Wednesday, September 23, 2009

முரண்

சந்திப்புகளின் போது
சிரித்த முகத்தோடு
அருகில் வந்து முகமன்
கூறினார் ,
முன்வந்து கைகுலுக்கியபோது
சிரித்தபடி அணைத்துக்
கொண்டார்,
அணைக்கையில் முதுகு தடவி
இறுக்கினார்
பாராட்டினால் மென்முருவலோடு
மறுதலித்தார்
இசங்கள் பேசினார்
இயங்கள் முழங்கினார்
பெண்ணியம் பெரிதென்றார்சாதியம் தவறென்றார்மனிதம் ஓங்க

ஒன்றுபடுவோம் என்றார்
எழுத்தில் கண்ணியம்
பேச்சில் நாகரிகம் கடைபிடி
எவரெழுத்தும்இகழாதே தொடர்ந்தெழுதிப் பயிற்சி செய்
என்றார்
சிலாகித்தும் ,சிரிப்பாகவும்
,
நகர்ந்து கொண்டிருந்தது
பரிச்சயம் ,
அது சரி ,இது தவறென
விவாதிக்கையில்
கருத்தைச் சொல்ல
முனைந்தபோது கூறினார்
"வாயை மூடுறா
பாப்பாரத் தா......ளி!".

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&74 comments:

♠ ராஜு ♠ said...

அண்ணே, இது இன்னுமா முடியல...?

கதிர் - ஈரோடு said...

ஏன் ஸ்ரீ...
இவ்வளவு கோபம்

வானம்பாடிகள் said...

இது மட்டும் மாறாதா?

ஸ்ரீ said...

இது யாரையும் தனியாக குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல .இந்த மனோபாவத்தில் இருக்கும் எல்லோருக்காகவும்.
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

butterfly Surya said...

ஸ்ரீ..cool my dear..

மாயவரத்தான்.... said...

//வாயை மூடுறா
பாப்பாரத் தா......ளி!//

நடுவுலே ஏதோ எழுத்து குறையுது போலருக்கே?!

Raja said...

அருமை.

பட்டிக்காட்டான்.. said...

போதுங்க..

முடியல.. :-(

அப்பாவி முரு said...

நாயக்குளிப்பாட்டி நடுவீட்டுல வச்ச கதைதான்...

அதுக்கு எப்பவுமோ நோக்கம் அது மேலதான்...

அது போலதான் இந்த மாதிரி ஆட்கள்.
என்ன பேசினாலும் கடைசியில் ஜாதி பார்த்தே தீர்வார்கள்.

இவர்களுக்காக கவலைப் படுவதை விடுத்து நம்ம வேலையைப் பார்க்க வேண்டியது தான்.

சொல்லரசன் said...

//இது யாரையும் தனியாக குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல .//

தலைப்பை பார்த்தவுடன் என‌க்கு சந்தேகம் வந்தது.உங்க பின்னுட்ட பதிலால் தெளிவானேன்

Cinema Virumbi said...

ஸ்ரீ ,

பேஷ்! பேஷ்! நன்னாச் சொன்னேள் போங்கோ !

அடுத்த பதிவு போடுங்கோ!

படிக்கக் காத்துண்டிருக்கேன்!

நன்றி!

சினிமா விரும்பி

http://cinemavirumbi.tamilblogs.com
http://cinemavirumbi.blogspot.com

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏன்?

Anonymous said...

டேய் நீங்க திருந்தவே மாட்டீங்களா? தமிழ்னாட்டுல உன்னோட சாதியில்ல, எல்லா சாதிக்காரனுக்கும் இதே நெலமதான் - அதுனாலதான் 7 கோடிப்பேர் இருந்தும் இலங்கைத்தமிழன காப்பாத்த முடியாமப் போச்சு. இதுக்கும்மேல இப்பிடித்தான் எழுதுவன்னா, அது உன்னோட நிம்மதிக்கு நீயே வெச்சுக்கற வேட்டு..

Anonymous said...

டேய் தண்டோரா, நீ அடங்கவே மாட்டியா? சீக்கிரமே பிரபலமாயிடுவ (கீழ்ப்பாக்கத்துல)

Anonymous said...

டேய் தண்டோரா, நீ அடங்கவே மாட்டியா? சீக்கிரமே பிரபலமாயிடுவ (கீழ்ப்பாக்கத்துல)

Anonymous said...

டேய் தண்டோரா, நீ அடங்கவே மாட்டியா? சீக்கிரமே பிரபலமாயிடுவ (கீழ்ப்பாக்கத்துல)

பீர் | Peer said...

வருத்தம் ஸ்ரீ, :(

கள்ளபிரான் said...

