Friday, March 19, 2010

எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள்
என் வாழ்க்கை பெண்களால் ஆக்கப்பட்டது.என் சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே வளர்ந்துள்ளேன். வெற்றி பெற்ற ஒவ்வொரு சாமான்யனுக்குப் பின்னாலும் பெண்கள் இருந்தே தீருகிறார்கள்.இதில் கருத்து வேறுபாடு இல்லை எனக்கு.வெற்றி என்பதை எந்த அளவில் அல்லது எதுவாக எடுத்துக் கொண்டாலும் சரி.எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள் என்கிறபோது என்னால் பிரபலங்களை நினைக்க முடியவில்லை.ஏனெனில் யாரும் என்னை அந்த அளவுக்கு ,அதாவது என் வாழ்க்கையை சீரமைத்தவர்களின் அளவுக்கு பாதிக்கவில்லை.இதை எழுதச் சொன்ன பிரபுவுக்கு என் நன்றிகள்.

1. என் அம்மா:
முதலில் இவளைத்தான் சொல்ல வேண்டும். இல்லையெனில் நன்றி மறந்தவனாக அறியப்படுவேன் .பதினைந்து வயதில் இருந்து என்னை ,என் சகல குறைகளோடும், அதீதங்களோடும் பொறுத்துக் கொண்டு வளர்த்தமைக்காகவும், 'அவன் திறமையுள்ளவந்தான் ,காலம் வரல அவனுக்கு"என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதற்காகவும்.

2&3.என் உடன்பிறந்த தங்கைகள்:
அண்ணனாக எதுவும் செய்த ஞாபகம் இல்லை எனக்கு.ஆனாலும் விடாப்பிடியான பாசத்தோடும் ,உதவி தேவைப்படும்போதெல்லாம் தயங்காமல் தன் புகுந்த வீட்டில் வரக்கூடிய பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படாமல் எனக்கு உதவுவதற்க்காக.

4.என் அக்கா:
எனக்குத் தமிழின் மேலும் எழுத்தின் மேலும் ஆர்வம் வரக் காரணமாக இருந்தவர்.மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் (தற்போது செந்தமிழ்க் கல்லூரி) புலவர் பட்டம் பெற்றவர்.நல்ல புலமை,ஆனால் வாழ்க்கை இவருக்கு விதித்திருந்தது ஒரு தனியார் ஆரம்பப் பள்ளியில் சொற்ப சம்பளத்தில் ஆசிரியை வேலையும்,எந்த வேலையும் பார்க்காமல் வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு மனைவியின் வருமானத்தில் காலம் கடத்தும் கணவனும்.

5.என் அத்தைப் பாட்டி:
எழுபது வயதில் சமகால இலக்கியம் பேசுபவர்.எதை வாசிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து , எனக்குப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தவர்.இன்னமும் இவர் வாசிப்பு தொடர்கிறது.

6&7 இரண்டு ஆசிரியைகள் :
பத்து வயதில் ஆனந்தா டீச்சர் ,பதினேழு வயதில் ஜெஸ்லின் டீச்சர் .

8&9. இரண்டு காதலிகள் :
முதலாவது எட்டு வயதில் - மறக்க விரும்பவில்லை.
இரண்டாவது இருபது வயதில் - மறக்க முடியவில்லை.

10. குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சகோதரிகளும்.


27 comments:

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

//.. முதலாவது எட்டு வயதில் - மறக்க விரும்பவில்லை.
இரண்டாவது இருபது வயதில் - மறக்க முடியவில்லை. ..//

லூஸ்ல விடுங்க..

வால்பையன் said...

தம்பி, சொந்தகாரர்களை பற்றி எழுதக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தம்பி!

சரி அதென்ன ரெண்டே ரெண்டு காதலி, மத்ததெல்லாம் சொல்றதுக்கு உங்க அஸிஸ்டெண்ட் வருவாங்களா?

ஸ்ரீ said...

