Tuesday, September 29, 2009

அமினா..


உலகம் முழுதும் பெண்களின் வாழ்க்கை ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆதிகாலம் முதல் இன்று வரை பெண் எதையேனும், யாரையேனும் எதிர்த்துப் போராடிக் கொண்டேதான் இருக்கிறாள். சமூக அமைப்பு என்ற பெயரால் நசுக்கப்படுவதை எதிர்த்தோ, ஆதிக்கம் செலுத்தும் ஆண் வர்க்கத்தை எதிர்த்தோ.. அவளுடைய போராட்டம் தீராத ஒன்றாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விடுதலை என்னும் இலக்கு ஒன்று இருந்தாலும், அதை அடையும் சாலை மட்டும் இன்னமும் முடிவே பெறாது நீண்டு கொண்டே இருக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளாக.

மதம், சாதி, மொழி, நாடு என பல்வேறுபட்ட கூறுகள் மனிதனை பிரிவினைப்படுத்தி இருந்தாலும் உலகளாவிய மனோபாவமாக அமைந்து விட்டது, ஆணுக்குப் பெண் அடிமை என்ற கருத்து. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் உலகில் எந்த ஆணுமே வேறுபடுவதில்லை. நான் என் மனைவிக்கு எல்லாவித சுதந்திரங்களையும் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்லுகிற ஆணிடமும் ஆணாதிக்கம் இல்லாமல் இல்லை. "நான் சுதந்திரம் தருகிறேன்" என்று சொல்வதே ஆணாதிக்கம் தான். ஆண் எப்படி சுதந்திரத்துடன் பிறக்கிறானோ, அதேபோலத்தான் பெண்ணும். யாரும் யாருக்கும் சுதந்திரத்தை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.தனிநபருக்கு உட்பட்ட பகையோ, அல்லது இரு நாடுகளுக்கு இடையேயான போரோ முதலில் பாதிக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் பெண்கள்தான்.

அமினா என்கிற இந்த நாவல், தன்னைப் போலவே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் ஒரு இஸ்லாமியப் பெண்ணின் கதை. சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசியல் பதவியும், செல்வாக்கும் மிக்க ஒருவருக்கு நான்காவது மனைவியாக (அவனுடைய வெற்றியைக் கொண்டாட), ஒரு பரிசைப் போல மணம் செய்விக்கப்படுகிறாள் அமினா. கணவனின் சந்தேக புத்தியால் தண்டிக்கப்பட்டு, தன்னுடைய ஆறு மாத குழந்தையையும் பறிகொடுத்து நிற்பவளின் கண்கள் அவளுடைய தோழியான பாத்திமா என்பவளால் திறக்கப்படுகிறது. தன்னைச் சுற்றி இருக்கும் எல்லாப் பெண்களுக்கும் இதே நிலைதான் என்பதை உணர்ந்து, ஒரு பெண்களுக்கான அமைப்பை ஆரம்பித்து அறவழியில் போராடுகிறாள். மதம், அரசியல் என இரு பக்கங்களில் இருந்தும் அவளுக்கு வரக்கூடிய எதிர்ப்பை சமாளிக்கிறாள்.

அமினாவின் கணவன் அல்ஹாஜி ஹரூனா, பாட்டர், குலு போன்ற மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் ஆட்களுக்கு எதிரான போராட்டமாகவும், ஷரியத் என்று சொல்லப்படும் பெண்களை நசுக்கும் சட்ட அமைப்புக்கு எதிரான போராட்டமாகவும் அது அமைகிறது. நாவலில் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டப்படுவது, நைஜீரியாவின் நாட்டுப்பற்றில்லாத அரசியல்வாதிகளும், மதத்தின் பேரால் நடத்தப்படும் பெண்களின் மீதான அடக்குமுறையும், நாட்டின் வளங்களைச் சுரண்டும் வியாபாரிகளும், இவர்களை அண்டிப் பிழைக்கும் விவசாயிகளும், கூலிகளாக இருக்கும் முதுகெலும்பற்ற ஆண்களும் தான்.

இந்த நாவல், நைஜீரியாவில் பிறந்து, ருஷ்யா மற்றும் ஐரோப்பாவில் பட்டம் பெற்று, லண்டனில் வசித்து வரும் முகமது உமர் என்பவரால் எழுதப்பட்ட முதல் நாவல். எளிமையான நடை. நாவலின் பலமும் பலவீனமும் அதுவே. இதுவரை உலகின் 29 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலை, தமிழில் மொழிபெயர்த்து கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தமிழில் மொழியாக்கம் செய்து இருப்பவர் தருமி. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இயற்பெயர் - சாம் ஜார்ஜ். தற்போது பதிவுலகில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமூக அக்கறை கொண்டவர். பதிவுலகை சேர்ந்த நம் நண்பர் இந்தப் புத்தகத்தை மொழியாக்கம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

அமினா

Kizakku,
New Horizon Media Pvt. Ltd;
No. 33/15 Eldams Road,
Alwarpet, Chennai -18

e-mail: support@nhm.in

பக்கங்கள்: 368

விலை: Rs. 200

34 comments:

வானம்பாடிகள் said...

