Sunday, November 29, 2009

கலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்

எச்சரிக்கை: இது ஒரு பின்நவீனத்துவக் கதையாக இருக்கலாம்.

மு.கு-1:

இந்தக் கதையில் வரும் பெயர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
கதாபாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு வேறு யாரையேனும் கற்பனை செய்துகொண்டால்,நான்பொறுப்பல்ல.இதுதொடர்பான போன்கால்கள்,எஸ்.எம்.எஸ்சுகள்,கடிதப் போக்குவரத்துகளைத் தவிர்க்கவும் .

மு.கு-2:

சாமி சத்தியமாக இந்தக் கதையில் எந்தக் குறியீடும் கிடையாது.வீணாகப் புரளியைக் கிளப்ப வேண்டாம்.

மு.கு-3:

பொறுமையாக மு.குவைப் படித்ததற்கு நன்றி.

************


இந்தக்கதை இத்துடன் முடிவடைந்து விடவில்லை ,மேலும் இவ்வாறு தொடர்கிறது. லூஸ்வேகாசின் மதுபான விடுதி ஒன்றின் கழிவறையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தபடி இந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்த கலியுக எழுத்தாளனின் பையில் இருந்தது ,காங்கோவின் இருண்ட பிரதேசங்களில் தன் வாழ்நாளின் இரண்டரை நாட்களைக் கழித்த கடுப்பு கந்தசாமியின் டைரி. 467 பக்கங்கள் கொண்ட அந்த டைரியின்1242 ம் பக்கத்தில் இந்தக் கதைக்கான மூலக் கருநிகழ்வைக் குறிப்பிட்டுள்ளதோடு ,அன்றைய ஒருநாளைக்கு அவன் தோழியாக இருந்த மிரிண்டாவின் வளப்பமான ஸ்தனங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளான்.

கூடுதல் ஆதாரமாக இரண்டாம் குலோத்துங்க சோழனின் நேரடி வாரிசான தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் ஆட்சியில் மாதம் ஐம்மாரி பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்து வந்தது கடுப்பு கந்தசாமியின் டைரி என்று கல்வெட்டுக்கள் பறைசாற்றுகின்றன.

அழைப்பு மணி ஒலித்ததும் கலியுக எழுத்தாளன் துண்டு பீடியை நசுக்கித் தூர எறிந்துவிட்டுக் கதவைத் திறந்தான் .வெளியே நின்றிருந்த வெள்ளைக்காரன் இவனைத் தள்ளுவது போல் உள்ளே நுழைந்து, நாற்காலியில் அமர்ந்து கொண்டு "நீங்களும் அமருங்கள்"என்றான்.

"நல்ல மரியாதை ! நீங்கள் கண்டிப்பாக என் வாசகராகத்தான் இருக்க வேண்டும்.கடல் கடந்தும் என் எழுத்து பரவியுள்ளது என்பதில் மகிழ்ச்சி,எனக்காக ஏதாவது கொண்டு வந்திருப்பீர்களே!அதை முதலில் கொடுத்து விடுங்கள்,பிறகு நீங்கள் வாங்கித் தரப்போகும் மதுவையும், உணவையும் சுவைத்தபடி நிறையப் பேசலாம்".

"இல்லை நான் ஏதும் கொண்டு வரவில்லை.மேலும் நான் இங்கே வந்திருப்பது உங்களைப் பேட்டி காண ,தற்கால இலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள" என்றவாறு எழுந்து நின்றான்.

"இந்த உடை எனக்கு சிரமத்தைத் தருகிறது.இதைக் கழற்றிவிட்டு உங்களுடன் பேசிக் கொண்டிருப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இராது என்று நினைக்கிறேன்"என்றபடி கழுத்தில் எதையோ அழுத்த மொத்த மனித உருவமும் சட்டையைப் போல கழன்று விழுந்தது.அதை நாற்காலியில் போட்டு விட்டு 'அது' நின்றுகொண்டிருந்தது.

"யார் நீ? என்னைக் கொல்லப் போகிறாயா?"

"பயம் வேண்டாம் ,நான் கைமீரியா என்கிற கிரகத்தில் இருந்து வருகிறேன்.எங்களிடம் இல்லாத ஒன்று என்னவென்றால் இலக்கியம். அதைப் பற்றித்தான் ஆராய்ந்து வருகிறேன். எனவே உங்களைப் பேட்டி கண்டு உங்களைப் பற்றியும் ,உங்கள் படைப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளவே வந்தேன்".

"சபாஷ்! அப்படிஎன்றால் கண்டம் விட்டுக் கண்டம் மட்டுமல்ல கிரகம் விட்டுக் கிரகம் என் புகழ் பரவியிருக்கிறது,இதை வாசகர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.நான் இப்போதே இதை எழுதத் தொடங்குகிறேன் ,இந்த சந்திப்பும் ஒரு கதையாகப் போகிறது"என்றபடி எழுதத் துவங்கினான்.

