Monday, August 24, 2009

மதுரை புத்தகக் கண்காட்சிக்கு வாருங்கள்

வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்,

இம்மாத இறுதியில் மதுரையில் புத்தகக் கண்காட்சி நடக்கவிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். கண்காட்சியில் 30-31 ஆகிய இரு நாட்களிலும் உயிர்மை பதிப்பகத்தின் ஸ்டாலில் கவிஞர் திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களையும், எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதாவையும் பார்க்க முடியும் .எண்ணற்ற பதிப்பகங்கள்,புத்தகங்கள் என திருவிழா களைகட்டப் போகிறது.எல்லோரும் தவறாமல் வாருங்கள்.மதுரைக்கு வரும் வெளியூர் பதிவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தரக் காத்திருக்கிறோம் நானும் ,நண்பர் கார்த்திகைப் பாண்டியனும்,மற்ற மதுரைப் பதிவர்களும் .மற்றுமொரு சிறப்பாக கண்காட்சி நடை பெறும் அனைத்து நாட்களிலும் ,பழங்குடி ஓவியங்கள் ஆராய்ச்சியாளரும், ஓவியருமான திரு .K.T. காந்திராஜன் அவர்களின் புகைப்பட மற்றும் ஓவியக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அதைப் பற்றிய கவிஞர் நரனின் இடுகை இங்கே.
இந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் .
ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர்.
இந்தியாவின் மலைபகுதிகளிலும் , கோவில் நகரங்களிலும் ,குகை புறங்களிலும் சுற்றி அலைந்து

அங்கிருக்கும் சுவரோவியங்களையும் , பாறை ஓவியங்களையும் ,ஆதி பழங்குடி ஓவியங்களையும் ,
நிறைய மீட்டெடுப்பு செய்திருக்கிறார் .அவற்றை ஒரு குறும்படமாகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் .தற்பொழுதுமதுரையில் நடக்கவிருக்கும் புத்தக கண்காட்சி வளாகத்தில் "நான் மாட கூடல் " அரங்கில்
அவரின் ஒருங்கிணைப்பில் புகைப்ப
ட ,மற்றும் ஓவிய கண்காட்சி நடக்கவிருக்கிறது .
தமிழ் ஓவியம் மற்றும் மரபு சூழலில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும் .
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் .

தொடர்புக்கு

ஸ்ரீ-9360688993

கா.பா-9841432763

K.T.காந்திராஜன் -9840166590
gandhirajan@yahoo.com
23 comments:

கதிர் - ஈரோடு said...

வருகிறேன்.

விபரங்களை
அனுப்புங்கள் ஸ்ரீ

தண்டோரா ...... said...

ஸ்ரீ..நான் கண்டிப்பாக வருகிறேன்..

மதுரைக்கு வரும் வெளியூர் பதிவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தரக் காத்திருக்கிறோம் நானும் ,நண்பர் கார்த்திகைப் பாண்டியனும்,மற்ற மதுரைப் பதிவர்களும்??

பின்னிடுவோமில்ல..மாட்டிக்காதீங்க

ஸ்ரீ said...

29 ம் தேதியில் இருந்து கண்காட்சி ஆரம்பம்.வாருங்கள்.

நையாண்டி நைனா said...

Raittu nanbare... nadathunga.

Vaalthukkal.

தேவன் மாயம் said...

வந்து விடுகிறேன்!!

க. பாலாஜி said...

தங்களின் ஈரோட்டு புத்தகத்திருவிழா அனுபவம் எப்படி இருந்தது..

நானும் வர முயற்சிக்கிறேன்...

க. பாலாஜி (ஈரோடு)

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள்!

பழமைபேசி said...

மாப்பிள்ளைங்க கூடிக் குலாவுங்க....

தமிழ் பிரியன் said...

எத்தனை தேதி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது?. நான் 31 ந்தேதி தான் இந்தியா வ்ருகின்றேன்.

jerry eshananda. said...

உள்ளேன் ஐயா..

வால்பையன் said...

காந்திராஜனுக்காகவே வரணும் மச்சி!

ஸ்ரீ said...

நன்றி கதிர், தண்டோரா, நைனா,டாக்டர்,
நன்றி பாலாஜி -ஈரோடு புத்தகக் கண்காட்சி நன்றாக இருந்தது ,நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அதிகம் புத்தகங்கள் வாங்கினார்.
நன்றி வானம்பாடி,பழமை .
நன்றி தமிழ் 4 ம் தேதி வரை உள்ளது.
நன்றி ஜெர்ரி ,வால்.

பிரபா said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

butterfly Surya said...

ஸ்ரீ..நலமா..?? மதுரையில் மீண்டும் சந்திப்போம்..

ஸ்ரீ said...

நன்றி சூர்யா மதுரை வாருங்கள் சந்திப்போம்,நன்றி பிரபா உங்கள் வலைப்பக்கத்துக்கும் வருகிறேன்.

பாலகுமார் said...

சந்திப்போம் ஸ்ரீ !

ஸ்ரீ said...

நன்றி பாலகுமார்.உங்களையும் சந்திச்சு ரொம்ப நாளாச்சு.வாங்க.

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

சுந்தர் said...

நாளை சந்திப்போம்

செல்வேந்திரன் said...

ச்சும்மா சொல்லக்கூடாது... பலமான கவனிப்பு.

புத்தகம், இலக்கியம், எழுத்தாளர்களெல்லாம் தவிர்த்து பாசக்கார பதிவர்களைப் பார்க்கவேணும் இன்னம் கிளம்பாதவர்கள் உடனே டிக்கெட் போடலாம்!

ஸ்ரீ said...

நன்றி செல்வேந்திரன்.

பாரதிநேசன் said...

அன்பின் சிறீ
உங்கள் வரவேற்புக்கு நன்றி. மதுரை புத்தகக்கண்காட்சி சம்பந்தமான உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த மாபெரும் புத்தக சாகரத்தில் என்னைப்போன்ற ஆரம்ப
எழுத்தாளனின் நாவலும் "புலம்' என்ற காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது அறிந்து உள்ளம் குளிரும் சந்தோசம்
அடைகின்றேன். வெகுதொலைவில் உள்ள நாட்டுக்குப்போய்விட்ட ஒருமகனின் தாய் தன் மகன் போன ஊரிலிருந்து யார் வந்தாலும் என் மகனை அங்கே கண்டீர்களா ? என்று கேட்பதுபோல உங்களை போனில் இன்று கேட்டென். என் புத்தகத்தை கண்காட்சியில் கண்டால் சொல்லுங்கள் என்று.
குறையில்லைத்தானே.
அன்புடன்
கே.எஸ்.பாலச்சந்திரன்

எனது நாவலின் பெயர்
"கரையைத் தெடும் கட்டுமரங்கள்"

பாரதிநேசன் said...

மன்னியுங்கள்
"கரையைத் தேடும் கட்டுமரங்கள்"