தகவலுக்கு நன்றி ஸ்ரீ.

தேவன் மாயம் said...

பலர் அறியத்தந்ததற்கு நன்றி!

சென்ஷி said...

அமீனா புத்தகம் பற்றிய முதல் விமர்சனம்ன்னு நினைக்கறேன். தருமி அய்யாவுக்கு வாழ்த்துக்கள் இங்க தெரிவிச்சுக்கறேன்.

கிழக்கிலிருந்து இன்னொரு சூரியன் :)

தண்டோரா ...... said...

படிச்சிடலாம்..(காசு கொடுத்து வாங்கித்தான்)

குமரை நிலாவன் said...

நன்றி ஸ்ரீ.

க.பாலாஜி said...

தேவையான சிந்தனை பகிர்வு அன்பரே...

நன்றி...

நேசமித்ரன் said...

இந்தப் புத்தகம் இங்கு ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்
நல்ல பகிர்வு ஸ்ரீ

நேசமித்ரன்
நைஜீரியா

ஸ்ரீ said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

லைப்ரரியில் தேடித் பார்க்க வேண்டும். தருமி சாருக்கு வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//"நான் சுதந்திரம் தருகிறேன்" என்று சொல்வதே ஆணாதிக்கம் தான். //

அருமையான வார்த்தை!
நாம் யார் சுதந்திரம் கொடுக்க, இருப்பதை பிடுங்காமல் இருந்தால் சரி!

வால்பையன் said...

தருமி அய்யாவுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்!

ஸ்ரீ said...

அந்த பதிப்பு நூலகத்துக்கு வருவதற்கு வெகு நாட்களாகும் ஸ்ரீராம்.வாங்கிப் படித்து விடுங்கள்.

ஸ்ரீ said...

நன்றி வால்.

Anbu said...

தகவலுக்கு நன்றி அண்ணா..

தருமி said...

நூல்குறிப்புக்காக ஸ்ரீதருக்கும், வாழ்த்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

//"நான் சுதந்திரம் தருகிறேன்" என்று சொல்வதே ஆணாதிக்கம் தான். //

நல்ல பகிர்வு ஸ்ரீ....

ஆ.ஞானசேகரன் said...

தருமி ஐயாவிற்கு வாழ்த்துகள்

ஊர்சுற்றி said...

தகவலுக்கு நன்றி.

gulf-tamilan said...

தருமிக்கு வாழ்த்துகள்!!!

ஜெரி ஈசானந்தா. said...

தருமி ஐயாவுக்கும்,ஸ்ரீக்கும் வாழ்த்துகள். மற்றும் நன்றி.

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் தருமி சார்...!!!!!

Eswari said...

//ஆதிகாலம் முதல் இன்று வரை பெண் எதையேனும், யாரையேனும் எதிர்த்துப் போராடிக் கொண்டேதான் இருக்கிறாள். //

வாழ்வென்றால் போராடும் போர்களமே...

யாத்ரா said...

ரொம்ப நல்ல அறிமுகம் நண்பா, பகிர்வுக்கு நன்றி.

kanagu said...

naan padika vendum endru nenaithu vaithirukkum puthagam..

Krishna Prabhu said...

அறிமுகத்திற்கு நன்றி ஸ்ரீ

ஸ்ரீ said...

நன்றி நண்பர்களே.

RAMYA said...

அமீனா புத்தகம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி ஸ்ரீ
இந்த புத்தகம் நான் படித்ததில்லை
முயற்சித்து வாங்கி படிக்கிறேன்!!

RAMYA said...

//
ஆதிகாலம் முதல் இன்று வரை பெண் எதையேனும், யாரையேனும் எதிர்த்துப் போராடிக் கொண்டேதான் இருக்கிறாள்.
//

சரியாச் சொன்னீங்க போராட்டம் போராட்டம்தான் வாழ்க்கையாகிப் போனது ஸ்ரீ!

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல நூலறிமுகம்

செல்வேந்திரன் said...

ஸ்ரீ நல்ல அறிமுகம். அடுத்தமுறை மதுரை வரும்போது தருமி அவர்களையும் சந்திக்க விருப்பம்.

ஸ்ரீ said...

நன்றி செல்வேந்திரன் ,
நன்றி ரம்யா,
நன்றி திரு.குணசீலன்.

விக்னேஷ்வரி said...

நாவலின் விமர்சனும், அதற்கு முன் பெண் விடுதலை பற்றிய உங்கள் கருத்துகளும் அருமை. சீக்கிரம் படிக்க முயற்சிக்கிறேன்.

RAMYA said...
This comment has been removed by the author.
முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

இப்போதுதான் கேள்விபடுகிறேன். இந்த புத்தகத்தையும் வாங்க வேண்டும். படிக்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது உங்கள் பதிவு.