Tuesday, February 23, 2010

கவிஞர் நேசமித்ரனுடன் ஒரு நாள்


ஒரு படைப்பாளிக்கு நேரக்கூடிய அதிகபட்ச எரிச்சலான,தர்மசங்கடமான ,ஆயாசமான ,கொடுமையான ,வருத்தமான இன்னும் என்னென்ன ஆனவெல்லாம் உண்டோ அதெல்லாம் உடைய நிகழ்வு எது என்றால் ,தன் படைப்புகளுக்குத் தானே விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் (என்று நான் நினைக்கிறேன்).ஆனால் நேசனிடம் துளியும் மேலே சொல்லப்பட்ட எந்த 'ஆன ' உணர்ச்சிகளும் இன்றி மகிழ்ச்சியுடன் தன் படைப்புகளைப் பற்றிப் பேசினார். சமகால தமிழ்க் கவிதைகள் என்று பேசும்போது ,அதில் காணப்படும் உத்திகளைப் பின்பற்றாது தனக்கென்று ஒரு பாணியைக் கைக்கொண்டிருப்பவர் நேசமித்திரன் .

சுவாரஸ்யமான கலந்துரையாடல் கணங்கள்
கா.பா:என்னைப் பாத்தா பரிதாபமா இல்லையா ஸ்ரீ உனக்கு!!!!

இவர் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்றால் அறிவியல், வரலாறு,தொல்லியல்,பூகோளம் என சகலத்தையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் போலிருக்கிறதே என்று நான் நினைத்ததுண்டு.நேரிலும் அதே கேள்வியைக் கேட்கத் தவறவில்லை.பாடு பொருள் மாறிக் கொண்டிருப்பதைப் போல , படிமங்களும், உதாரணங்களும்,உவமான உவமேயங்களும் மாறவேண்டும் என்கிறார்.மறுக்க முடியவில்லை!!புதிய உத்திகளும், உதாரணங்களும் வாசகனை யோசிக்க வைப்பதற்காகவே.கவிதை என்பது வாசகனை வார்த்தைகளை விட்டு வெளியில் எறியக் கூடியதாக இருக்க வேண்டும்.அதாவது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதாக இருக்க வேண்டும் என்பதில் திண்ணமாக இருக்கிறார்.புதிய சொற்கள் புனைவதிலும் ,புதிய உதாரணங்களைப் படைப்பதிலும் அவருக்கிருந்த ஆர்வம் என்னைப் பொறுத்த வரையில் பிரமிக்கத் தக்கது.

இவ்வளவு பொறுமை நமக்கு கிடையாதுங்க
மொக்கைக் கேள்விகளுக்கும் பொறுப்பான பதில்கள்
இல்லையில்லை ,வெறும் குளிர்பானம்தான்


முதல் முறையாகச் சந்திக்கிறோம் என்றே தோன்றவில்லை.நெடுநாள் பழகினதைப் போன்ற அணுக்கம்,தோளில் கைபோடச் சொல்லியது .அவரும் மறுக்கவில்லை.மேலும் பேசிய விஷயங்கள் பற்றிய விபரமான இடுகையை அண்ணன் கார்த்திகேயப் பாண்டியன் அவர்களும், அழகான புகைப்படங்களுடன் தருமி அய்யாவும் இட்டுள்ளனர்.


34 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

கொஞ்சமா எழுதினாலும் கிண்ணுனு எழுதி இருக்கீங்க தலைவரே..:-)))

தருமி said...

சிலர் ஒண்ணுமே எழுதாத மாதிரி இல்லாம //கொஞ்சமா எழுதினாலும் கிண்ணுனு எழுதி இருக்கீங்க தலைவரே..:-)))//

வி.பாலகுமார் said...

// நேசனிடம் துளியும் மேலே சொல்லப்பட்ட எந்த 'ஆன ' உணர்ச்சிகளும் இன்றி மகிழ்ச்சியுடன் தன் படைப்புகளைப் பற்றிப் பேசினார். //

உண்மை தான். அவர் வேறு தளத்தில் இயங்குவதற்கான காரணங்களையும் அழகாகச் சொன்னார். :)

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

///கொஞ்சமா எழுதினாலும் கிண்ணுனு எழுதி இருக்கீங்க தலைவரே..:-)))//


ஆமா..! நல்லா ஜம்முன்னு எழுதி இருக்காரு..! அருமை ஸ்ரீ..!

வெறும் குளிர்பானம் தானா ???;;)

பிரபு . எம் said...

