Monday, September 20, 2010

க்ளிஷேக்களின் தொகுப்பு

நண்பர்களுக்கு வணக்கம் . சில மாதங்களாக பதிவேதும் இல்லை. காரணம் அறிவீர்கள்.இந்த இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் ஏகத்துக்கு எழுதிக் குவித்திருக்கிறீர்கள்.அனைத்தையும் படிப்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. முதலில் உங்கள் எழுத்துக்களைத் தவற விட்டமைக்காக எனது மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.இனி தொடர்ந்து படித்து வருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.இயன்றால் அவ்வப்போது எழுதவும் முயற்சிக்கிறேன்.தாயாரின் உடல்நிலை சிறிது முன்னேறியுள்ளது.நேரிலும் ,தொலைபேசியிலும் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி.
**********
நான்கு வருகைகள் முக்கியமானது ,மறக்க முடியாதது. ஒன்று நைஜீரியா ராகவன் அவர்களின் வருகை, இரண்டாவது நேசமித்திரன்.நேசன் ராகவனுடனான பொழுதுகள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அடுத்தது விக்னேஸ்வரி மற்றும் முரளி கண்ணன்.இருவரது பதிவுகளையும் இன்னமும் படிக்கவில்லை.:-((((
***********
மதுரையில் (அதிசயமாக ) மழை பெய்கிறது.இன்னமும் மதுரையின் சாலைகள் மழைக்குத் தாங்காமல் கரைந்து ஓடக்கூடிய நிலையில்தான் இருக்கிறது,விடிவுகாலம் எப்போது என்று தெரியவில்லை.போன வாரம் எங்கள் தெருவில் புல்டோசர், கலவை மிஷின்கள் சகிதமாக 20 பேர் வந்திறங்கினர்.புதிய சாலைதான் அமைக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் இருக்கிற ஓட்டை உடைசல்களை மூடி விட்டுப் போனார்கள்.அதுவும் அடுத்த இரண்டு நாட்கள் மழையில் காணாமல் போய் விட்டது.வாழ்க ஜனநாயகம்.
********
எழுத்தாளர் ஞானியைச் சந்தித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது .பயனுள்ளதாகவும்.அதைப் பதிவிடுகையில் நுண்ணரசியலோடு பதிவிட்ட மதுரையின் பிரபல பதிவரும் ,வருங்கால எழுத்தாளரும், எங்கள் ஆர்கனைசரும் ,என் நண்பரும்,எஸ்.ரா மற்றும் சாருவின் வெறித் தொண்டரும்,இன்னும் சில 'ரும்' களும் ஆன பொன்னியின் செல்வனின் எழுத்துத் திறனை அந்தப் பதிவில் மட்டுமல்லாது சமீபத்தில் அவர் எழுதிய கவிதை (கதை என்றுதான் நினைத்தேன், லேபிளைக் காண்பித்தார் நம்பி விட்டேன்) மூலமும் அறிந்து உறங்க முடியாமல் இரவுகளைக் கடத்தி வருகிறேன்.வேறென்ன சொல்ல?
**********
க்ளிஷேக்களின் தொகுப்பு என்ற தலைப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே தோன்றியது ஆனால் அதைத் தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை.இந்தத் தலைப்பில் கவிதை எழுதுங்கள் என்று நேசனிடம் கேட்டபோது என்னை முதலில் எழுதச் சொன்னார்.எழுதி விட்டேன்.உறுமீனுக்குக்காக வாடியிருக்கும் கொக்கு,
யன்னல் கம்பிகளில் முகம் பதித்த பெண் .
சிறுகோட்டுப் பெரும் பழம்,
கசங்கிய
படுக்கையில் ஒற்றைத் தலையணை.
யாயும் யாயும் யாராகியரோ ,
பேருந்தில் கடந்து போனவள்.
செம்புலப் பெயல்நீர்
ஐம்பது ரூபாய் குறைத்துக் கொண்டாள் .

:-))))))))))))
18 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வாங்க ஸ்ரீ....
நீண்ட இடைவெளியிருப்பினும், வருகை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

”க்ளிஷேக்களின் தொகுப்பு ”..ம்ம்ம்ம்..

Anbu said...

கவிதை புரியலையே அண்ணே..

நீண்ட நாளுக்கு அப்புறம்..