நன்றி திரு.
நன்றி வால்.பிரபு எனக்கு எந்த ரூலும் சொல்லாதது வசதியாப் போச்சு.அப்புறம் மத்ததெல்லாம் இந்த அளவுக்கு பாதிக்கலை.

பா.ராஜாராம் said...

// என் வாழ்க்கை பெண்களால் ஆக்கப்பட்டது.என் சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே வளர்ந்துள்ளேன். வெற்றி பெற்ற ஒவ்வொரு சாமான்யனுக்குப் பின்னாலும் பெண்கள் இருந்தே தீருகிறார்கள்.இதில் கருத்து வேறுபாடு இல்லை எனக்கு.வெற்றி என்பதை எந்த அளவில் அல்லது எதுவாக எடுத்துக் கொண்டாலும் சரி.எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள் என்கிறபோது என்னால் பிரபலங்களை நினைக்க முடியவில்லை.ஏனெனில் யாரும் என்னை அந்த அளவுக்கு ,அதாவது என் வாழ்க்கையை சீரமைத்தவர்களின் அளவுக்கு பாதிக்கவில்லை//

great!

இவர்களுக்கு மேலா பிரபலங்கள்?

//தம்பி, சொந்தகாரர்களை பற்றி எழுதக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தம்பி!//

நம்ம ரூல்ஸ் தானே அருண்... நாம மீராட்டி எப்படி?போக,இவர்களுக்காக மீறினால்தான் என்ன? :-)

ஸ்ரீ said...

நன்றி பாரா.

நேசமித்ரன் said...

இன்னும் பேசி இருக்கலாமோ :)

அப்புறம் பிடித்த பத்து மாணவர்கள்ன்னு ஒரு ஆசிரியரா தொடர் எழுதப் போறதா ஊருக்கு உள்ள பேசிக்கிறாங்களே நெசந்தானா?

க.பாலாசி said...

//எந்த வேலையும் பார்க்காமல் வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு மனைவியின் வருமானத்தில் காலம் கடத்தும் கணவனும்.//

ப்ச்ச்ச்... சிலருக்கு இந்தமாதிரி அமைஞ்சிடுறதுண்டு...

எந்நிலையும் கடந்துபோகும்....

நல்ல தேர்வுகள்....

jaffer erode said...

நல்ல தெரிவுகள்.

வானம்பாடிகள் said...

இவங்கதான் சரி. இப்போ சொல்லாம எப்ப சொல்றது. ரூலெல்லாம் போடுறதே உடைக்கத்தான்:). நல்ல அறிமுகங்கள்.

பழமைபேசி said...

ஸ்ரீ,

விதிகள் ஆக்குவதற்கும், மீறுவதற்கும்... பகிர்ந்தமை நன்று!

குமரை நிலாவன் said...

இவர்களுக்கு மேலா பிரபலங்கள்?

repeatu

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))

Anonymous said...

சொந்த பந்தங்களை எண்ணிக்கையில் ஏற்கனவே சேர்த்ததாகத்தான் கொள்ளவேண்டும். எனவே எழுதத்தேவையில்லை.

மாற்றார்கள் ‘பிடித்ததா’ என்ச்சொல்லும்போது, அஃது ஏன் என சுவாரசியம் எழுகிறது.

Rules are not made to break; but to make things regular and interesting.

பதினேழு வயது ஜெஸ்லின் டீச்சர் (பேரே நன்னாயிருக்கு) பற்றி இன்னும் கொஞசம் எழுதியிருக்கலாம்.

ஸ்ரீ said...

நன்றி நேசன் .சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
யார் வாழ்க்கையில்தான் இல்லை.
பிடித்த பத்து மாணவிகள் வேண்டுமானால் எழுதலாம் ,ஏனென்றால் நான் இதுவரை ஆண்களுக்கு வகுப்பெடுத்ததில்லை.

ஸ்ரீ said...

