Monday, July 6, 2009

மஞ்ச மாக்கானின் இரவுக் கவிதைகள்(+18)

1992-1993 வாக்கில் எனக்கு அறிமுகம் ஆனவன் கிருஷ்ணமூர்த்தி,தப்பித் தவறி கல்லூரிக்குள் நுழைந்து விட்டவன்.படிப்பை விட மற்ற விஷயங்களில் ஆர்வம் அதிகமுடையவன். செல்லமாக நண்பர்களால் மாமா என்று அழைக்கப்பட்ட கி.மூவுக்கு கவிதைகளின் மேல் நாட்டமுண்டு (அவன் எழுதுகிற கவிதைகளில் மட்டும்). மற்றவர்கள் அதிலும் குறிப்பாக நான் கவிதை எழுதுவதை கொஞ்சம் இளக்காரமாகத்தான் பார்ப்பான். மாமா என்பது அவன் நினைப்பது போலல்லாமல் மஞ்ச மாக்கான் என்பதன் சுருக்கம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். தற்போது இதே மதுரையிலேயே பெண்களுக்கான ஒரு அழகுப் பொருட்கள் கடையை வைத்திருக்கும் மாமா ,இன்னமும் கவிதை எழுதுகிறான்.

மாமாவின் கவிதைகளில் உள்ள சிறப்பு என்னவென்றால் அதன் பாடு பொருள், அடப்பாவி என திகைக்க வைக்கும் அல்லது திட்ட வைக்கும்.பொதுவாக அவனுக்கு இரவு நேரத்தில் குவார்ட்டர் தாண்டிய பின்தான் கவிதை பிறக்கும் என்பதால் இந்தத் தலைப்பு. ஆறு தடவைக்கு மேல் காதல்வயப்பட்டுவிட்ட மாமாவுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.சில கவிதைகள் பதிவுக்கு ஏற்றதல்ல , அவற்றை பதிவிடப் போவதில்லை.மற்றவையும் அடல்ட்ஸ் ஒன்லி ரகம்தான். எனவே தவிர்க்க நினைப்பவர்கள் இத்தோடு ஜகா வாங்கி விடுவது உத்தமம். கவிதைகளுக்கு கிடைக்கப் போகிற பாராட்டுகளும் (!!!?) திட்டுகளும் மாமாவைச் சாரும்.

**********************

அதுவும் இதுவும்

பொதுக் கழிப்பிடங்களில்

பேருந்துப் பயண இடை நிறுத்தங்களின்

சாலையோர நீர்க் கழிப்புகளில்

திரையரங்கு இடைவேளைகளில்

என எங்கேயும் பக்கம் பார்த்து

ஒப்பீடு செய்து கொள்கிறேன் .

கருத்தது,வெளுத்தது,சிவந்தது,

இளைத்தது,நீண்டது,

பருத்தது,மூடியது,மூடாது என

எல்லாமும் என்னை விடப் பெரியதாய்....

இரவுகள் தோறும் கேட்க

நினைத்துத் தவிர்க்கிறேன்

இறுகப் பொருந்துகிறதாவென

எப்போது பார்ப்பினும்

தவிர்க்க முடியவில்லை,

இன்னும் சற்றே பெரியதாய்

அமைந்திருக்கலாமென்ற நினைப்பை...

14 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

யம்மாடியோவ்.. இப்படி எல்லாம் ஆரம்பிச்சாச்சா? ரைட்டு.. வித்தியாசமான சிந்தனை.. வாழ்க வளமுடன்..

அப்பாவி முரு said...

என்ன ஆச்சு???

நல்லாத்தான போய்க்கிட்டு இருந்தது???

கூட நட்பைக் குறைத்துக் கொள்ளவும்!!!

அப்பாவி முரு said...

ஆனாலும், மாமாவின் கவிதை அருமை.(எருமை இல்லை)

பீர் | Peer said...

:(

டக்ளஸ்....... said...

I Did not Read That Pom...!
:)

(Problem in Tamil Font..)

கே.ரவிஷங்கர் said...

வித்தியாசமான கற்பனை.

சுந்தர் said...

18 வயசு ஆகாததுனால, நான் கவிதைய படிக்கல.

ச.முத்துவேல் said...

/அடல்ட்ஸ் ஒன்லி ரகம்தான். எனவே தவிர்க்க நினைப்பவர்கள் இத்தோடு ஜகா வாங்கி விடுவது உத்தமம்./

இதுக்கப்புறந்தான் ஆர்வமா மேல-அதாவது கீழ-போய் படிச்சேன். ம்ஹூம். அப்படியொன்னும் ஆபாசமில்ல.இதெல்லாம் இன்றைய இலக்கியத்துல(?) ஜுஜூபி.

:)

யாத்ரா said...

சூப்பர், யாரு அது, கிமூ ???

கவிதை அருமை.

ஸ்ரீதர் said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன், அப்பாவி முரு, பீர் , டக்ளஸ்,அனுஷ் , கே.ரவிஷங்கர், சுந்தர், ச.முத்துவேல், யாத்ரா.

" உழவன் " " Uzhavan " said...

ஆகா.. இப்படியெல்லாமா.. ரைட்டு விடு.. அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.

பழமைபேசி said...

ம்ம்

ஸ்ரீதர் said...

நன்றி பழமைபேசி,நன்றி உழவன்.

cheena (சீனா) said...

அன்பின் ஸ்ரீ

தேடிக் கண்டுபிடிச்சுப் படிச்சேன் - மாக்கான் கவித நல்லாத்தான் இருக்கு - தவிர்க்க முடியாத நினைப்பு

ம்ம்ம்ம்ம்