ஒரு காலத்தில் இப்படிப்பட்ட கவிதைகள் அவர்கள் எழுதினார்கள். இன்று நீங்கள் எழுதுகிறீர்கள். தலைவலியும்..திருகுவலியும்...

History repeats itself.

செந்தழல் ரவி said...

excellent.

சுவனப்பிரியன் said...

good post

பொய் முகம் said...

ரொம்ப நிஜமான கவிதை.
நிலைமை இது தான் இப்போது.
சாதி வெறி பிடித்து அலைவதில் அனைவரையும் மிஞ்சியவர்கள் பெரியார் திராவிடத் தோழர்கள்!
கொஞ்சம் உஷாராவே இருங்க!

pappu said...

ஸ்ரீ, நான் உங்கள கண்டுபிடிச்சிட்டேன்! -பப்பு.

sriram said...

ஸ்ரீ
இவனுங்களுக்கு பேச வக்கில்லன்னா கையில எடுக்குறது இந்த பாப்பான் ஆயுதம்.
ஏதோ ஒரு பதிவுல (எனக்கு நல்லா நியாபகம் இருக்கு ஆனா சொல்ல விரும்பல) இந்தியாவையும், அதன் தேசக் கொடியையும் அவமதிக்கக் கூடாது நான் சொன்னதுக்கு, நீ பாப்பான், அப்படித்தான் சொல்வன்னு சொன்னானுங்க.. இவனுங்கள திருத்தவே முடியாது.
ஓட்டுப் பொறுக்கிகள் போல இவனுங்க ஹிட்ஸ் / பின்னூட்டப் பொறுக்கிகள்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

தாங்கள் குறிப்பிட்டு இருந்தது உண்மை தான். வருத்த பட வேண்டிய விடயம்.

சாதி வெறியை எப்போது தான் ஒழிப்பமோ தமிழர்களே ?! :(

தண்டோரா ...... said...

/டேய் தண்டோரா, நீ அடங்கவே மாட்டியா? சீக்கிரமே பிரபலமாயிடுவ (கீழ்ப்பாக்கத்துல//

நீ அவன் தானே?

தண்டோரா ...... said...

//டேய் நீங்க திருந்தவே மாட்டீங்களா? தமிழ்னாட்டுல உன்னோட சாதியில்ல, எல்லா சாதிக்காரனுக்கும் இதே நெலமதான் - அதுனாலதான் 7 கோடிப்பேர் இருந்தும் இலங்கைத்தமிழன காப்பாத்த முடியாமப் போச்சு. இதுக்கும்மேல இப்பிடித்தான் எழுதுவன்னா, அது உன்னோட நிம்மதிக்கு நீயே வெச்சுக்கற வேட்டு..////

ஏன்... டா..மஞ்சள் துண்டு மகானை பார்த்து இந்த கேள்வியை கேட்கும் ஆண்மை உனக்கு உண்டா?

தண்டோரா ...... said...

இசை வேளாளர் கடைசியாய் பாடிய ஒப்பாரி யாருக்கு தெரியுமா?(நீ யார் என்பது தெரியாதவன்???)

enpaarvaiyil said...

போற்றுவார் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்
போகட்டும் அதை செய்பவர்களுக்கே

சி. கருணாகரசு said...

எது எப்படி இருந்தாலும் நீங்க நீங்களா இருங்கள் ஸ்ரீ.

தேவன் மாயம் said...

ஸ்ரீ!! நினைத்ததை எழுதும் உரிமை உங்களுக்கு உணடு!!! உங்கள் கருத்துக்களைத் துணிவுடன் சொல்லியிருக்கிறீர்கள்!!

பாராட்டுக்கள்!!

ஸ்ரீ said...

வலையுலக நண்பர்களுக்கு,
அனானியாக பின்னூட்டம் இடுவதைத் தடுத்திருக்கிறேன்.நான் என் கருத்தைச் சொன்னது போலவே நீங்களும் உங்கள் கருத்தை உங்கள் பெயருடனே சொல்லலாமே? பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி.

ஸ்ரீ said...

சினிமா விரும்பி,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி .எருதின் வலி காக்கைக்குத் தெரிய வாய்ப்பில்லை.இந்தப் பதிவு உங்களுக்கு பொழுதுபோக்கு ,எனக்கு வலி.

Mahesh said...

ஜூப்பரு....

ஸ்ரீ said...

அனானிக்கு,
ஆமாம் எல்லா சாதிக்காரனுக்கும் இதே நிலைமைதான்.எனக்குத் தெரிகிறது. மற்றவர்களுக்கு ?
இன்னமும் பார்ப்பனீய எதிர்ப்பு என்கிற கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர்களின் பதிவில் போய் இப்படி ஏக வசனத்தில் பின்னூட்டம் இடுங்களேன்.

ஸ்ரீ said...

