Friday, July 10, 2009

மல்லாக்கப் படுத்து யோசிச்சது..

ஆளாளுக்கு படுத்து யோசிச்சு படுத்தி எடுக்கறதும்,கலக்கி ஊத்தறதும்னு கலக்கி எடுக்கிறாங்க. உருப்படியா பதிவு போட நாம என்ன டாக்டரா? . சரி தனித் தனி பதிவாப் போட்டு உங்க உசிரை வாங்குறது போதாதுன்னு கலக்கலா (அதாவது ரெண்டு மூணு விஷயம் சேர்த்து-சூப்பரான்னு அர்த்தம் இல்ல) ஒரு பதிவைப் போட்டுடுவோம்னு நினைச்சு ஆரம்பிச்சுட்டேன்.முடிஞ்ச வரை இதுக்குன்னு இருக்கிற இலக்கணம் (?!!!) மீறாம பாத்துக்கிறேன். இதுதான் மொத மேட்டரே.
**********
சமீபத்தில் (அதாவது ஒரு மாசம் முன்னாடி) பழங்காநத்தம் பகுதியில் வண்டியை பார்க் செய்தபோது (டூ வீலர்தான்) என்னைக் கடந்து ஒருத்தன் ஓடினான் ,கன்னக் கதுப்பு முழுவதும் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது, உடல் முழுக்க ரத்தம்.அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தால் ஒரு இளைஞன் இரண்டு கையிலும் அரிவாள், பட்டாக்கத்தியோடு நடு ரோட்டில் தன்னுடைய வண்டியை நிறுத்தி விட்டு முழு போதையில் கத்தியை தாறு மாறாக காற்றில் வீசிக் கொண்டிருந்தான். அவனுக்கு தோள்பட்டையில் வெட்டு உடல் முழுக்க ரத்தம். பொது ஜனங்கள் சாதுவாக அவனைச் சுற்றிக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சரி போலீசுக்கு ஒரு போன் (பிளாங்க் கால்தான் ) செய்யலாம் என்று அருகில் உள்ள கடையில் போனை எடுத்தேன்.கடைக்காரர் "போலீசுக்கா தம்பி ? அதெல்லாம் அரை மணி நேரத்துக்கு முன்னாடியே பண்ணியாச்சு" என்றார். விஷயம் என்னவென்றால் அருகில் உள்ள காவல் நிலையம் அங்கிருந்து 50 அடி தூரம்தான்.சினிமால கரெக்டாதான் எடுக்கரானுவ. வாழ்க ஜனநாயகம்.
****************
மதுரையின் பிரபல பதிவர் அவர்.ஒன்றுக்கு இரண்டாக செல் போன் வைத்துக் கொண்டு தொடர்ந்து SMS அனுப்புவதும் , மணிக்கணக்கில் தனியாக ஒதுங்கிப் பேசுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். நண்பர்கள் கேட்டால் 'thick' பிரண்டு என்று சமாளிக்கிறாராம். 'என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ' ன்னு பாட வேண்டியதுதான்.

அப்புறம் இவரும் பிரபல பதிவர்தான்.வெளியூர்க்காரர், சமீபத்துல நடந்த ஒரு விழாவுல பிரபல கவிஞர் ஒருத்தரோட சேர்ந்து ஒரே கூத்தாம்.இலக்கியம் பேச வந்த இடத்துல பாட்டிலோட அலைஞ்சது மட்டுமில்லாம, கூட்டத்துலயும் ஓரண்ட இழுக்க அவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்டு உட்கார வைக்கப் பட்டாராம்.லோகல் பதிவர் கொடுத்த தகவல்.

