Thursday, September 24, 2009

இதுவுமது....

ஆளுயரக் கத்தி அது ,
வழி வழியாய் வந்தது
முகம் காட்டும் பளபளப்பில்
இருபுறமும் கூர்மையாய்.
வைத்துக் கொள்ளுங்கள்
இது நம் பரம்பரை சொத்து
என்றான் என் பாட்டன்.
அப்பன் தொட மறுத்து விட்டான்,
நான் கண்ணெடுத்தும்
பார்க்கவில்லை.
ஓர் அரசனுக்குப் பதாகையும்
கிரீடமும் போல நமக்கிது
மறுக்கவேண்டாம்
அடையாளமின்றி அழிந்து போவீர்கள்
என்றான் என் பாட்டன்
நான் தகப்பன் முகம் பார்த்தேன்
அவன் மறுதலிக்கவே
நானும் உறுதியாய் நின்றேன்
பாட்டன் சிரித்தபடி விலகிப் போனான்
நேற்று வீதியில் நடந்து போகையில்
கடந்து சென்றவன் கையில்
அதைப் பார்த்தேன்.

21 comments:

கதிர் - ஈரோடு said...

சரி அவனுடைய பேரனாவது உங்களைப் போலவே அதைக் கைவிடட்டும்

♠ ராஜு ♠ said...

புரிஞ்சது அண்ணே...!
:-)

வானம்பாடிகள் said...

/கதிர் - ஈரோடு said...
சரி அவனுடைய பேரனாவது உங்களைப் போலவே அதைக் கைவிடட்டும்/

வழிமொழிகிறேன்

பட்டிக்காட்டான்.. said...

//..வானம்பாடிகள் said...

/கதிர் - ஈரோடு said...
சரி அவனுடைய பேரனாவது உங்களைப் போலவே அதைக் கைவிடட்டும்/

வழிமொழிகிறேன் ..//

நானும்தான்..

கதிர் - ஈரோடு said...

//பட்டிக்காட்டான்.. said...
//..வானம்பாடிகள் said...

/கதிர் - ஈரோடு said...
சரி அவனுடைய பேரனாவது உங்களைப் போலவே அதைக் கைவிடட்டும்/

வழிமொழிகிறேன் ..//

நானும்தான்..

//

நானும்தான்..


அட... நான் தான் முதல்ல சொன்னேனா!!!???

கார்த்திகைப் பாண்டியன் said...

நாம் நாமாகவே இருப்போம் நண்பா..:-))

பழமைபேசி said...

ஃகா! பலே, பலே!!

ஆரூரன் விசுவநாதன் said...

வசீகர வரிகள்
வாழ்த்துக்கள்
ஆரூரன்

தேவன் மாயம் said...

எவனாவது ஒருத்தன் தூக்கிக்கிட்டேதான் இருப்பான்!!! நாம் கடந்து போவோம்!!

இரா.சிவக்குமரன் said...

ம்,,,,

அத்திரி said...

ம்ம்ம்ம்ம்ம்.................. புரியுது

வால்பையன் said...

நெத்தியடி!

சொல்லரசன் said...

நானும் உறுதியாய் நின்றேன்

ஒற்றைவரி பதில்,சுய அடையாளமே போதும் ஸ்ரீ

ஸ்ரீராம். said...

பதிவர் சந்திப்பில் என்ன பேசினீர்கள்? படங்களை திரு. தருமி பக்கத்தில் பார்த்தேன். வழக்கமாக இது போன்ற சந்திப்புகளில் என்னென்ன பேசுவீர்கள்? பா........தா.....கவிதை பொதுவாக எழுதப் பட்டது என்று நீங்கள் கூறினாலும் அது இது போன்ற பதிவர்கள் சந்திப்பில் நடந்திருக்காது என்று நம்புகிறேன்....மதுரையில் Readers club meetings போவதுண்டா?
கவிதைகள் நன்றாக இருக்கின்றன...

செந்தில் நாதன் said...

//..வானம்பாடிகள் said...

/கதிர் - ஈரோடு said...
சரி அவனுடைய பேரனாவது உங்களைப் போலவே அதைக் கைவிடட்டும்/

வழிமொழிகிறேன் ..//

நானும்....

ஸ்ரீ said...

பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

ஸ்ரீ said...

திரு.ஸ்ரீராம்,
அந்தக் கவிதை எழுதப்பட்டது பொதுவாகத்தான். உண்மையில் அதே மனநிலையில் இருக்கும் எல்லோருக்கும் அது எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்திருக்கிறது. பதிவர்கள் சந்திப்பில் என்னை யாரும் அப்படி நடத்தவில்லை (மதுரைப் பதிவர் சந்திப்பில்) .பொதுவான விஷயங்களே விவாதிக்கப்படும். சொல்லப்போனால் அறிமுகங்களுக்காக நடத்தப்படும் கூட்டம் அது. ஆனால் இந்த முறை நடந்த சந்திப்பு சற்றே வித்தியாசமானது. தருமி அய்யா மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகிய இருவரும் ஒரு நல்ல காரியத்தை முன்நின்று நடத்தப் போகிறார்கள், மற்ற பதிவர்கள் உதவியுடன். அறிவிப்பு சீக்கிரத்தில்வெளியாகும்.

குமரை நிலாவன் said...

எவனாவது ஒருத்தன் தூக்கிக்கிட்டேதான் இருப்பான்!!! நாம் கடந்து போவோம்!!

பா.ராஜாராம் said...

மிக அருமையான கவிதை ஸ்ரீ. ரொம்ப பிடிச்சு இருக்கு.

பா.ராஜாராம் said...

நான்,உங்கள் அருகில்தான் ஸ்ரீ.சிவகங்கை.பணி புரிவது சவுதியில்.வயிறு படுத்தும் பாடு!

ஸ்ரீ said...

நன்றி திரு.பா.ராஜாராம். ஊருக்கு வரும்போது முடிந்தால் தகவல் கொடுங்கள் சந்திக்கலாம்.