திரு .கருணாகரசு,
நான் எப்போதும் நானாகத்தான் இருக்கிறேன். என்னுடைய அத்தனை நண்பர்களும் முஸ்லீம்கள்.என்னுடைய சாதியில் ஒரு நண்பன் கூட எனக்கு கிடையாது. நண்பர்களின் வீட்டில் சாப்பிட்டு வளர்ந்தவன்தான் நான் . ப்ராம்மணீயம் இப்போது இந்த தலைமுறையில் எங்களிடம் இல்லை ,அது கைமாறிவிட்டது.

ஸ்ரீ said...

பப்பு,
உங்களை சந்தித்த அதே நாளில் நான் உங்களைப் பிடித்து விட்டேன்.

ஸ்ரீ said...

ஆமாம் திரு .கள்ள பிரான், அவர்கள் அப்படித்தான் எழுதினார்கள்.இப்போது
நான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன். அடுத்த தலைமுறையிலாவது இருவருமே இப்படி எழுத வேண்டியஅவசியம் இருக்கக் கூடாது.

ஸ்ரீ said...

ஏன் கூடாது கார்த்திகைப் பாண்டியன்?

ஸ்ரீ said...

மாயவரத்தாரே,
என்ன எழுத்து குறைகிறது என்பது உங்களுக்கும் தெரியும். அதை நான் சொல்ல வேண்டியதில்லை .சினிமா விரும்பி என்பவருக்கு கொடுத்த பதில்தான்உங்களுக்கும்.

வால்பையன் said...

ஹாஹாஹா!

யாரப்பா அது!?

வால்பையன் said...

//நாகரிகம் கடைபிடி//

இதையும் சொல்லிபுட்டு தான்!
கடைசியில் அப்படியும் சொல்றானுங்களா!?

ம்ம்ம்ம்

கவிதை பொட்டில் அறைகிறது!

வேற சொல்லத்தெரியல!

Mãstän said...

<<<
"வாயை மூடுறா
பாப்பாரத் தா......ளி!".
>>>

ஒன்னுமே புரியலையே :( :((

:-(

கள்ளபிரான் said...

Boston Sriram!

In your blog, add a blog description:

'The responses to my blogpost is restricted only to brahmins and all others who are friends of brahamins".

After such a blunt restriction, I am sure, no such பின்னூட்டப் பொறுக்கிகள் will enter your blog; and you can be assured of a smooth sailing in placid waters. Even if they do, you will have that moral high ground to stand upon and return their abuse doubly strongly - isn't that you want? The readers will commend you. I will join them.

The following is for myself:

Had I been in your place, my reaction would be the same: to retaliate with stinging attack. But, in solitude, I will ask myself these questions:

Why are they so? What makes them so? Is it,as Jeyamohan has recently replied to his fan, Guru, that hatred is ingrained in them? Or, is it only with that negative emotion that they feed themselves upon? Shall we condemn simply as Jeyamohan has done - 'pigs wallowing in a gutter of hate'? Can we rest upon the comfortable consideration that they are bad and very bad, we are good, and very good?

So many questions, and I will travel into the maze of such questions, hopefully to find a answer that will convince them too: I will never lose hope, because, I believe, barring a few exceptions, all of us are basically good. To face such questions require moral courage.

Yours sincerely,
KaLLabiraan

Sri

You claim to be friend of so many non-paarppanars. You claim to have no feeling of caste in you. But your poem is incendiary and its motive questionable. It is not a way to build bridge between estranged brothers. Your action and you claim do not match.

Don’t play the mischief again.

Yours sincerely
KaLLabiran

கள்ளபிரான் said...

//ஏதோ ஒரு பதிவுல (எனக்கு நல்லா நியாபகம் இருக்கு ஆனா சொல்ல விரும்பல) இந்தியாவையும், அதன் தேசக் கொடியையும் அவமதிக்கக் கூடாது நான் சொன்னதுக்கு, நீ பாப்பான், அப்படித்தான் சொல்வன்னு சொன்னானுங்க.. இவனுங்கள திருத்தவே முடியாது.//

இவனுங்களை திருத்தமுடியுமா, முடியாதா? எனபதைப்பின்னர் பார்க்கலாம்.

முதல் கேள்வி, அவர்கள் மனங்களில், தேசியம் என்றால், பார்ப்பனருக்கு அல்வா சாப்பிட்றமாதிரி என்ற எண்ணம் எப்படி உருவானது?

வெறும் hatred for hatred sake? என்று செயமோகன் சொன்னதுபோல ஒரு குண்டுகட்டாய் அப்பொறுக்கிகளைக் கட்டி சமுத்திரத்தில் தூக்கி எறிந்துவிட்டு ‘ஒழிந்தார்கள் பொறுக்கிகள்’ என்று சொல்லிவிட்டு, நாம் தேசியத்தைப்பற்றி பேசபோய்விடலாமா ராம்?