இது இரண்டும் யாரென்று கண்டு பிடிப்பவர்களுக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியையும் , நான் திருமணம் செய்து கொண்டு ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால் அவள் வளர்ந்து வரும்போது கண்டு பிடித்தவர் இளைஞராக திருமணம் ஆகாமலே இருந்தால் அவளையும் மணம் முடித்துக் கொடுப்பதாக உத்தேசித்திருக்கிறேன் (உஸ்ஸ்ஸ் ....அப்பாடா ).
****************
அடடே கவிதை சொல்லியாகணுமே. சரி கவிஞர் யாத்ராவின் கவிதை ஒன்று.

நேசம்

ஜன்னலில் நீளும் பசுவின் வாயில்
இட்லி ஊட்டுவாள் அம்மா
பாலுண்ண மறுக்கும் கன்றிற்கு
புட்டிப்பாலூட்டுவார் அப்பா
அம்மு படித்துறை மீன்களுக்கு
பொரி போடுவாள்
பொட்டிப்பாம்பிற்கு பாலூற்றுவார்கள் தெருவில்
மதியம் காகத்திற்கு சோறு
தினம் வரும் குரங்கு
கடைக்காரரிடம் பழம் வாங்கிச்செல்லும்
பக்கத்து வீட்டு அக்கா
பூனையை மடியிலேயே வைத்திருப்பாள்
இணையமையத்தில் அவர் தோளைவிட்டு
இறங்கவேயிறங்காது கிளி
பிஸ்கட்டின் ஒரு முனையை வாயில் வைத்து
மறுமுனையை நாயுடன் பகிர்ந்துகொள்வாள்
எதிர்வீட்டு யுவதி
இன்று இருசக்கர வாகனத்தில்
ஏற்றி சாகடித்தேன்
அந்த நாயை .Beautifullll ! அதுதான் யாத்ரா.சுட்டியை க்ளிக்கி அவரோட மற்ற இடுகைகளையும் படிச்சிடுங்க.

#############24 comments:

கே.ரவிஷங்கர் said...

ரசித்தேன்.

பழமைபேசி said...

//யாத்ரா.சுட்டியை க்ளிக்கி அவரோட மாற்ற இடுகைகளையும் படிச்சிடுங்க.//

சரிங்க...இஃகிஃகி!!

கும்மாச்சி said...

ஸ்ரீ சுஜாதா ரசிகரோ, பாதி ராஜ்யமும், பொன்னும் தரிங்களே.

தராசு said...

ஹலோ,

மல்லாக்க படுத்து யோசிப்பவர்கள் சங்கம்னு ஒண்ணு இருக்கு, அதுல நீங்க இணைஞ்சுட்டீங்களா,

இல்லைண்ணா நீங்க மல்லாக்கப் படுக்கலாம், ஆனா யோசிக்கவே கூடாது. ரணகளமாயிப்போயிரும் சொல்லிப்புட்டேன்.

சுந்தர் said...

நான் கண்டு பிடிச்சுட்டேன் , அது அவர்தான ? ரெண்டு போன் வெச்சிருக்கவரு, பேரு ரெண்டு வார்த்தை ல வரும்.

வால்பையன் said...

//மதுரையின் பிரபல பதிவர் அவர்.ஒன்றுக்கு இரண்டாக செல் போன் வைத்துக் கொண்டு தொடர்ந்து SMS அனுப்புவதும் , மணிக்கணக்கில் தனியாக ஒதுங்கிப் பேசுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.//

மாதத்தின் பெயரை முன் கொண்டவரா!
மன்னனின் பெயரை பின் கொண்டவரா!?

இந்த பூனையும் பீர் குடிக்குதா!?

வால்பையன் said...

//சமீபத்துல நடந்த ஒரு விழாவுல பிரபல கவிஞர் ஒருத்தரோட சேர்ந்து ஒரே கூத்தாம்.இலக்கியம் பேச வந்த இடத்துல பாட்டிலோட அலைஞ்சது//

பாட்டில்னாலே முடிஞ்சி போச்சே!
அது யாருன்னு!

