Friday, July 24, 2009

ராவா அடிச்சது

நண்பர் திரு .பீர் அவர்கள் சுவாரஸ்யமான பதிவர் விருதை எனக்கு(ம்) வழங்கியிருக்கிறார்,அவருக்கு நன்றிகள். ரூல்படி அதை ஆறு பேருக்குக் கொடுக்க வேண்டுமாம், எனக்கு பதிவுலகில் தெரிந்ததே கொஞ்சப் பேர்கள்தான் ,அதில் பாதி பேர் ஏற்கெனவே வாங்கி விட்டார்கள். யாருக்கு கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் ,கூடிய சீக்கிரம் கொடுத்துவிடுகிறேன்.
***************
கடந்த 'சனி'க்கிழமையன்று வால்பையன் மதுரைக்கு வருகை புரிந்தார்.வழக்கம் போல குடியும் குடித்தனமுமாக இருந்த போதில் மலையே சரிந்தது போல் ஆளு மட்டை.கூட இருந்த அவரது நண்பர்கள் போட்ட சண்டையின் காரணமாக சபையிலிருந்து வெளிநடப்பு செய்து விட நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்த வாலை என் தலையில் கட்டிவிட்டு நடையைக் கட்டினார்கள். வண்டியில் உட்கார வைத்து மதுரையை உலா வந்து, சினிமாவுக்கு போகலாம் என்றவரை கோயம்புத்தூர் பஸ்ஸில் ஏற்றி உட்கார வைத்து அனுப்புவதற்குள் என் முதுகெலும்பு உடைந்து விட்டது போங்கள்.குரங்குக் குட்டி மாதிரி என் முதுகில்தான் தொற்றிக் கொண்டு வந்தான். மறுநாள் போன் போட்டு நான் எப்படி கோயம்புத்தூர் வந்தேன் என்று கேட்டது நல்ல காமெடி.சமீபத்தில் அவன் எழுதிய இடுகையில் சொன்ன எல்லா விஷயங்களையும் தவறாமல் நிறைவேற்றினான் (பாம்பின் கால் பாம்பறியும்). வாலுக்கு ஒரு அட்வைஸ் ."குடிக்காதேன்னு சொல்ல மாட்டேன்,சொன்னாலும் கேக்க மாட்ட,தயவு செய்து வெயிட்ட குறைக்க முடியுமா பாரு". முடியல.......
**********************
மறுநாள் கோவையில் நடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வேந்திரனுடன் பேச வேண்டும் என விருப்பப்பட்டு, வாலிடம் நம்பர் கேட்டேன் ,நானே பேச வைக்கிறேன் என்றவன் பேச வைத்தான்.போனை எடுத்ததும் என்ன நினைத்தாரோ நான் ஹலோ என்றதும் "லைன் சரியில்ல நான் அப்புறம் கூப்பிடுறேன்" என்று வைத்து விட்டார்,ஒருவேளை வாலு இருந்த நிலையில்தான் நானும் இருந்திருப்பேன் என்று நினைத்தாரோ என்னவோ.நான் அதிகம் விரும்பிப் படிக்கும் நபர்களில் அவரும் ஒருவர்.அவருடைய 'செல்லெனப்படுவது ' கதையை விகடனில் படித்தபோது அதிகம் ஈர்க்கப் பட்டேன். அப்போது எனக்கு 'முடியலத்துவம்' பற்றியெல்லாம் தெரியாது.இப்போது அவர் வலைப்பக்கத்தில் அதைப் படிக்க முடிந்தது,நல்ல எழுத்து ,பேசமுடியாமல் போய் விட்டதில் எனக்கு வருத்தம்.இதில் வாலுக்கு பங்குள்ளதா என்று தெரியவில்லை.
