Monday, November 9, 2009

உப பாண்டவம்


பார்க்கச் சலிக்காதது கடலும் ,யானையும் என்பார்கள்.அதைப் போல கேட்கவும் படிக்கவும் சலிக்காதது புராணக் கதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். புராணம், இதிகாசம் என்று சொல்லப்படும் கதைகளை விருட்சம் எனக் கொள்வோமானால், அதன் உப கதைகள் தெரிந்தும் தெரியாமலும் விரவிக் கிடக்கின்றன வேர்களைப் போல.

இந்தப்
புத்தகத்தின் முன்னுரையில் எஸ்.ரா சொல்வதைப் போல எத்தனை கோடி ஜனங்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான மகாபாரதம் இருக்குமோ என்று தோன்றியது.மகாபாரதம் என்றதும் நினைவுக்கு வரும் குருக்ஷேத்திர யுத்தத்தை மட்டும் விவரிக்காமல் ,அது மூள்வதற்கு காரணமான பாண்டவ ,கௌரவர்களின் மனோநிலையை விவரித்திருப்பதே இதன் சிறப்பு என்று நான் கருதுகிறேன்.நாம் அறிந்த ,அறியாத கதைகள் ,கதைசொல்லியின் வாயிலாக விவரிக்கப் படும்போது ,நாமும் அந்தக் கணத்தில் அவர்களுடனே இருப்பது போன்ற உணர்வை எஸ்.ராவால் மட்டுமே தரமுடியும்.

கௌரவர்களின் முடிவு நாம் அறிந்ததே ,மற்ற பாத்திரங்களின் முடிவையும் ,குறிப்பாக திருதிராஷ்டிரன்,காந்தாரி-குந்தி மற்றும் பாண்டவர்கள் ஆகியோரது முடிவுகள் விவரிக்கப் பட்டிருக்கும் விதம் அருமை. வெறும் கதையென்று ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு காட்சிகளும் ,கதைமாந்தர்களின் மனோபாவமும் நம்முடன் பின்னிப் பிணைந்து கொள்கின்றன.கதையை முடித்த விதம் குறிப்பிடத்தக்கது.எஸ்.ராவிடம் இருந்து மற்றுமொரு சிறந்த எழுத்து.படிக்கவில்லையெனில் உடனே படித்து விடுங்கள்.

16 comments:

சங்கர் said...

//கேட்கவும் படிக்கவும் சலிக்காதது புராணக் கதைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.//

விஜய் டிவியில் மகாபாரத சொற்பொழிவு பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் இந்த பதிவை பார்க்க நேர்ந்ததை என்னவென்று சொல்ல, அருமையான புத்தகம், நல்லஅறிமுகம்

Anbu said...

சீக்கிரம் படிக்கிறேன் அண்ணா

வானம்பாடிகள் said...

அறியத் தந்தமைக்கு நன்றி ஸ்ரீ

இராகவன் நைஜிரியா said...

நன்றி ஸ்ரீ...

அழகான விமர்சனம். புத்தகத்தை படிக்க ஆவலாக இருக்கின்றேன்.

டம்பி மேவீ said...

ஸ்ரீ... அருமையான விமர்சனம்; உபபாண்டவம் படிக்க வேண்டிய புத்தகம் தான் போல் இருக்கு.

எல்லா நாடுகளிலும் மஹாபாரதம் போல் ஒரு கதை இருக்கு.

ரோமன் நாட்டு கதை ஒற்றை சமீபத்தில் தான் படித்தேன்

தண்டோரா ...... said...

நான் படித்து நாட்கள் ஆயிற்று

வால்பையன் said...

படிச்சிருவோம்!

பாலகுமார் said...

படிக்கனும் !

நேசமித்ரன் said...

அருமையான புத்தகம

நல்லஅறிமுகம்

வாசித்து நாள் ஆன போதும் மீள்வாசிப்பிற்கு தூண்டியது உங்கள் விமரசனம்

cheena (சீனா) said...

படிச்சிடுவோம்

ஸ்ரீ said...

நன்றி சங்கர்,
நன்றி அன்பு,
நன்றி வானம்பாடிகள்,
நன்றி ராகவன் சார்,
நன்றி மேவீ ,
நன்றி தண்டோரா,
நன்றி வால்,
நன்றி பாலகுமார்,
நன்றி நேசமித்ரன்,
நன்றி சீனா அய்யா.

புலவன் புலிகேசி said...

பகிர்தலுக்கு நன்றி..

ஸ்ரீராம். said...

எஸ்.ரா எழுத்து நன்றாக இருக்கக் கேட்கணுமா என்ன?

ஸ்ரீ said...

நன்றி புலிகேசி.
சரிதான்.நன்றி ஸ்ரீராம்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்தான் - எழுத்து நடை சிலாகித்து சொல்ல வேண்டிய விஷயம். இந்த வருட புத்தக சந்தைக்காக காத்திருக்கும் வரிசையில் இதுவும் இருக்கு.,.!

பா.ராஜாராம் said...

பகிர்தலுக்கு நன்றி ஸ்ரீ.எங்கே சவுதியில் படிக்க..