நினைவுருக்கட்டும்: ஒருதடவை கா.நா.சு (இவர் பார்ப்பனர்) சொன்னார்: தமிழ்ப்பார்ப்பனர்கள், ஜாதீயம் வளர்க்க தேசியம் பேசுகிறார்கள் என்று.

கிடக்கட்ட்டும். ஏன் நாட்டுப்பற்று, இந்தியன் என்ற உணர்வு உங்களுடன் சேர்த்துப்பார்க்கப்படுகிறது அப்பொறுக்கிகளால்?

இதுமட்டுமல்ல ராம். பல செயல்கள், பார்ப்பனரோடு ஒட்டித்தான் பார்க்கப்படுகின்றன. இன்றல்ல, நேற்றல்ல, பல்லாண்டுகளால். ஏன்?
Many acts have become synonymous with Tamil brahmins in Tamil society.

I have recently posed some queries to the blogger going by the name Omkar swamigal to his post: Why only Brahmins celebrate Navraatri festival?

It is yet to be answered by him. You can answer me there. Because,
I am.

Yours famous or notorious பொறுக்கி.

கள்ளபிரான் said...

If patriotism is the desirable virtue in every one of us, why do they not feel patriotic?

And, why do you alone feel so?

What is patriotism?

Have you analyzed that?

To question certain things the state does or fails to do will make one unpatriotic?

Just because you don't question, are you more patriotic than பொறுக்கிs like me?

I will also point out here that the hindutava group feels 'patriotic' and accuse the muslims and christians of being 'unpatriotic'?

Have you got the point?

'PATRIOTISIM' has been given a new defintion.

I am afraid, பொறுக்கிS like me suspect that your patriotism is different from mine.

That is why, பொறுக்கிs like me, become பின்னூட்டப்பொறுக்கிS. This is just a guess. You can go ahead and explore deeper.

Yours famous or notorious
பின்னூட்டப்பொறுக்கி

SanjaiGandhi said...

அம்மாடீஈஈஈஈஈ...

தண்டோரா,
மன்னிக்க. உங்கள் பின்னூட்டம் வருத்தம் தருகிறது. யார் மீது கோபமோ அவரை குறித்து மட்டும் சாடுங்கள். அவர் அம்மா என்ன தவறு செய்தார்? அவரை ஏன் அசிங்கப் படுத்தறிங்க?. இந்த அனானியை மட்டும் திட்டுங்க. எபப்டி வேண்டுமானாலும். அவர் குடும்பத்தை வேண்டாம்.

கள்ளபிரான் said...

Sri

This is the first time I am here. I saw your blog description:

Life is simple. Mind is complicated.

True,very true, after all, it is your mind that you are telling us about, I presume.

Correct and grammatical.

If it is as follows:

"Life is simple. Mind is complex"

You get prose rhythm.

Sincerely,
KaLLabiran
KaLLabiran

sriram said...

Sri
Sorry for using your blog for this discussion, Since Kallapiran has responded to my comment
on your blog, I feel the need to straighten things with him..

அன்பின் கள்ளபிரான்
First let me make a thing clear to you. The incident I narrated did not happen in my blog,
in fact I didnot start writing at that time. That was about a post which praised a person's
action who brunt our (I say our not my) national flag. I commented on that blog saying that
we should not suport or praise the action of buring our national flag just becoz the congress
government is not helping the srilankan tamil's cause. (I am sure BJP wouldn't have done anything different)
இதுக்கு கெடச்சதுதான் பாப்பான் பட்டம்.

I do have a blogpage today and you cannot see a word which supports castes or castism. My comments are not moderated
so far and I allow all decent conversations. I dont intend to run a blog only for Brahmins. I wonder how you could
get such an Idea when I cannot even dream of that in the wildest of my dreams.

Writing this after a lot of deliberation. I support 10 kids financially for their education and only 2 out of that
10 are Brahmins, I dont look at the caste but I look at their score card.

Since I was born in a Brahmin family I am a Brahmin. I have nothing to boast about it nor anything to be ashamed
about it. That said, I cannot digest this rotten attitude of Gross Generalization.

Sri has already said about his friends. I have said this many times in my comments- I grew up in Metro environment
never ever thought about castes. At the same time I have not gone through the pains of being neglected either...

My so called Non - Brahmin friends (includes Christians, Muslims, Sikhs, Jews) will out number my Brahmin friends
by hundreds. I have never practised untouchability in my life and even my parents did not differentiate my NB friends
from my B friends. All my blog friends would vouch for my stance on this issue.

