Sunday, June 21, 2009

வலையில் மாட்டியது-7


ஒரு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் அந்த பெரிய குடும்பம் நின்றிருந்தது. கணவன், மனைவி பத்துப் பன்னிரண்டு குழந்தைகள். அருகில் ஒரு குருடனும் நின்றிருந்தான்.பேருந்து வந்தது. ஆனால் நடத்துனர் அத்தனை பேரையும் ஏற்றிக்கொள்ள மறுத்து விட்டான்.இரண்டு பேர் ஏற முடியாத நிலை ,சரியென்று குருடனும் அந்தக் கணவனும் பின்தங்கி மற்றவரை ஏற்றிவிட்டனர்.அந்தக் கணவன் குருடனிடம் தான் அவனுக்குத் துணையாக வருவதாகவும் இருவரும் பேசிக் கொண்டே நடந்து விடலாம் என்று சொன்னான்.

இருவரும்
நடக்க ஆரம்பித்தனர். குருடன் தன் கையில் இருந்த குச்சியால் தார்ச் சாலையில் தட்டியபடியே தடம் பார்த்து நடந்து கொண்டிருந்தான். அந்தக் குச்சி எழுப்பிய ஓசை அந்த இரவில் நாராசமாக இருந்தது கணவனுக்கு. அவன் குருடனைப் பார்த்து "நீ ஏன் அதன் நுனியில் ஒரு ரப்பரை மாட்டிக் கொள்ளக் கூடாது.சத்தம் வராமல் இருக்குமல்லவா?" என்றான்.குருடன் எரிச்சலுடன் "அதே வேலையை நீ செய்திருந்தால் நாம் இருவரும் நடக்க வேண்டியிருந்திருக்காது "என்றான்.

10 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

அட...இது அது இல்ல?? ஆகட்டும்....ஆகட்டும்....(உங்களுக்கும் சேர்த்து தான் சொல்லி இருக்காரு போல......லொள்ளு.....ஹி.....ஹி......)

இளைய கவி said...

சூப்பர் ஸ்ரீ, சூப்பர் ஜோக்.. அலுவலகத்தில சிரிச்சதால எல்லாம் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க..

டக்ளஸ்....... said...

ha..ha..ha..!

ஸ்ரீதர் said...

நன்றி அபூபக்கர்,
நன்றி டக்லஸ் ,
நன்றி இளைய கவி.

cheena (சீனா) said...

இது அசைவமா - தெரியாம வந்துட்டேன் - நல்ல அறிவுரை

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு ஸ்ரீதர்.

சொல்லரசன் said...

ஹா ஹா ஹா.....

சுந்தர் said...

அசைவம் னா, போர்டு போடுங்கப்பா !

தருமி said...

:)

ஸ்ரீராம். said...

ஹா...ஹா...