.......மேலும் இந்தக் கொட்டையை நிழலில் உலர்த்தி எடுத்து , சதகுப்பை, அசுவகந்தியுடன் சேர்த்து அரைத்துப் பின் வடித்து எடுத்த சாற்றை உப்பாக்கி, அதை கோமியத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும், கருங்காலி இலையுடன் நாயுருவியையும் சேர்த்து அதில் பன்னிரு நாழிகைகள் ஊற வைத்துப்பின் வடித்த சாற்றைக் குறியில் பூசிக் கொண்டு சம்போகஞ் செய்ய பெண் திருப்தியடைவாள்' என்கிற இந்தக் குறிப்பை மிரிண்டாவுக்கு விளக்கிக் கொண்டிருந்த வேளையில்,அவள் அதைக் கவனியாது ஆடை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?"

"இந்தக் கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்"

"ஒரு திருத்தம்,'கைமீறிய பிரஜை' என்று தலைப்பில் எழுதி இருக்கிறீர்கள்,அது தவறு, கைமீரியப் பிரஜை என்று வர வேண்டும்".

"சரி,திருத்திவிடுகிறேன்.அப்புறம் உங்கள் கிரகத்தில் இனப்பெருக்கம் எப்படி? பால் பேதம் உண்டா?ஏன் கேட்கிறேன் என்றால் உனக்குப் பிறப்புறுப்பு என்று எதையும் காணோமே!!"

"இனப்பெருக்கம் .......அதிருக்கட்டும்,பின் நவீனத்துவ எழுத்தைப் பற்றிச் சொல்லுங்கள்,இங்கே வந்ததும் உங்களுடைய புத்தகம் ஒன்றைப் படித்தேன்,பக்கங்களும் ,வரிகளும் மாற்றி அச்சடிக்கப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.ஒன்றுமே புரியவில்லை"

"இல்லை ,அப்படி இல்லை,சரியாக அச்சிடப்பட்ட புத்தகந்தான். உங்களுடைய இனப்பெருக்க முறை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? கேளிக்கைகள் உண்டா?சல்சா ஆடுவீர்களா?எனக்கு கேபரேதான் பிடிக்கும்.அதிலும் மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் நான் யானைக்கால் சூப்போடு ரசித்துப் பார்த்த காட்டுவாசிகளின் நடனம் ,இங்குள்ள குச்சுப்புடியின் ஆதித்தாய் என்றால் நம்புவீர்களா?"என்றபடி கடுப்பு கந்தசாமியின் டயரியைத் தேடினான்.

"நடனம் என்று எதுவும் கிடையாது,நாம் பின்நவீனத்துவக் கவிதைகளைப் பற்றியாவது பேசலாமா?உங்கள் புத்தகம் ஒன்றில் படித்ததுதான் இது,இதைச் சற்று விளக்கினால் பரவாயில்லை."

"உங்கள் கிரகத்தில் தொழில்நுட்பம் எல்லாம் எப்படி?"

"அந்த விஷயத்தில் உங்களை விட பல ஆயிரம் மடங்கு புத்திசாலிகள்தான் நாங்கள் ,இதற்காவது பதில் சொல்ல முடியுமா? கதைகளில்,கவிதைகளில் உண்மையிலேயே குறியீடு என்று ஒன்று உள்ளதா?அல்லது வாசகன்தான் அதைக் கற்பனை செய்து கொள்கிறானா?"

"கலிபோர்னியாவின் நீண்ட பாலைவனத்தில் உள்ள உடும்புகளின் கறியைச் சுவைத்திருக்கிறீர்களா? அதற்க்கு மோர்க்குழம்பு நல்ல காம்பினேஷன். மோர்க்குழம்பு எப்படி வைப்பது என்பது யாருக்கும் தெரியாது.அல்மேரியாவின் இருண்ட காடுகளின் இடையே ஊடுருவிச் சென்றபோது என் நண்பன் ஒருவன் (பெயரைச் சொன்னால் மிரண்டு போவீர்கள்,சொல்ல வேண்டாம் என்று அவன் எனக்குப் போன் பண்ணிச் சொன்னான்) எனக்கு அனுப்பி வைத்த ரெசிபி இது.முதலில் இரண்டு நாள் முன்பு உரை குத்திய மோரைத் தண்ணீர் கலக்காமல் நன்கு கடைந்து கொள்ளுங்கள் பிறகு,
தேங்காய் வில்லை- 4 பத்தை
பச்சை மிளகாய்- 6 (பெரியது )

"நிறுத்துங்கள்!!! நீங்கள் என்கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் உளறிக் கொண்டு இருக்கிறீர்கள்,அந்த உலகமகா எழுத்தாளரைப் போலவே.
உங்கள் உணவுமுறை எங்களுக்குத் தேவையில்லை.எங்களுக்கு வேண்டியதெல்லாம்.......

"ஆமாம்! கேட்க மறந்து விட்டேன் .இந்தக் கிரகத்தில் உனக்கு உணவு எப்படி?என்னவெல்லாம் சாப்பிட்டாய்?எது உனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது?"

