Sunday, October 25, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு 2009


பொதுவாக தொடர் பதிவுகள் எழுதுவதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. தனிப்பட்டு இதுதான் காரணம் என்று எதுவும் இல்லை. ஏனோ விருப்பமில்லை அவ்வளவுதான் .ஆனால் சீனா அய்யா அழைத்ததும் எனக்கு மறுக்கத் தோன்றவில்லை.எனவே இந்த இடுகை. இதைத் தொடர்வதில் உள்ள விதிமுறைகளுக்கு இங்கே செல்லவும்.
1)
உங்களைப் ற்றி சிறு குறிப்பு ?

சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இருப்பதாகத் தோணவில்லை.
இருந்தாலும் .......
சொந்த ஊர் மதுரை, படிப்பை முடித்தது இங்கேதான்.வேலை என்று சுற்றியது பல ஊர்கள்.தற்சமயம் ஒரு கல்லூரியில் வேலை.

2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?


பதினோரு ,பன்னிரண்டு வயதிருக்கலாம், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கையில் , தெனாவட்டாக கையில் வெடியை வைத்து திரியைக் கொளுத்தி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தேன் . ஏதோ யோசனையில் வெடியைப் பற்றவைத்து விட்டு ஊதுபத்தியை தூக்கிப் போட்டேன். அப்புறம் என்ன, விஷயம் மண்டைக்கு உறைப்பதற்கு முன்பாக வெடித்து விட்டது வெடி , இடது கையில்.
ஒன்றும் ஆகவில்லை .ஏனென்றால் அது ஊசி வெடி.இருந்தாலும் அது போன்ற சாகசங்களை சில வருடங்களுக்கு நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் வெடி வெடிப்பதில்லை.
இதைப் போல ஆசையாய் வாங்கிய சட்டை நெருப்பு பட்டு ஓட்டை விழுந்தது,முதன் முதலாக எனக்குப் பிடித்த கருப்பு நிறத்தில் தீபாவளி உடை அணிந்தது என்று பலது என்னால் மறக்க முடியாததுதான்.


3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

இங்கேயேதான் ,மதுரையில்.


4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

தீபாவளி கொண்டாடுவதிலெல்லாம் விருப்பம் குறைந்து விட்டது. குழந்தைகள் வெடி வெடிப்பதை பார்க்கத்தான் விருப்பம். வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன் . தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை.


5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?


எப்போதுமே ஆயத்த ஆடைதான் , தொடர்ந்து ஒரே கடை என்பதெல்லாம் கிடையாது,ஏதோ ஒரு கடை, பத்து முதல் பதினைந்து நிமிஷம்தான் என்னுடைய பர்ச்சேஸ் டைம் .

6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எதுவும் இல்லை.

7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தொலை பேசி.


8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

கூட்டம் என்றாலே அலர்ஜி . வெளியில் எங்கும் போக மாட்டேன். படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருந்தது.படித்துக் கொண்டிருந்தேன்.

9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம்?

குறிப்பிட்ட நாளில் மட்டும்தான் உதவி செய்வேன் என்றில்லை.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அப்பாவி முரு - http://abbaavi.blogspot.com/
அன்பு (த்தம்பி)-http://anbu-openheart.blogspot.com/
சொல்லரசன்-http://sollarasan.blogspot.com/
டக்ளஸ்(எ ) ராஜு-http://tucklasssu.blogspot.com/

18 comments:

வானம்பாடிகள் said...

உங்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி ஸ்ரீ.

cheena (சீனா) said...

இயல்பான பதில்கள் நண்பா ஸ்ரீ

நல்வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

மதுரையில் சந்தித்தபின், உங்களின் இந்த இடுகையைப் படித்த பின், உங்களை மறுபடியும் பார்த்த சந்தோஷம் வருகின்றது. நன்றி ஸ்ரீ.

தேவன் மாயம் said...

ஸ்ரீ! அடிக்கடி எழுதுங்க!

அப்பாவி முரு said...

பத்த வச்சுட்டியே பரட்டை...

ஸ்ரீ said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

தண்டோரா ...... said...

நன்றி..என்னை அழைக்காமைக்கு

ஸ்ரீராம். said...

ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு சுவாரஸ்யங்கள். அப்போது ஆர்வமாக இருந்த விஷயங்கள் காலம் செல்ல செல்ல திசை மாறி...எதை விரும்புகிறோம், எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல்...கிளறி விட்டதற்கு நன்றி ஸ்ரீ.

ஸ்ரீ said...

அழைக்காமல் இருந்ததற்கே நன்றியா? பின்னூட்டத்திற்கு நன்றி தண்டோரா .

ஸ்ரீ said...

சுவாரசியங்கள்/விருப்பங்கள் மாறத்தான் செய்கிறது ஸ்ரீராம்.அதனால்தான் வாழ்க்கை என்பது சுவாரசியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன் .நன்றி.

பீர் | Peer said...

யதார்த்தம் :)

வால்பையன் said...

இந்த தீபாவளிக்கு பிகருடன் என்ன படத்துக்கு போனீர்கள்!?

இந்த மாதிரி முக்கிய கேள்விகளை கேளுங்கப்பா!

Anbu said...

என்னை அழைத்தமைக்கு நன்றி அண்ணா..

sollarasan said...

என்னையுமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))

புலவன் புலிகேசி said...

உங்களைப் பற்றிய அறிமுகம்.நன்று...

பா.ராஜாராம் said...

உங்களுக்கு ஒரு தொடர் அழைப்பு இருக்கு,நம் தளத்தில் மக்கா..

RAMYA said...

:-))