As this post and my comment are about labelling Brahmins, changing the topic to Patriotism is unwarranted. I refuse
to get into an argument on this, I don't need to prove my Patriotism to anyone.....

என் எண்ணங்களை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியதால், கோர்வையாக இல்லை.

enpaarvaiyil said...

அலைகள் என்றும் ஓயப்போவதில்லை.
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு
என்ற குறள்தான் இந்த விவாதங்களுக்கு பதிலாக இருக்க முடியும்

கோவி.கண்ணன் said...

திருட்டு மோசமானத் தொழில்,

திருடாதே பாப்பா திருடாதே ...

என்றெல்லாம் பாடிக் கொண்டு ஆள்நடமாட்டமில்லாத தெருவில் செல்கிறீர்கள்,

நாய் குறைக்கிறது, பாட்டை நிறுத்துவிட்டு நடந்து கொண்டு இருக்கிறீர்கள், வெகு அருகில் நாய் குறைக்குது......

இரவு பத்து மணி இருக்கும் லேசான இருட்டு தான்,

ஒருவன் பூட்டி இருக்கும் வீட்டின் பின்பக்கம் காம்பவுண்ட் சுவரின் வழியாக பெரிய துணி மூட்டையுடன் வெளியே குதிக்கிறான், தூரத்தில் மற்றொருவர் பார்த்துவிட்டு 'திருடன்...திருடன்' என்று கத்துகிறான். திருடியவன் உங்களையும் கடந்து ஓடுகிறான், உங்களுக்கும் இப்போது அவன் திருடன் தான் என்று தெரிந்திவிட்டது, அவனைத் துறத்துகிறீர்கள் ?

இப்போது நீங்கல் 'திருடாதே தம்பி திருடாதே...' என்று அவனுக்கு அறிவுரை கூறுவீர்களா ?

இல்லை நீங்களும் அவனை துறத்தியபடி 'திருடன் திருடன்' என்று கத்திக் கொண்டு இருப்பீர்களா ?


- என்னைப் பொருத்து சாதியைப் பெருமையாக வெளியே சொல்லுபவன் தூற்றப்படுவதில் தப்பே இல்லை.

வால்பையன் said...

கோவிஜி திருடனுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் விளக்கவும் எனக்கு புரியவில்லை!

சாதியை சொல்வதே தவறா, பெருமையாக சொல்வது தவறா!?

கோவி.கண்ணன் said...

//வால்பையன் said...
கோவிஜி திருடனுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம் விளக்கவும் எனக்கு புரியவில்லை!

சாதியை சொல்வதே தவறா, பெருமையாக சொல்வது தவறா!?
//

சாதியின் பெயரில் பெருமை தேடுபவர்களை அதைச் சொல்லித் தானே தூற்ற முடியும் ?

வால்பையன் said...

திரும்பவும் கேட்கிறேன்!

சாதியை சொல்வதே தவறா!?

பெருமையாக சொல்வது தவறா?!

சரியான பதில் தேவை!

SanjaiGandhi said...

இந்த வால்பையனுக்கு அந்த ராமசாமி நாயக்கர் தான் நல்ல புத்தி குடுக்கனும்.. :)

Vijayan said...

thiru.sri avargalukku vanakkam.neenga ezhuthiyadhu unmai.ella non-bramananum bramana dhuvesi alla,ippodhu dhuvesam adhigam agierukkirathu karanam annadorai matrum karunanidhi pondra theeyasakthigalai rajaji ponra bramanargal koottu vaithu valarthuvittadhu than.vizzy.

enpaarvaiyil said...

ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வெறுப்பதற்கு அடிப்படை காரணம் பயம்தான்
அதற்க்கு அவன் பயன்படுத்தும் கேடயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்

ஸ்ரீ said...

திரு .கள்ளபிரான் அவர்களுக்கு,
முதலில் உங்கள் அளவுக்கு எனக்கு ஆங்கில அறிவு இல்லை என்பதைச் சொல்லி விடுகிறேன்.இந்தப் பின்னூட்டத்தை தமிழில் எழுதியிருந்தால் படிக்க வசதியாக இருந்திருக்கும்.புரிந்து கொண்ட வரையில் பதில் சொல்லுகிறேன். என் பரம்பரையில் யாரோ செய்த தவறை வைத்துக் கொண்டு என்னை அளவிடுவது சரியா? ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவரை தண்டிக்க முடியுமா? அப்படியென்றால் எல்லோரும் சமம்தான் என்று நினைக்கும் என்னைப் போன்றவர்கள் திட்டு வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? நான் பாப்பான் நீ தள்ளி நில்லு என்று சொல்பவர்களைச் சாடுங்கள். நான் வரவேற்கிறேன். ஆனால் பிராமணப் பெற்றோர்களுக்குப் பிறந்ததனாலேயே என்னைப் பற்றி தெரியாமலேயே என்னையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் எதுவும் சொல்லக் கூடாதா? அப்படிச் சொல்லுகிறவர்கள் மீது எனக்குக் கோபம் வருகிறதே என்ன செய்யட்டும்? என் எழுத்துக்கும் நடவடிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. திருடாதவனைப் பார்த்து திருடன் என்று சொன்னால் வருகிற கோபம்தான் இது.
அப்புறம் mind is complicated என்றுதான் ஒரு புத்தகத்தில் பார்த்தேன் .பிடித்திருந்தது.உபயோகப் படுத்திக் கொண்டேன்.யார் சொன்னது என்பதெல்லாம் ஞாபகம் இல்லை.இருந்தாலும் நீங்கள் சொல்வது கவிதை நடையில் இருக்கும் என்பதால் சொல்கிறீர்களா? அல்லது அதில் இலக்கணப் பிழை எதுவும்இருக்கிறதா?