*************************
அன்பு ஒரு நல்ல காரியம் செய்வதாக நினைத்துக் கொண்டு ,பதிவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடக்கப் போவதாக மட்டும் அறிவித்துவிட்டு,மற்ற விபரங்களுக்கு கார்த்திகைப் பாண்டியனை தொடர்பு கொள்ளுங்கள் என்று இடுகையிட்டிருக்கிறார் .இதில் காமெடி என்னவென்றால் கானா பானாவுக்கு அதில் சம்பந்தமில்லை என்பதுதான்.ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்றால் தீவிரமான முன்னேற்பாடுகளும் ,கொஞ்சம் காசும் தேவை .பெரும்பாலான பதிவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள்,மதுரைக்கு வர நேரம் இருக்க வேண்டும் .எத்தனை பேர் வருவார்கள் ,விளையாட ஆள் சேர்ந்தாலும்,வந்தால் தங்க வைக்க இடம் ,மற்ற வசதிகள் வேண்டும்.விளையாட வேண்டிய மைதானத்தை தேர்வு செய்து முன் அனுமதி பெற வேண்டும் ,விளையாடுவதற்கான பொருட்கள் என்று தேவைகள் பட்டியல் நீளும்.கலந்தாலோசித்து விட்டு செய்திருக்கலாம். மாற்று ஏற்பாடாக வேண்டுமானால் கிரிக்கெட்டை அதன் மூல விளையாட்டான கில்லியாக மாற்றிவிட்டால் கொஞ்சம் செலவு குறையும்.அப்படி மாற்றினால் கில்லிக்கான செலவை நானும் ,தாண்டுக்கான செலவை நம்ம தேனியாரும் ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
*******************************
இந்த முறை கவிஞர் நரனின் கவிதையில் எனக்குப் பிடித்த ஒன்று,அவரின் மற்ற படைப்புகள் இங்கே .
சென்னையைச் சேர்ந்தவர்.உயிர்மையில் தொடங்கி வெளிநாட்டு இதழ்களிலும் கூட இவரது எழுத்துகள் வெளிவந்திருக்கின்றன .நல்ல இலக்கியவாதி.எப்படி எழுத வேண்டும் என்பதை எனக்கு சொல்லித் தந்துகொண்டிருப்பவர்.இவரின் முதல் சிறுகதை ஒன்று (சில எழுத்துப் பிழைகளுடன் ) 'தடாகம்' என்கிற இணைய இதழில் வெளிவந்திருக்கிறது.கீழே உள்ள கவிதையைப் படித்த பின் கடைசி வரிகளுக்கான விளக்கத்தை தொலைபேசியில் கேட்டுக் கொண்டேன்.அந்த விளக்கம் உங்களுக்குத் தேவைப்பட்டால் நம்ம கானா பானாவைத் தொடர்பு கொள்ள வேண்டியது.(ஏன்னா அவர்தான வாத்தியாரு).

