Thursday, February 4, 2010

மெல்லினம் புணர்தல்

மாமாவின் கவிதைகளைப் பற்றிய அறிமுகத்திற்கு இங்கே க்ளிக்கவும்.



மெய்
யுணர் மெல்லப் பேசு
மெய் தடவி மென்று தின்
மெதுவாய்ப் புணர் மெல்லக் கொல்
மெழுகாய் உருகு மெல்ல முனகு
மெது மெதுவாய்ச் செத்துப் போ

இடையது இல்பொருள்
மெல்லின வல்லினம்
கலத்தலே புணர்ச்சி.
ஆதி நீடலும் அடி அகரம்
இளகுவதும் முன் நின்ற
மெய் புரிதலுமே புணர்ச்சி விதி

உடம்படு மெய்ப் புணர்ச்சிக்கு
உடம்பது புணர்ச்சிக்கு
உடலோடு உயிர் மட்டுமல்ல
உடலோடு உடல் ஒன்றுவதும்
இயல்பே.

18 comments:

கவிக்கிழவன் said...

நல்ல கவிதை

ஜெரி ஈசானந்தா. said...

மாமாவும்,மாப்புளையும் சேர்ந்து கலக்குரீங்கலேப்பா.

வானம்பாடிகள் said...

:). ம்ம்.எப்படி இப்படி? அருமை.

வால்பையன் said...

//இடையது இல்பொருள்
மெல்லின வல்லினம்
கலத்தலே புணர்ச்சி.//


சார்!

நீங்க எங்கேயோ போயிட்டிங்க!

தமிழரசி said...

ஆசிரியரின் கண்ணோட்டத்தில் அழகாய் ஒரு ஆக்கத்தின் விதி.....

ராஜன் said...

அகத்தியம் தொலைஞ்சிர்ச்சுன்னு பொய் சொல்றாங்கோ ! இந்த அண்ணாத்த கண்டுபுடிச்சுட்டாரு

ஆரூரன் விசுவநாதன் said...

sri........greets to mama

தேவன் மாயம் said...

மாமா!! எப்ப ஆரம்பிச்சீங்க இந்த வேலையை!! கலக்குங்கப்போய்!!

நேசமித்ரன் said...

அடிச்சு நிமுத்துராங்கப்பு

;)

Madurai Saravanan said...

nalla kavithai . punarchchi vithi engkairunthu pidichcheengka arumai .

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))

ஸ்ரீ said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

வி.பாலகுமார் said...

:)

ச.முத்துவேல் said...

புலவரே !
பின்னிப் பெடலெடுத்துவிட்டீரய்யா!

சக்தி said...

oru thamil professorudaya varigala padippathupol ullathu

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்...

பிரபு . எம் said...

//இடையது இல்பொருள்
மெல்லின வல்லினம்
கலத்தலே புணர்ச்சி.
ஆதி நீடலும் அடி அகரம்
இளகுவதும் முன் நின்ற
மெய் புரிதலுமே புணர்ச்சி விதி//

சூப்பர்ப்!! :)

cheena (சீனா) said...

தமிழறிந்த தமிழாசிரியர் - ம்ம் - கவிதை அருமை - புணர்ச்சி விதி நன்கு வரையறுக்கப்பட்டிருக்கிறது.

நல்வாழ்த்துகள் ஸ்ரீ