.....

..... விவாதிப்போம்.

Aashiq Ahamed said...

சகோதரர் ஊர்சுற்றி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

செயற்கை செல் குறித்த என்னுடைய பதிவை படித்து விட்டு, உங்களுடைய கருத்தை சொல்லவும்...

http://ethirkkural.blogspot.com/2010/08/synthetic-cell.html

//இதையும் மனிதனே வடிவமைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.....//

இதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்பது என்னுடைய கருத்து. ஏனென்றால் இது குறித்த தெளிவான புரிதல் அறிவியலாளர்களிடம் இல்லை..

ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள்.

"வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது" - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

தருமி said...

மற்ற மதத்தினருக்கு இருப்பதைவிட இஸ்லாமியருக்கு - பாவம் - ஒரு எக்ஸ்ட்ரா கடமை. அவர்கள் குரானில் இருப்பது எல்லாம் அறிவியல் என்று பிரகடனப் படுத்தியாயிற்று. அதில் எந்த குறை சொல்லி நீங்கள் சான்றுகள் கொடுத்தாலும் அதில் ஒன்றைக்கூட ஒத்துக் கொண்டாலும் முழுவதும் டொமினோ எஃபெக்ட்தான்.

விந்து சர்ச்சையில் அதுதான். அடுத்து extinct பிராணிகளின் fossils disprove special creation என்று சொல்லியாயிற்று.special creation நடந்திருந்தால் fossils இருக்க முடியாது என்றும் சொல்லியாயிற்று.

ம்ம்ம்...ம்..

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

//விந்து சர்ச்சையில் அதுதான். அடுத்து extinct பிராணிகளின் fossils disprove special creation என்று சொல்லியாயிற்று.special creation நடந்திருந்தால் fossils இருக்க முடியாது என்றும் சொல்லியாயிற்று//

special creation நடந்திருந்தால் fossils "ஏன்" இருக்க முடியாது? என்றும் கேட்டாச்சு.....

ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
http://ethirkkural.blogspot.com/

ஊர்சுற்றி said...

Aashiq Ahamed,
மிகச்சிறந்த கட்டுரை. அருமையாக எழுதியுள்ளீர்கள்.

நெருப்பு மூட்டுவதற்குக் கூடத் தெரியாத குரங்கு இனமாகத்தான் இருந்தது மனித இனம். இவ்வளவு தூரம் வந்துவிட்டார்கள். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவாவது, இதையெல்லாம் பகுத்து அறிந்துவிடுவார்கள்.
மற்றபடி, மனிதன் தன் சொந்த முயற்சியினாலேயே முன்னேறிக்கொண்டிருக்கிறான், தெளிந்து அறிந்துகொண்டிருக்கிறான் என்பதோடு, 'கடவுள் சோதனைக்குழாயை ஆசீர்வதித்து என்னிடம் கொடுத்து இந்த ஆராய்ச்சியை நடத்தச் சொன்னார், அதற்கான அறிவையும் எந்திரனுக்கு வழங்கியதுபோல் வழங்கினார்' என்று எந்த ஆகச்சிறந்த ஆராய்ச்சியாளரும் சொல்வதுஇல்லை.

ஊர்சுற்றி said...

மேலும்,
கடவுள் இருப்பதாகவே மேற்படி ஆராய்ச்சி நிரூபிப்பதானாலும், அது எத்தகைய கடவுள்? யாருக்கான கடவுள்?
ஆராய்ச்சியை நடத்துபவர் கிறிஸ்துவேதான் கடவுள் அவர்தான் இதைச் செய்யச் சொன்னார் என்றால் ஏற்றுக்கொள்ளுமா இந்த உலகம்?
அப்படியெனில்,
நாளைக்கே இன்னொரு இந்து மதத்தைச் சேர்ந்த சகோதரர், இதுபோன்ற மற்றொரு ஆராய்ச்சியில் வெற்றியடைந்து 'கிருஷ்ண பரமாத்வாவே, ஆராய்ச்சிக்கூடத்தில் அமர்ந்து ஆராய்ச்சிக்கு உதவினார்' என்று சொன்னாலும் நம்பித்தானே ஆகவேண்டும்?

இல்லை எல்லோருக்கும் பொதுவிலான ஒரு கடவுள் என்றால், ஏற்கெனவே பூமியில் ஆயிரக்கணக்கான கடவுள்கள் பெயரில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அத்தகைய கடவுள் என்கிற வஸ்து இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

இதைவிட்டுவிட்டு, செல்லுக்கும் அதினுள்ளிருக்கும் உயிருக்கும் விளக்கம் கொடுப்பது எந்தப் பிரயோஜனமும் இல்லாத செயல் என்றே எனக்குப் படுகிறது. ஸ்ரீ அவர்களின் கட்டுரையில் இடம்பெற்ற சில வரிகளுக்காகவே நான் அந்த செல் ஆராய்ச்சிபற்றிப் பேசவேண்டியதாயிற்று.