ஸ்ரீ said...

திரு .கோவி அவர்களுக்கு,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை . நேரடியாகவே கேட்டிருக்கலாம்.ஆனால் நீங்கள் சொன்ன ஒரு கருத்துக்கு உடன்படுகிறேன். சாதியை பெருமையாகக் கருதினால் அது கண்டிக்கப்படவேண்டியதே.

ஸ்ரீ said...

தண்டோரா அவர்கள் தொலைபேசியில் சொன்னபடி அவர் அனானிக்கு எதிராக இடப்பட்ட பின்னூட்டத்தை எடுத்து விட்டேன். பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும்நன்றி.

sriram said...

ஸ்ரீ
கள்ளபிரானுக்கான என்னுடைய பதிலை படிச்சீங்களா? உங்க கடைசி பதிலும் அதுவும் ஒரே அலைவரிசையில் இருப்பதை பார்த்தீங்களா?

//Since I was born in a Brahmin family I am a Brahmin. I have nothing to boast about it nor anything to be ashamed
about it. That said, I cannot digest this rotten attitude of Gross Generalization.//

//ஆனால் பிராமணப் பெற்றோர்களுக்குப் பிறந்ததனாலேயே என்னைப் பற்றி தெரியாமலேயே என்னையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் எதுவும் சொல்லக் கூடாதா? அப்படிச் சொல்லுகிறவர்கள் மீது எனக்குக் கோபம் வருகிறதே என்ன செய்யட்டும்? //

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்
நாண் நன்நயம் செய்துவிடல்.

நம்மை இவர்கள் புரிந்து கொள்ளும் காலமும் வரும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

ஸ்ரீ said...

ஆமாம் ,ஸ்ரீராம் இப்போதுதான் முழுவதுமாகப் படித்தேன் .என்னுடைய வாதமும் அதுதான் . நீங்கள் என்னுடைய ப்ளாக்கில் இந்த விவாதம் நடப்பதற்காக வருத்தம் தெரிவித்திருந்தீர்கள். இதில் தவறென்ன இருக்கிறது. இந்த விஷயத்தை யாரும் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். சமீபத்தில் எனக்கு நடந்த ஒரு சம்பவமும் ,வலைப் பக்கங்களில் நடக்கும் விவாதங்களும்தான் என்னை இதைப் பற்றி எழுதத் தூண்டியது.உங்களுடைய கருத்துகளுக்கும் பின்னூட்டங்களுக்கும். நன்றி .

கல்வெட்டு said...

ஸ்ரீ said...
//ஆனால் பிராமணப் பெற்றோர்களுக்குப் பிறந்ததனாலேயே என்னைப் பற்றி தெரியாமலேயே என்னையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் எதுவும் சொல்லக் கூடாதா?//

வருத்தமானது ஸ்ரீ.

பெற்றோர்கள் சாதியைக் கடைபிடித்தார்கள் என்பதற்காக, சாதியைத் துறந்து எந்தவிதமான சாதிய‌ அடையாளங்களையும் நீங்கள் சுமக்காதிருக்கும் பட்சத்தில் உங்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது கண்டனத்திற்கு உரியது.

இளைய கவி said...

ரொம்ப கலக்கலா இருக்கு தல ... ஆனா இந்த ஜாதிவெறி புடிச்ச தா.......ளி!!! எல்லாம் திருத்தவே முடியாது!

கோவி.கண்ணன் said...

//ஸ்ரீ said...
திரு .கோவி அவர்களுக்கு,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை . நேரடியாகவே கேட்டிருக்கலாம்.ஆனால் நீங்கள் சொன்ன ஒரு கருத்துக்கு உடன்படுகிறேன். சாதியை பெருமையாகக் கருதினால் அது கண்டிக்கப்படவேண்டியதே.
//

:)

நன்றி !