நல்ல சந்திப்பு...
நான் மிஸ் பண்ணிட்டேன்!! :-(
இந்த சண்டே கண்டிப்பா சந்திக்கலாம்

டம்பி மேவீ said...

"இல்லையில்லை ,வெறும் குளிர்பானம்தான்"

நம்பிட்டேன் ......

:)))))))))))

வால்பையன் said...

//இவர் கவிதைகளைப் படிக்க வேண்டும் என்றால் அறிவியல், வரலாறு,தொல்லியல்,பூகோளம் என சகலத்தையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும் //

உன்னுடய மிக்ஸிங் பாக்கும் போதே எனக்கு சந்தேகம் மச்சி!

pappu said...

கானா பானாதான் எனக்கு எல்லா புகைப்படங்களிலும் பிடித்து இருக்கிறார். அவர் பவண்டோ தானே தருகிறார்? இதுவும் அவரிடம் எனக்கு பிடிக்கும்...

♠ ராஜு ♠ said...

அவரோட சாட் பண்ணும்போது கலக்குவாப்ல..!
அப்போ நேர்ல கேக்கவா வேணும்..?

இராகவன் நைஜிரியா said...

// ஆனால் நேசனிடம் துளியும் மேலே சொல்லப்பட்ட எந்த 'ஆன ' உணர்ச்சிகளும் இன்றி மகிழ்ச்சியுடன் தன் படைப்புகளைப் பற்றிப் பேசினார். //

வேற வழியே இல்லை. பேசித்தான் ஆகணும்.

உங்களுக்கு எல்லாம் ஒரு தடவைத்தான் சொல்லியிருக்கார். எனக்கு பலதடவை சொல்லிட்டாரே. :-)

இராகவன் நைஜிரியா said...

// கா.பா:என்னைப் பாத்தா பரிதாபமா இல்லையா ஸ்ரீ உனக்கு!!!!//

அவரு மட்டுமா?

இராகவன் நைஜிரியா said...

// பாடு பொருள் மாறிக் கொண்டிருப்பதைப் போல , படிமங்களும், உதாரணங்களும்,உவமான உவமேயங்களும் மாறவேண்டும் என்கிறார். //

இங்க மனுஷன் பாடு பாடுன்னு பாடு பட்டு இருக்கும் போது, பாடு பொருளைப் பற்றி சிந்தித்து... அதை மாற்றி எழுதணும் என்றால்...

லிவர் ...ச்சே (எத்தனை நாள் தான் கிட்னின்னு தப்பா டைப் அடிச்சுகிட்டு இருக்கிறது) மூளை வேணும்.

நடக்கட்டும்... நடக்கட்டும்.

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி ஸ்ரீ!

இந்தப் பயலை கொஞ்சமாவது நெருக்கமா பாத்துரனும் என்பது வெகு நாள் ஆசை.

ஊதா சட்டை,கருப்பு பேன்ட்,மழ மழ கன்னம்.

மக்கா,கெளப்புறடா.

மிஸ் யூ நேசா.

சந்தோசமாய் இருந்துட்டு வா.

பா.ராஜாராம் said...

ஏரோப்ளேன் மாதிரி கை வச்சுருக்கியே..

அது அருமை மக்கா!expressive.

புலவன் புலிகேசி said...

ஆமாம் வெறும் குளிர்பானம் தானா? கலரும் கப்பும் நம்ப முடியலையே

Anonymous said...

என்னுடைய வணக்கமும் சொல்லுங்க நேசமித்திரனுக்கு.....

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ

நல்லதொரு சந்திப்பினை நழுவ விட்டு விட்டேனே ! ம்ம்ம் - நல்லதொரு இடுகை - நல்வாழ்த்துகள்

வி.பாலகுமார் said...

எனது இடுகை: http://solaiazhagupuram.blogspot.com/2010/02/blog-post_24.html

மாதேவி said...

"புதிய உத்திகளும், உதாரணங்களும் வாசகனை யோசிக்க வைப்பதற்காகவே.கவிதை" இதைப்படித்துத் தானே வியந்துபோய் இருக்கிறோம்.
வாழ்த்துக்கள் நேசமித்திரன்.

தண்டோரா ...... said...

போஸெல்லாம் நல்லாத்தான் கொடுக்கிறாரு.கவிதையைத்தான் புரியாம எழுதறாரு!!(தருமி ஐயாவுக்கு இட்ட அதே பின்னூட்டம்தான்)

மோகன் குமார் said...