"மனிதர்களின் மூளைதான் எனக்குப் பிடித்தது"

இதற்கு மேல் கலியுக எழுத்தாளனின் பக்கங்கள் வெறுமையாக உள்ளது. விசாரித்ததில் ,ரொம்பவும் கடுப்பாகிப் போன கைமீரியப் பிரஜை கலியுக எழுத்தாளனைத் தாக்கி விட்டு ஓடி விட்டதாக ஒரு தகவலும், கலியுக எழுத்தாளன் ,கலியுக எழுத்தாளனே அல்ல ,கைமீரியப் பிரஜைதான் கலியுக எழுத்தாளனாகி விட்டது என்று ஒரு தகவலும் ,அதெல்லாம் இல்லை கலியுக எழுத்தாளன் எந்தப் பிரஜையையும் சந்திக்கவே இல்லை , காப்பகத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஒரு தகவலும் எனக்குக்கிடைத்துள்ளது.


##########


23 comments:

ஈரோடு கதிர் said...

//சாமி சத்தியமாக //

எந்த சாமி மேல சத்தியமானு சொல்லுங்க....

அத வச்சு ஏடாவது பிரச்சனை பண்ண முடியுமானு ட்ரை பண்ணலாம்

இஃகிஃகி

முழுவதும் படிச்சிட்டு.........வாரேன்

ஈரோடு கதிர் said...

படிச்சிட்டேன்

பல பேர பிரிச்சி மேஞ்சிருப்பீங்க போல இருக்கே...

சங்கர் said...

நடுவுல, சில கட்டம் சதுரம் எல்லாம் இருக்கணுமே, எங்க காணும்,

சங்கர் said...

//#######//

கையெழுத்துல கூட நவீனத்துவமா?

சங்கர் said...

//சாமி சத்தியமாக இந்தக் கதையில் எந்தக் குறியீடும் கிடையாது.//

நீங்க இல்லைன்னு சொன்னாலும் எங்களுக்கு புரியாத என்ன? எத்தனை கதைகள் படிச்சிருக்கோம்

சங்கர் said...

//என் நண்பன் ஒருவன் (பெயரைச் சொன்னால் மிரண்டு போவீர்கள்,சொல்ல வேண்டாம் என்று அவன் எனக்குப் போன் பண்ணிச் சொன்னான்)//

நீங்க தானே அந்த நண்பன்

rajan RADHAMANALAN said...

கொட்டையை நிழலில் உலர்த்தி எடுத்து , சதகுப்பை, அசுவகந்தியுடன் சேர்த்து //

அற்புதம் அற்புதம்

rajan RADHAMANALAN said...

//எதையும் காணோமே!!"
//

அட பாவமே ! காதிலேயே இதாங்க டர்னிங் பாயிண்டு

♠ ராஜு ♠ said...

இந்த ஃபோர்ஹே உத்தின்னு சொல்வாங்களே..!
அதுவாண்ணே இது..?

வால்பையன் said...

சான்சே இல்ல!

செமக கலக்கல்!

முன்,பின், சைடு எல்லா நவீனத்துவமும் கலந்துருக்கு இதில்!

ஸ்ரீ said...

நன்றி கதிர்.எந்த சாமின்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? ஆசாமிதான்.

ஸ்ரீ said...

நன்றி சங்கர், கட்டம் சதுரமெல்லாம் போட்டா யாரையாவது குறிப்பிட்டுத் தாக்குற மாதிரி ஆகிடுமே!அப்புறம் அந்த நண்பர் நானில்லை.

ஸ்ரீ said...

நன்றி ராதாமணாளன்.

ஸ்ரீ said...

நன்றி ராஜு.ஏன்யா கொளுத்திப் போடற?

ஸ்ரீ said...

நன்றி வால் .

சொல்லரசன் said...

எப்ப இருந்து இப்படி.............

தண்டோரா ...... said...

கிஸ்ரா..பீரு...ரெமோ

இளைய கவி said...

ஸ்ரீ இன்னும் உடம்பு சரியாகலையா ? ஏன் இப்படி கதை எழுதுற ?

தருமி said...

இதுதான் back நவீனத்துவமா? மனுசங்களை கஷ்டப்படுத்துறதுதான் இந்த back நவீனத்துவமா?

நல்லா இருங்க ...

ஸ்ரீ said...

நன்றி சொல்லரசன்,நன்றி தண்டோரா,நன்றி இளைய கவி,நன்றி தருமி சார்.

தருமி said...

உள்குத்து எதுவுமே இல்லை. (எல்லாம் வெளிக்குத்துதானோ?)

ஸ்ரீராம். said...

ஏதோ பழைய சுஜாதா கதையையும் கடுகு கதையும் சேர்த்து படித்தா மாதிரி இருக்கு. ரேடியோவுல ரெண்டு ஸ்டேஷன் ஒரே நேரத்துல கேட்குமே அது போல....

பா.ராஜாராம் said...

எல்லாம் எழுத தெரிகிற கைகள்!

அற்புதம்!