நான் சொல்ல வந்தது 'திருடுவது பாவம், திருட்டுத் தொழில் தவறு' என்று சொல்லிக் கொண்டு செல்கிறீர்கள், வழியில் ஒருவன் பிக்பாக்கெட் அடிக்கிறான், எச்சரிக்கைக்காக 'திருடன்...திருடன்...பிடிங்க' என்று ஊரைக் கூட்ட மாட்டீர்களா ?

திருட்டு என்பதற்கு பதிலாக சாதி அல்லது சாதிப் பெருமைன்னு போட்டுபாருங்க.

தன் சாதி பெருமைக்குரியது என்று நினைப்பவன் தான் வெளியே சொல்கிறான். யாரவது உங்களிடம் அவர்களைப் பற்றி 'நான் ஒரு தோட்டி' என்று சொல்லி இருக்கிறார்களா ?

TBCD said...

//கல்வெட்டு said...

ஸ்ரீ said...
//ஆனால் பிராமணப் பெற்றோர்களுக்குப் பிறந்ததனாலேயே என்னைப் பற்றி தெரியாமலேயே என்னையும் அதே கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் எதுவும் சொல்லக் கூடாதா?//

வருத்தமானது ஸ்ரீ.

பெற்றோர்கள் சாதியைக் கடைபிடித்தார்கள் என்பதற்காக, சாதியைத் துறந்து எந்தவிதமான சாதிய‌ அடையாளங்களையும் நீங்கள் சுமக்காதிருக்கும் பட்சத்தில் உங்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது கண்டனத்திற்கு உரியது.
///

கவிதையில் சொல்லப்பட்டவரின் சட்டைக்குள் இருந்தது எந்த அடையாளம் ...?

அவருடைய வேலை தொடர்பான அடையாளமா...?

அல்லது சாதி தொடர்பான அடையாளமா...?

இளைய கவி said...

//கவிதையில் சொல்லப்பட்டவரின் சட்டைக்குள் இருந்தது எந்த அடையாளம் ...?

அவருடைய வேலை தொடர்பான அடையாளமா...?

அல்லது சாதி தொடர்பான அடையாளமா...?

//

எனக்கு தெரிஞ்சு சட்டைக்குள்ள பனியன் தான் இருக்கும், ஒரு வேளை இப்ப எல்லாம் சனியன் இருக்கோ என்னவோ ? என்ன வாலு கரெக்ட்டு தான ???

வால்பையன் said...

//எனக்கு தெரிஞ்சு சட்டைக்குள்ள பனியன் தான் இருக்கும், ஒரு வேளை இப்ப எல்லாம் சனியன் இருக்கோ என்னவோ ? என்ன வாலு கரெக்ட்டு தான ??? //

நீ சொன்னா கரைக்டா தான் இருக்கும் மச்சி!

தண்டோரா ...... said...

ஸ்ரீ..அனானிக்கு நான் இட்ட அநாகரிகமான பின்னூட்டத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறென்..நேற்று இனைய தொடர்பு இல்லாததால் நான் நீக்க முடியவில்லை..உங்களை நீக்க சொன்னேன்.
சாதியை வெளிப்படையாக சொல்வதில் எனக்கும் உடன் பாடில்லை..ஆனால் இந்த தலைமுறை மறந்தே போய்விட்ட ஒரு விஷ(ய)த்தை இவர்கள் சுட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.அந்த வருத்தம்தான்..கொஞ்சம் முரட்டுத்தனமான முன்கோபமும் காரணமாயிருக்கலாம்..எதுவாயினும் என் மீது தவறு இருக்கும் பட்சத்தில் சிறியேனை மன்னித்து அருள்க நண்பர்களே

தண்டோரா ...... said...

/பின்னிட்டடா அய்யரே//

இந்த பின்னுட்டத்திற்காக எனக்கு கொழுப்பு அதிகம்(ஒரு விகுதியுடன்)ஒருவரால் தரப்பட்டது..அதில் உண்மையிருந்ததாலும்,அவர் எனது நண்பர் என்பதாலும் நான் அதை ராவாக எடுத்துக் கொண்டேன்..நன்றி

தண்டோரா ...... said...

/டேய் தண்டோரா, நீ அடங்கவே மாட்டியா? சீக்கிரமே பிரபலமாயிடுவ (கீழ்ப்பாக்கத்துல//

நல்ல நோக்கம்யா அனானி அன்பரே..கீழ்பாக்கத்தில் இருக்கும் சிமெட்டரில அடக்கமாயிடுவே..ன்னு சொல்லாம விட்டியே...நன்றி அன்னியா...

jaisankar jaganathan said...

எல்லாம் சரி தல. ஜாதி இரண்டொழிய வேறில்லை.