ம்ம்ம்.. அடிச்சு ஆடுங்க...

bogan said...

அற்புதம்..சட்டென்று ஒரு சடோரி தோன்றவைத்த கவிதை.

♠ ராஜு ♠ said...

அதுக்குப் பேரு செம்புலப்பெயல் நீரா..?
நன்றி தல!

அப்பறம் நானும் நம்ம எழுத்தாளர்க்கு ஒரு ஜெய் ஹோ சொல்லிக்கிறேன்!
காஃபி வாங்கித் தருவார்ல.
:-)

Sivaji Sankar said...

வாங்கண்ணே.. வாங்கண்ணே..
வாங்கண்ணே..

கவிதை "பஜக்".. ;)
தொடர்ந்து எழுதுங்க...

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்குங்க.

ஸ்ரீ said...

நன்றி ஆரூரன்,
நன்றி அன்பு,சமயத்துல எனக்கே புரியாது.
நன்றி போகன்.
நன்றி ராஜூ
நன்றி சிவாஜி சங்கர்
நன்றி ரவிசங்கர்.

நேசமித்ரன் said...

புதுச்சட்ட நல்லாத்தேன் இருக்கு ! வாரும் :)

பொரவு ஒன்னு கேக்கனும் ஆமா இந்த எழுத்தெல்லாம் ஏன் எடம் விட்டு படுத்திருக்கு

//எழுத்தாளர் ஞானியைச் சந்தித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது .பயனுள்ளதாகவும்.அதைப் பதிவிடுகையில் நுண்ணரசியலோடு பதிவிட்ட மதுரையின் பிரபல பதிவரும் ,வருங்கால எழுத்தாளரும், எங்கள் ஆர்கனைசரும் ,என் நண்பரும்,எஸ்.ரா மற்றும் சாருவின் வெறித் தொண்டரும்,இன்னும் சில 'ரும்' களும் ஆன பொன்னியின் செல்வனின் எழுத்துத் திறனை அந்தப் பதிவில் மட்டுமல்லாது சமீபத்தில் அவர் எழுதிய கவிதை (கதை என்றுதான் நினைத்தேன், லேபிளைக் காண்பித்தார் நம்பி விட்டேன்) மூலமும் அறிந்து உறங்க முடியாமல் இரவுகளைக் கடத்தி வருகிறேன்.வேறென்ன சொல்ல?//

அப்ப மதுர செவுத்துல எழுதீருக்க வெளம்பரம்லாம் ...

ரைட்டு பாஸு :)

க்ளிஸேக்களின் தொகுப்பு முன்னமே சொன்னது மாதிரி தி பெர்பெக்ட் ப்ளெண்ட்

நாந்தானே ?!எழுதாம ஊர்ப்பக்கம் வந்துற முடியுமா

:))

வால்பையன் said...

50 ருவா மிச்சம் பண்ணி என்ன பண்றது, குவாட்டருக்கு கூட பத்தாதேடா மச்சான்!

இளைய கவி said...

மாப்பிள லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாத்தான் வந்திருக்கடா , ""க்ளிஷேக்களின் தொகுப்பு" அருமை மாப்பி நீ அடிச்சு ஆடு மக்கா

ஸ்ரீ said...

நன்றி நேசன்,அதைக் கேள்வி கேட்டா வீட்டுக்கு ஆட்டோ வருமேண்ணே.
நன்றி வால்,
நன்றி இளையகவி(உயிரோடதான் இருக்கியா?!!!!!!!!)

☼ வெயிலான் said...

வருகைப் பதிவேட்டில் என்னுடைய பெயரைக் காணோமே வாத்தியாரே :)

ஸ்ரீ said...

மன்னியுங்கள் தலைவரே.

ஸ்ரீ said...

ரோஸ்விக் பெயரும் விடுபட்டு விட்டது.

தியாவின் பேனா said...

நல்லாய்த்தான் இருக்கு

தியாவின் பேனா said...

சங்கப் பாடல்களின் தொகுப்புக் கவி நன்று

தருமி said...

present, sir

மயாதி said...

உண்மையச் சொல்லணும் என்றால் நான் புரிந்துகொண்டதும் நீங்கள் எழுதிய கருவும் சத்தியமாய் வேறு வேறாகத்தான் இருக்கும். நமக்கு கொஞ்சம் அறிவு கம்மிங்க!