நன்றி பாலாசி ,
நன்றி ஜாபர்,இதுதான் முதல் பின்னூட்டம்னு நெனக்கிறேன்.
நன்றி வானம்பாடிகள்.
வாங்க பழமை அண்ணே.நன்றி.
நன்றி நிலாவன்.
நன்றி கார்த்தி .மழை வருமோ?
நன்றி ஜோ .

ஜெரி ஈசானந்தா. said...

மறுக்க கூடாதது அப்பிடி ஏதும் இல்லையா ஸ்ரீ..

ஸ்ரீ said...

மறுக்கக் கூடாததா? புரியலயே ஜெரி.

பிரபு . எம் said...

ரொம்ப யதார்த்தமா எழுதியிருக்கீங்க....

அப்புறம் "ரூல்ஸ் " பற்றி....
தொடர்பதிவுக்கு அழைத்தபோது விதிமுறைகள் பற்றி ஏனோ எனக்குக் குறிப்பிடத் தோன்றவில்லை... :)
அதான் சானியா மிர்ஸா, டயானா, கல்பனா சாவ்லா பற்றியெல்லாம்தான் நாம் எழுதிவிட்டோமே!!

//எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள் என்கிறபோது என்னால் பிரபலங்களை நினைக்க முடியவில்லை.ஏனெனில் யாரும் என்னை அந்த அளவுக்கு ,அதாவது என் வாழ்க்கையை சீரமைத்தவர்களின் அளவுக்கு பாதிக்கவில்லை//

இந்த வரிகளே போதுமே... :)

சுருக்கமாக இருந்தது உண்மைதான்.... இருப்பினும் குறையொன்றுமில்லை...
பிரபலங்களைப் பற்றி சிலாகித்து எழுதுவதைவிட வீட்டுக்கு வீடு வாசற்படியாக நம்மையும் இயல்பு சார்ந்த பொது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதுமான யதார்த்தமான இதுபோன்ற எழுத்து நினைவில் நிற்கிறது :)
அருமை....

ஈரோடு கதிர் said...

மிக நேர்த்தி ஸ்ரீ

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ

உடன்பிறப்புகளை நினைவில் வைத்து பாராட்டியது நன்று - மறக்க விரும்பாத - இயலாத - காதலிகள் எங்கிருந்தாலும் வாழ்க

நேர்மையான பதில்கள் ஸ்ரீ

புலவன் புலிகேசி said...

ரீல்ஸ் மீறிட்டீங்க..அரவாயில்லை..இரண்டு காதலிகள் தானா....? பாவம் ஸ்ரீ நீங்க

வி.பாலகுமார் said...

short and sweet :)

Anonymous said...

பெண்ணோட மனசு பெண்ணுக்கும் தான் தெரியும் என்ற காலம் எல்லாம் போச்சு என்பது மாதிரி இருந்தது இந்த பதிவு...

வாழ்த்துக்கள் அனைத்து பெண்களுக்கும்..அக்கா வாழ்க்கை செழிக்க வேண்டுவோம்...

அத்திரி said...

// இரண்டு காதலிகள் :
முதலாவது எட்டு வயதில் - மறக்க விரும்பவில்லை.
இரண்டாவது இருபது வயதில் - மறக்க முடியவில்லை.
//

8வயசிலே லவ்வா???????தமிழ்சினிமா படம் ரொம்ப பாப்பீங்களோ

Anonymous said...

//8வயசிலே லவ்வா???????தமிழ்சினிமா படம் ரொம்ப பாப்பீங்களோ//

8 வயதிலே என்றால், விளையாட்டுத்தோழி என்றுதான் சொல்லவேண்டும்.

20 வயதில் என்றால், விளையாட்டுத்தோழி என்று சொன்னால் விபரீத அர்த்தமாகி, அவளிடம் அடிபட வேண்டியதிருக்கட்டும்.

சங்கடமான வார்த்தைகள்.

பொதுவாக ‘காதலிகள்’ என்று சொல்லிவிட்டார் என நினைக்கிறேன்.

Joe said...

சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீ.

இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதியிருக்கலாம்.

தருமி said...

//10. குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சகோதரிகளும்./

இது டாப்!