Saturday, June 13, 2009

சிறுகதைப் போட்டிகளில் ஜெயிக்க சில (குறுக்கு) வழிகள்.

அன்பார்ந்த சக வலைப் பதிவர்களே, அறிவிக்கப் பட்டிருக்கும் சில சிறுகதைப் போட்டிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அதில் பங்கு கொள்ளப் போகும் நல்ல பதிவரா ,அதாவது கதை எழுதுறதெல்லாம் எனக்கு சாதாரணமான மேட்டர் என்பவரா, அப்படி என்றால் இது உங்களுக்கான பதிவு அல்ல. போயி கதை எழுதுற வேலையைப் பாருங்கள். இல்லீங்க நானும் உங்களை மாதிரி ,உங்க நண்பர்கள் மாதிரி (உதாரணமா வாலுப்பையன், பொன்னியின் செல்வன் )மொக்கதானுங்க என்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
முதலில் நான் சொல்ல விரும்பறது என்னன்னா ஒரு போட்டில கலந்துக்கறதுதான் முக்கியம் ஜெயிக்கறது இல்ல .இதை ஏன் இப்ப சொல்லுற என்று கேட்காமல் மேலே படிக்கவும்.
  1. முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது உங்களுக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதுதான்.கலந்து கொள்கிறவர்கள் அத்தனை பேரையும் தனித் தனியாக சந்தியுங்கள் , இந்த போட்டில ஜெயமோகன் ,சாரு நிவேதிதா ,பால குமாரன் போன்ற எழுத்தாளர்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பீதியைக் கிளப்புங்கள் .அதற்கப்புறம் எந்தப் பயல் கதை அனுப்பப் போகிறான். பாதி போட்டி காலி.
  2. அடுத்தது லேசு பாசாக தெரிந்தவர்கள்,பதிவர் சந்திப்பில் கைகுலுக்கி நம்பர் கொடுத்தவர்கள் ,எப்போதாவது கடைப் பக்கம் வருகிறவர்கள்,போனால் போகிறதென்று ஸ்மைலி பின்னூட்டம் போடுகிறவர்கள் கொஞ்சம் பேர் கலந்து கொள்வார்கள் இல்லையா ,அவர்களுக்கு முதலில் சொன்ன யோசனையை செயல்படுத்துங்கள் ,அப்படியும் யாராவது தைரியசாலி மிச்சப்பட்டால்,தவறாமல் அவர்களின் கதைக்குப் பின்னூட்டம் போடுங்கள் .சில ஐடியாக்கள்....
  • இந்தக் கதையை ஏற்கெனவே படித்திருக்கிறேன்,ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை.
  • கதை ஆரம்பித்தவுடனேயே முடிவு தெரிந்து விட்டது.
  • போட்டிக்கா அனுப்பப் போறீங்க ? வெற்றி பெற வாழ்த்துக்கள் .
  • இன்னும் ஏதாவது பெட்டரா யோசிச்சிருக்கலாம் .உங்க கிட்டேயிருந்து நிறைய எதிர்பார்த்தேன்.
  • இதைத்தான் போன வருஷம் நீங்க விகடன்ல எழுதினப்பவே (?!!)படிச்சிட்டேனே.இருந்தாலும் சற்று மெருகேற்றி பதிவிட்டிருக்கிறீர்கள்.நல்லாருக்கு.
  • இது ரஷிய எழுத்தாளர் விளாதிமிர் போயோன்கொவ்ச்கே கதையாச்சே !!

இதற்கப்புறம் அவருக்கு போட்டியில் கலந்து கொள்ள தைரியம் வருமா என்ன?தானாக ஜகா வாங்கி விடுவார்.போட்டில இன்னொரு பாதிப் பேர் காலி .

3. இந்த பாயின்ட் ரொம்ப முக்கியம் ,நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் , முன்னே பின்னே பார்த்திராதவர்கள் ,நன்றாக எழுதுகிறவர்கள் இருந்துதான் தொலைப்பார்கள் .அவர்களின் கதையை எல்லாம் படியுங்கள்.எல்லோருடைய கதையிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரே கதையாக்கி நாலு மாசத்துக்கு முன்னாடி தேதி போட்டு உங்கள் பிளாக்கில் பப்ளிஷ் செய்து விடுங்கள். எல்லாருமே என்னுடய "நான் -லீனியர் " கதையில் கொஞ்ச கொஞ்சமாக எடுத்து காப்பியடித்து விட்டார்கள் என்ற குண்டைப் போட்டு அத்தனை பேரையும் காலி செய்து விடுங்கள் .