பகிர்வுக்கு நன்றி; நேசமித்திரன் சென்னை பக்கம் வர்றாரா? வந்தா நாங்க பாப்போமில்ல?

நேசமித்ரன் said...

enna thavam seithanai nesamithraa
innarum nanbar anukkam vaaaikka ?!

mikka nandri SRI

:)

வானம்பாடிகள் said...

:)நேசனின் இன்னோரு அறிமுகம் உங்கள் பார்வையில். நன்றி ஸ்ரீ!

ராஜன் said...

ஏங்க ஸ்ரீ ! நல்லா இருக்கீங்களா !

ஸ்ரீ said...

நன்றிகா.பா.
நன்றி தருமி அய்யா.
நன்றி பாலா
நன்றி ஜீவன்
நன்றி பிரபு.ஞாயிறு சந்திப்போம்.
நன்றி மேவீ
நன்றி வால்
நன்றி பப்பு
நன்றிராஜு
நன்றி ராகவன் சார்
நன்றி ராஜாராம் சார்
நன்றி புலிகேசி
நன்றி தமிழரசி.சொல்கிறேன்.
நன்றி சீனா அய்யா
நன்றி பாலா பார்த்து விட்டேன்.
நன்றி மாதேவி
நன்றி மணிஜி
நன்றி நேசன்.தவம் செய்தது நாங்கள்தான்.
நன்றி வானம்பாடிகள்.
நன்றி ராஜன். புரியுது உடம்பு சரியில்லாததால் வரவில்லை.

நினைவுகளுடன் -நிகே- said...

என்னுடைய வணக்கமும் சொல்லுங்க நேசமித்திரனுக்கு.....

ஜெகநாதன் said...

நேசனை ரொம்ப நிமித்தியிருக்கீங்க ​போல...!!! ரசித்தேன் :))

thenammailakshmanan said...

நேசன் வாழ்த்துக்கள் நிஜமாவே எல்லோரும் தவம் செய்து இருக்கோம் ..

@ ராஜா ராம் ...கலக்குறீங்க பின்னூட்டத்திலேயே நேசனை நெகிழ வச்சிட்டீங்க போல இருக்கு .எவ்வளவு பிரியம் உங்களுக்கு ...

@ ராஜு ..சாட்டிலேயே கலக்குவாப்புல ..அப்ப நேர்காணலுக்கு எப்ப போறீங்க..

// பாடு பொருள் மாறிக் கொண்டிருப்பதைப் போல , படிமங்களும், உதாரணங்களும்,உவமான உவமேயங்களும் மாறவேண்டும் என்கிறார். //
உண்மை எனக்கும் அதே அட்வைஸ்தான் பண்றார்.. நான் தான் திருந்தலை

@ ஸ்ரீதர் நல்ல பகிர்வு.. நன்றி ..நல்ல புரிதல் .,பிரியம் இருந்தால்தான் தோளில் கை போட்டு பேச முடியும்.. வாழ்த்துக்கள் ஸ்ரீதர் :)

ஜெரி ஈசானந்தா. said...

சந்தோசம் ஸ்ரீ.

Joe said...

//
வெறும் குளிர்பானம்தான்
//
வெறும் குளிர்பானம் உடலுக்குக் கெடுதி என்று உங்களுக்கு தெரியாதா? பூச்சிக் கொல்லியை ஏன் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறீர்கள்? ;-)

Joe said...

மதுரையில் சீனா அய்யா, கார்த்திக், நேசமித்திரன் ஆகியோருடன் உங்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இன்னும் அதிக நேரம் பேசியிருக்கலாம், அடுத்த முறை சந்திக்கும் போது அதிக நேரம் ஒதுக்க முயல்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது "மதுரை பிரபல பதிவர்களுடன் ஒரு சந்திப்பு" இடுகையை எழுதுகிறேன்.

ராஜன் said...

//வெறும் குளிர்பானம் உடலுக்குக் கெடுதி என்று உங்களுக்கு தெரியாதா?//

ஆமாம் அதனுடன் ஒரு ஹாப் கார்டினால் வாங்கிக் கலந்து குடிக்க வேண்டும்

//பூச்சிக் கொல்லியை ஏன் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறீர்கள்? ;-) //

வயிற்றில் நிறைய பூச்சிகள் போல ! நல்லது தான் !

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

மதுரை சரவணன் said...

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்லநினைவோட்டம்....அருமையா இருக்கு .. வாழ்த்துக்கள்