தருமி said...

//special creation நடந்திருந்தால் fossils "ஏன்" இருக்க முடியாது? என்றும் கேட்டாச்சு.....//

கர்த்தாவே! காப்பாத்தப்பா!!

ஆஷிக்,
Fossils of dinosaurs – எல்லோருக்கும் தெரிந்த இவைகளை எடுத்துக் கொள்வோம். special creation-ல் அல்லா இவைகளைப் படைத்தார். ஆனால் ஏன் அவைகள் இப்போது இல்லாமல் போனது. ஏன் அப்படி ஆனது? தகவமைப்பு சரியில்லை என்கிறார்கள். எந்த ஒரு உயிரினமும் extinct ஆவதற்கு பல காரணங்களில் ஏதோ ஒன்று உள்ளது. அல்லா ஏன் அப்படி அழிந்துபோகும் ஒரு உயிரினத்தைப் படைத்து, அவைகள் அழிந்துபோவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

Aashiq Ahamed said...

சகோதரர் ஊர்சுற்றி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//மிகச்சிறந்த கட்டுரை. அருமையாக எழுதியுள்ளீர்கள்//

நன்றி, புகழனைத்தும் இறைவனிற்கே...

குரங்கிலிருந்து மனிதன்???? நிரூபிக்கப்படாத வாதங்கள். இதிலும் பல குழப்பங்கள் உள்ளன. பரிணாமத்தை நன்றாக ஆய்வு செய்து பாருங்கள், உங்களுக்கு புரியும்.

உங்களுடைய மற்ற கருத்துக்களுக்கான என்னுடைய பதில் இதுதான். தாங்கள் ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதோடு படித்து பார்க்க முன்வருவீர்களா? உங்கள் கருத்துகளுக்கு பதில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் தான் கேட்கின்றேன்.

தங்களுக்கு அப்படி விருப்பமிருந்தால் aashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். குரான் தமிழ் மொழிபெயர்ப்பு softcopy அனுப்புகின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

கார்பன் கூட்டாளி said...

//இல்லை எல்லோருக்கும் பொதுவிலான ஒரு கடவுள் என்றால், ஏற்கெனவே பூமியில் ஆயிரக்கணக்கான கடவுள்கள் பெயரில் நடக்கும் அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அத்தகைய கடவுள் என்கிற வஸ்து இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?//

ஆயிரகணக்கான கடவுளை மனிதன் உருவாக்கியதற்கு கடவுள் மேல் குற்றமா அல்லது மனிதன் மேல் குற்றமா?

கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று எதை வைத்து கூருகிண்டீர். பூகம்பம், வெள்ளம் போன்றவைகள் கடவுளிடமிருந்து வரும் கோபங்களே.

உங்களின் விருப்ப படி இருப்பவர் தான் கடவுள் என்ற ஒரு அளவு கொள் வைத்துள்ளீர்.

அவர் இல்லையெனில் நீங்கள் எப்படி இருந்துருப்பீர்.

தருமி said...

//பூகம்பம், வெள்ளம் போன்றவைகள் கடவுளிடமிருந்து வரும் கோபங்களே.//

அட! அப்டீங்களா!

பாக்கிறதுக்கு காளி சிலையெல்லாம் பயங்கரமா இருக்கும். ஆனா நீங்க சொல்ற 'சாமி' பயங்கர cruel ஆக அல்லவா தெரிகிறது. வேண்டாமய்யா .. இந்த சாமி எனக்கு?

Nanum enn Kadavulum... said...

பூமியை கண்ணால் காண முடியும்
எக்ஸ்ரே ஐ கண்ணால் காண முடியுமா ?
பல்பு எரிவதை பார்க்க முடியும்
மின்சாரத்தை பார்க்க முடியுமா ?
காணும் பொருள்கள்
காணா பொருள்கள்
கேட்கும் ஒலிகள்
கேட்கா ஒலிகள்
( ultra sound waves, radio waves , magnetic power....there is so much out there which you can't see, but only feel)
என்று அறிவியல் சூட்சும விஷயங்களையும் நிறுவிக் கொண்டே தான் இருக்கிறது.
உணர்வதை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ள முடியும் என்றால்,
----எக்ஸ்ரே என்பது கடவுளாகுமா ???