விநோத பறவை
----------------------
வீட்டிற்குள் ஒரேயொரு சிறகுமட்டும் கிடந்தது .
எந்த பறவையினுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
தியானத்தில் உறைந்திருக்கும் பொழுது
ஏதோவொரு பறவையின்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன்
ஆகாயத்தின் உயரத்தில் இன்னதென அறியமுடியாத
ஒரேயொரு பறவை பறந்து கொண்டிருந்தது
உள்ளே மகள் 27ம் பக்கத்தில்
புள்ளிகளை இணைத்தால் கிடைக்கும்
உருவங்களைப் பற்றிய விளையாட்டொன்றை
பென்சிலால் விளையாடிக் கொண்டிருந்தாள்.
நானும் சிறகு ,சப்தம், பறத்தல் என்ற
மூன்று புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தேன் .
விநோதமான பறவையொன்று கிடைத்தது .
மகள் 73 ம் பக்கத்தில் விடையை சரிபார்த்தாள்
அவ்விநோத பறவையினத்தின்
முதல் பறவையிலிருந்து ,கடைசி பறவைவரை
என்னிடமேயிருந்தது .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த முட்டையும் இடவில்லை .

***************************

33 comments:

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றி!

டக்ளஸ்... said...

வீட்டிற்குள் ஒரேயொரு 'பாட்டில்மூடி' மட்டும் கிடந்தது .
எந்த பாட்டிலுனுடையது என்பதை
பொருத்திப் பார்க்க முடியவில்லை .
போதையில் மட்டையாகியிருக்கும் பொழுது
ஏதோ ஒரிடத்திலிருந்து, என்னுள் சரக்கு ஊத்தும்
சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது .
வெளியே வந்துப் பார்த்தேன். டாஸ்மாக்கில்,
கடையின் மூலையில் இன்னதென அறியமுடியாத நிலையில்
ஒரு இளைஞன் சரக்கடித்துக் கொண்டிருந்தான்.
உள்ளே ஒரு முதியவர் 13ம் டேபிளில்
ஹாட்டையும் பீரையும் இணைத்தால் கிடைக்கும்
சரக்கைப் பற்றிய ஆய்வொன்றை, தன்
மிக்ஸிங்கால் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.
நானும் பீர் ,எம்.சி.,வோட்கா என்ற
மூன்று சரக்குகளையும் கலந்து் பார்த்தேன் .
விநோதமான சரக்கொன்று கிடைத்தது .
அவ்விளைஞன் இப்போது மட்டையாகியிருந்தான்.
அவ்விநோத சரக்கின்
முதல் 'பெக்'கிலிருந்து ,கடைசி 'பெக்'வரை
நான் மட்டுமே அடித்தேன் .
முதலுக்கும் ,கடைசிக்குமிடையே
அது எந்த போதையு்ம் தரவேயில்லை.

டக்ளஸ்... said...

தலைப்புக்கும் நான் போட்ட கவிஜைக்கும் பொருந்திப் போகுதில்லண்ணே..?
கோவிச்சுக்காதீங்கண்ணே...
:))

நையாண்டி நைனா said...

பதிவு டாப்பு...
டக்ளசு கவிதை டாப்போ டாப்பு

நையாண்டி நைனா said...

மிஸ்டர். டக்கு...
சும்மா ஜின்னுன்னு.. சாரி கின்னுன்னு இருக்கு.

ச.முத்துவேல் said...

நரன் பற்றிய பகிர்வும், கருத்துக்களும் சிறப்பு

அப்பாவி முரு said...

//மலையே சரிந்தது போல் ஆளு மட்டை//

:((((

அப்பாவி முரு said...

//."குடிக்காதேன்னு சொல்ல மாட்டேன்,சொன்னாலும் கேக்க மாட்ட,தயவு செய்து வெயிட்ட குறைக்க முடியுமா பாரு". முடியல.......//

எழுத்தில் வேதனை தெரியுது. அதுவும் கடைசி வார்த்தையில் முழு வேதனையும் அப்பட்டம்.

ஆதவா said...

உங்கள் எழுத்து வசீகரிக்கிறது ஸ்ரீ! இப்போதைக்கு இதுதான் என்னால் சொல்ல முடிந்தது!

நிகழ்காலத்தில்... said...

வாலு வாலுதான்:)))

Anbu said...

:-(((

Anbu said...
This comment has been removed by the author.
கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லாத்தான்யா கலந்து ராவா அடிச்சு இருக்கீங்க..

அன்பு..
உங்கள் ஆர்வம் புரிகிறது.. ஸ்ரீ உங்கள் மீதான உரிமையில்தான் எழுதி இருக்கிறார்.. உங்கள் எண்ணத்தை செயலாக்க முயலுவோம்..

சொல்லரசன் said...

நரன் பற்றிய பகிர்வும் அவருடைய கவிதையும் அருமை

வால்பையன் said...