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்களும் களத்துல இறங்கியாச்சா? மதுரைல அப்பப்போ சண்டை சச்சரவு நடக்குறது சகஜாமகி போனதால மக்கள் அதோடவே வாழப் பழகிட்டாங்க.. வாழ்க ஜனநாயகம்.. ஏதோ கிசுகிசு மாதிரி இருக்கு.. ஆனா பாருங்க.. எனக்கு அது கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது.. யாத்ராவின் கவிதை அருமை...

டக்ளஸ்....... said...

எனக்கு தெரியும் யார் அந்த பதிவர்கள் என்று...?
சொல்லவா..?
அந்த மதுரையின் பி.ப. ஒரு Nokia N72 வைத்திருக்கிறார். "ஆர்கனைஸர்" எனவும் அழைக்கப்படுவார்.
இரண்டாவது பதிவர் ஒரு Nokia 6600 வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட நூறு புத்தகங்கள் விற்கப் போவதாக சவால் விட்டிருக்கிறார்..!
சரியாங்கோவ்வ்வ்வ்வ்...........!

வால்பையன் said...

அந்த கவிதை பியூட்டிபுல்லா!

இப்போ நாய கொன்னுருக்காராம்,
அடுத்து பசு, மீன், கிளி, குரங்குன்னு வருசையா கொல்லுவாராம்!

ஒருவேளை எதிர்வீட்டு யுவதி உதட்ட நாய் கடிச்சிருச்சுன்னு கோபத்துல கொன்னுட்டாரோ!

நையாண்டி நைனா said...

நம்ம மண்டைக்கு நேரா சொன்னாலே ஏறாது.... இதுலே கிசு கிசுவா..? கிளிஞ்சது....

Anbu said...

முதல் பதிவர்..கார்த்திகைப்பாண்டியன்..

இரண்டாவது..வால் பையன்..

நான் ரொம்பச்சின்னப்பையன் தான்..

Anbu said...

\\சினிமால கரெக்டாதான் எடுக்கரானுவ. வாழ்க ஜனநாயகம்.\\

:-)

Anbu said...

நல்லா இருக்குங்க சல்பேட்டா..

நாஞ்சில் நாதம் said...

மதுரைல நிறைய மேட்டர் கிடைக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.

அந்த கிசு கிசு எனக்கு தெரியாது. பதில் மெயில்ல அனுப்பவும்

ச.முத்துவேல் said...

Beautifullll ! அதுதான் யாத்ரா.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

பீர் | Peer said...

இரண்டு பதிவரும் யார் என்று தெரிகிறது.

பொண்ணு தருவீங்களா? எனக்கு இல்ல, என் பையனுக்கு. வயது 10 மாதம், கணக்கு சரியா வரும்னு நினைக்கிறேன்.

யாத்ரா said...

மிக்க நன்றி நண்பா.

ஸ்ரீதர் said...

மிக்க நன்றி கே.ரவிஷங்கர்,பழமைபேசி , கும்மாச்சி, தராசு, சுந்தர், வால்பையன், கார்த்திகைப் பாண்டியன், டக்ளஸ், நையாண்டி நைனா, அன்பு ,நாஞ்சில் நாதம், ச.முத்துவேல், பீர், யாத்ரா.

அத்திரி said...

நல்லாவே யோசிச்சிருக்கீங்க

சந்ரு said...

பார்த்தேன், ரசித்தேன்...

ஸ்ரீதர் said...

நன்றி அத்திரி,நன்றி சந்ரு .

மெனக்கெட்டு said...

//
ஒரு பதிவைப் போட்டுடுவோம்னு நினைச்சு ஆரம்பிச்சுட்டேன்.முடிஞ்ச வரை இதுக்குன்னு இருக்கிற இலக்கணம் (?!!!) மீறாம பாத்துக்கிறேன்.
//

ஆக 'மல்லாக்கப் படுத்து' யோசிச்சா பதிவு போடலாம் போல!