அப்புறம் என்ன பாஸ்.மிச்சம் இருக்கிறது நாம மட்டுந்தான் , இப்போ எதை வேணும்னாலும் எழுதலாம் ,பரிசு கண்டிப்பா நமக்குத்தான்.இருந்தாலும் போட்டில கலந்துக்கிறதுதான் முக்கியம் ,ஜெயிக்கிறது இல்லேன்னு ஏன் சொன்னேன்னா .... அதான் உங்களுக்கே தெரியுமே.

18 comments:

பழமைபேசி said...

நான் இல்லை ஆட்டத்துக...இஃகி!

கே.ரவிஷங்கர் said...

ஜெயிக்கப்போவது யாரு?

நிகழ்காலத்தில்... said...

சரியான முறைகள்தான்.,
அரசியலில் பரிச்சயம் உண்டா:)

thevanmayam said...

ஸ்ரீ!!
கதை எழுதிப் பேர் வாங்குவோர் சிலர்!!..........................

Anbu said...

அருமையான ஐடியாக்கள் அண்ணா..,

முதலிலே குறிப்பிட்டிருந்தால் எல்லோரையும் கலாய்ச்சிருக்கலாம்..

ILA said...

நல்லா கெளப்புறாய்க பீதிய.. நாங்க எல்லாம் கதை எழுதறதா வேணாமா?

Anbu said...

இருந்தாலும் உங்களுடைய போட்டிக்கான கதையைக்கூட நான் ஏற்கனவே படித்த ஞாபகம்

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆகா.. ஒரு தீர்மானத்தோட தான்யா கிளம்பி இருக்காங்க..எனக்கு இல்ல.. எனக்கு இல்ல.. ஐயோ அந்த சிறுகதை பரிசு எனக்கு இல்ல..

ஸ்ரீதர் said...

நன்றி பழமை,நீங்களும் ஆட்டத்துல சேர வேண்டிய பதிவர்தான்.

நன்றி ரவி ,பொறுத்திருந்து பாப்போம்.

நன்றி திரு.சிவசுப்பிரமணியன்.(அதான் வயசு 41 ன்னு நீங்களே சொல்லிட்டீங்களே.)அரசியல் பரிச்சயமில்லாமல் என்ன,ஓட்டுப் போடறேனே.

நன்றி டாக்டர்,இப்படியும் பேர் வாங்கலாம்தான்.

நன்றி அன்பு இப்பவும் டயம் இருக்கு ,கலாய்ச்சிடுங்க.என்னை மட்டும் விட்டுடுங்க.

நன்றி கார்த்தி.வழிமுறைகளை கடைபிடிங்க.பரிசு உங்களுக்குத்தான்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ரொம்ப நல்லவரா இருக்கீங்க..,

வெட்டிப்பயல் said...

இந்த பதிவை போன மாசமே வேற எங்கயோ பார்த்திருக்கேன். எந்த பதிவுனு தான் ஞாபகம் வர மாட்டீங்குது :)

அப்பாவி முரு said...

அட இது தெரியாம நான் முதல்லையே கதை எழுதீட்டேனப்பா!!!!

முரளிகண்ணன் said...

:-)))

ஸ்ரீதர் said...

நன்றி SUREஷ் (பழனியிலிருந்து) ,புதுக்கோட்டையில் இருந்து சரவணன் மாதிரியா?
நன்றி வெட்டி (வேற எப்படித்தான் கூப்புடறது)
நன்றி அப்பாவி முரு
நன்றி முரளிகண்ணன் .

Cable Sankar said...

>:):):)

தேனீ - சுந்தர் said...

நல்ல கதை யா இருக்கே !

ஸ்ரீதர் said...

நன்றி தேனி சுந்தர்.

நன்றி கேபிள் சங்கர்.

நீச்சல்காரன் said...

இன்னும் ஏதாவது பெட்டரா யோசிச்சிருக்கலாம் .உங்க கிட்டேயிருந்து நிறைய எதிர்பார்த்தேன்.:)