//"குடிக்காதேன்னு சொல்ல மாட்டேன்,சொன்னாலும் கேக்க மாட்ட,தயவு செய்து வெயிட்ட குறைக்க முடியுமா பாரு". முடியல......//


வெயிட்ட குறைச்சா சின்னபையனாட்டம் தெரிவேனே!?

நாஞ்சில் நாதம் said...

:))

ஸ்ரீதர் said...

நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி.

நேசமித்ரன் said...

அடுத்த தலைப்பு என்ன டகீலா இரவுகள் 18+ ?

:)

அப்ப வால் அவ்ளோ கனமா...?

" உழவன் " " Uzhavan " said...

//அந்த விளக்கம் உங்களுக்குத் தேவைப்பட்டால் நம்ம கானா பானாவைத் தொடர்பு கொள்ள வேண்டியது.(ஏன்னா அவர்தான வாத்தியாரு).//
 
என்ன பாண்டியா.. இதென்ன விளையாட்டு. என்னென்னு சொல்லுங்கப்பா :-)

சந்ரு said...

நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா...

shortfilmindia.com said...

vaalu அவ்வளவு வெயிட்டா போட்டுட்டாரு..?

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ

அழகான சல்பேட்டா - ராவா அடிச்ச மாதிரியே இருக்கு - சும்மா ஜிவ்வுன்னு இருக்கு

வாலின் எடையைக் குறைக்க நானும் பரிந்துரைக்கிறேன்

டக்ளஸ் எதிரு கவுஜ போட்டுட்டான் - அதுவும் நல்லாத்தான் இருக்கு

செல்வேந்திரன் தொடர்பு கொள்வார் - பொறுத்திருக்க்லாம்

அன்பு ஆர்வ மிகுதியில் அறிவித்து விட்டான். நானும் பேசிப் பார்த்தேன் - செய்யலாம் என உறுதியாக இருக்க்கிறான். பார்க்கலாம்

நரனின் கவிதை அருமை -

நல்வாழ்த்துகள் ஸ்ரீ

D.R.Ashok said...

டக்ளஸ் கவித கிக்குப்பா ;)

ஸ்ரீ said...

நன்றி நண்பர்களே.

Suresh said...

:-)

சுந்தர் said...

கில்லி னா, திரிசா வ கூப்பிடுவீங்களா ?

Eswari said...

//பதிவு டாப்பு...
டக்ளசு கவிதை டாப்போ டாப்பு//

நா சொல்ல நினைச்சேன் டக்ளஸ்... சொல்லிடாரு

தருமி said...

'டக்ளசும் பாட்டில் மூடியும்'
நல்லா இருக்கு.

செல்வேந்திரன் said...

அச்சச்சோ... அன்றைக்கு பெரும் ஜனத்திரளின் மத்தியில் இருந்தோம். தவிர, வாலின் தொலைபேசியில் வேறு ஏதோ கோளாறு. நான் ஒன்று பேச... நீங்கள் ஒன்று பேச என்றிருக்க வேண்டாமேயென அப்புறம் பேசலாம் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் பதிவர் சந்திப்பு, மழை, இடப்பெயற்சி என சுத்தமாக மறந்தே போனேன். மன்னிக்கவும்.

அடியேனின் எண்கள் 9003931234. கதைக்கலாம் கதை கதையாய்.

ஸ்ரீராம். said...

மதுரைல எங்கே?

ஸ்ரீ said...

மதுரையில் நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா?

ஸ்ரீராம். said...

ஆமாம்... அடிக்கடி மதுரையில் சந்திப்பு நடத்துகிறீர்களா என்ன?

ஸ்ரீ said...

நான் s.s colony யில் இருக்கிறேன். பதிவர் சந்திப்பை வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை நடத்துகிறோம்.வருகிற ஞாயிற்றுக் கிழமை ஒரு சந்திப்பு நடக்க உள்ளது. அறிவிப்பு கூடிய சீக்கிரத்தில் வெளியாகும்.