வணக்கம்

jaisankar jaganathan said...

எல்லாம் சரி தல. ஜாதி இரண்டொழிய வேறில்லை.

வணக்கம்

ஜெகநாதன் said...

சாதியம் பற்றி ​பேச​வேண்டுமானால் பிராமணப் ப​சை ​வேண்டுமாயிருக்கிறது. பிராமணிய ஒழிப்பும் தீண்டா​மை ஓழிப்பும் ஒன்றென கற்பிதங் ​கொள்ளும் வகையில் ஒரு சமூக​மே மூளைச்சலவைச் ​செய்யப்பட்டிருக்கிறது! இந்த அசந்தர்ப்ப நிழலில் வட்டிக் ​கொடுமைக்கார ​சாதியும், நிலச்சுரண்டல் சாதியும், ரத்தக்களரி சாதிகளும் இனி​மையாய் பதுங்கி ஒதுங்கி வாழ்கின்றன.
​போங்கப்பா..!! நீங்கள் கண்டு​கொள்ளாத "பிராமண தலித்துக்கள்" என்று ஒடுங்கும் ஒரு தனியின​மே உண்டு!

யாருக்காவது ​​தெரியுமா?

(அ​​தே​​போல்.. கவர்​மெண்ட் பிராமணன் என்று ஓங்கும் ஒரு இனமும் இங்குண்டு.. அதுவாவது ​​தெரியுமா???)

கள்ளபிரான் said...

I regret the procrastination.

@ என் பரம்பரையில் யாரோ செய்த தவறை வைத்துக் கொண்டு என்னை அளவிடுவது சரியா? ஒருவர் செய்த தவறுக்காக இன்னொருவரை தண்டிக்க முடியுமா?

It is a general complaint.

In society we are often seen as a member of a group. For omissions and commissions of a group, anyone from that group will be taken to task, by those who are affected by the omissions and commissions.

In North Indian cities like Delhi, any clumsy fellow is called 'Bihari'. A Punjabi is not befriended because, in general opinion, a Punjabi focuses on money only.

So, if people, I mean, some non-brahmin Tamils gives you a bad treatment, it is the bad treatment of a STEREOTYPE which they don't want to go near.

It is claimed that this generation of Tamil brahmins is different from the earlier generations. On reading different bloggers of your community, one comes to the conclusion that the present generation wants to preserve and perpetuate the traditions that they got from the earlier generations, which, deplorably include being aloof from the rest of society lest the traditions should get defiled or perverted. This mentality brings them into conflict with others.

If you don't believe me, have a glance at, for e.g., Tamilbrahmins.com. I saw there one Brahmins who defends Ambedkar and he was surrounded by other brahmins with negative criticism. One woman wrote there her parents told her that whatever bad Miss Jeyalalitha Jeyaraam does, they (Tamil brahmins) should support here as she is of their caste.

Take Jeyamohan, the writer. He is greatly lionized and lauded by the present generation not because of his merits as a writer of fiction, but because of his strong support using his word power, of brahminical traditions.

In the name of traditions viz. religious ceremonies, practices etc., such brahmins perpetuate the very things which had caused the animadversions against your community.

If someone reads such bloggers or such forums, he will start hating the Tamil brahmins; thereafter, if he comes across a brahmin like you, he may not like him although you and boston sriram are a different kettle of fish.

In a forum, I was stupefied to see a brahmin member saying that since Brahmins have created the Hindu religion, all should first give due respect to Brahmins before entering the temple. One brahmin wrote that the Tamil brahmins are broad minded enought to worship dalit saints!

According to him, the brahmins should have the first say in everything concerning the religion. Others, including dalits saints like Thirupanaazvaar and Nandanaar should get the approval of Tamil brahmins. There is no such a feeling in their minds that in religion, they are one of the followers.

Such writers discredit your community in the eyes of others. If some politician exploits the situation, it is no surprise, isn't it?

As an individual, you may respect those who respect you and move away from those who are hostile to you; at the same time, not altering your basic principles and convictions as a good human - some of which you have adumbrated here in the feedback message.

We cant change the society we live in. Neither you nor I can change the thinking of our own people, let alone others. Why to break heads over things beyond our control?

Believe me or not, during my active life, that is about 40 years, I kept away from Tamil brahmins in all capacities. When unavoidable, I kept up just a functional relationship with them, prim and proper. There are, however, a few exceptions, that included only women who I consider on a different footing.

This was due to the earliest caste slurs I suffered under Tamil brahmins.

I lost nothing. I gained nothing. Good people to grow with comes from any community - my women brahmin friends, many of them are intellectuals and a few other men, of your community.

Similarly, you can benefit: keep off from the Non brahmins who used such word as you wrote here.

From me, just wishes only.

KaLLapiraan.