Monday, May 18, 2009

பிரபலமான பதிவர் ஆக சில யோசனைகள்


குழு அமைத்தல்:

முதலில் நம்மைப் போலவே காத்து வாங்கும் கடை வைத்திருப்போரை சேர்த்து ஒரு குழு அமைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆளுக்கு பத்து ப்ளாக் ஆரம்பித்து ஒருவரை ஒருவர் பாலோ செய்து கொள்ளுங்கள்.பின்னூட்டம் இடவும் சௌகரியம் . அதிகமாக follow செய்யப்படும் ,நிறைய பின்னூட்டம் இடப்படும் ஒரு பதிவராக இருப்பீர்கள்.மறக்காமல் ஏதாவது ஒரு திரட்டியில் சேர்ந்து விடுங்கள்.அப்போதுதான் கைமேல் பலன்.


பின்னூட்டம் இடுதல்:

நம்மைப் போல் இல்லாமல் நல்ல பதிவர்களும் இருக்கிறார்கள் .கன்னா பின்னாவென்று எல்லோருடைய ப்ளாகிலும் நுழைந்து அவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுங்கள்.அவர்கள் எழுதிய இரண்டு வரிகளை காப்பி செய்து போட்டு 20 வரிகள் பாராட்டுங்கள்.முதல் பத்து பின்னூட்டங்களுக்குள் அமைவது சிறப்பு.ஒரு கட்டத்தில் அவர்களே "யார்ரா இவன்" என்று நம்ம கடைப் பக்கமும் வருவார்கள்.வந்து விட்டால் வேறு வழியில்லாமல் நம்முடைய பதிவுகளையும் படிப்பதற்கு சாத்தியம் உள்ளது.


எதிர்ப் பதிவு:

இது மிக முக்கியமான ஒன்று.யார் எதைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ளாதீர்கள்.உலகம் உருண்டையானது என்றால் கூட எதிர் பதிவு போடுங்கள்.இதனால் சம்பந்தப் பட்டவரும் அவருடைய பதிவுகளை படிப்பவர்களும் உங்களை கவனிக்க வேண்டியதாகிறது.


பதிவுகளின் தலைப்பு மற்றும் பதிவுகளின் தரம்:

தலைப்பு கவர்ந்திழுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.'உலகப் பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்காவின் பங்கு' என்ற தலைப்பைக் காட்டிலும் ,'நமீதாவின் எழுச்சிக்கு காரணம்' என்ற தலைப்புக்கு மவுசு ஜாஸ்தி என்பதை உணருங்கள். பதிவுகளின் தரம்...ம்ம்.....அது ....வந்து அது தெரிஞ்சா நா ஏன் ஈ ஓட்டறேன்.

இதைப் பற்றி நமக்கு கவலையில்லை,விட்டு விடுங்கள்.அடுத்ததைப் பார்ப்போம்.


அழைப்பு:

யாருக்காவது பின்னூட்டம் போட்டால் சும்மா வராதீர்கள்.நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாருங்கள் என்று கூச்சப் படாமல் அழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.நாலு தடவை கூப்பிட்டால் தானாக வருவார்கள்.வந்ததற்கு அடையாளமாக வேறு வழியில்லாமல் நம்ம பதிவை பாராட்டி பின்னூட்டம் இடுவார்கள்.


புனைப்பெயர் வைத்துக்கொள்ளுதல்:

யாராவது ஒரு பிரபலத்தின் பெயரில் எழுத ஆரம்பியுங்கள்.உதாரணமாக கமல் ,ரஜினி, நமீதா ,வாலி ,வைரமுத்து என்றெல்லாம். பிரபலமானவுடன் அவர் பெயரில் எழுதுவதால் வாசகர்கள் குழப்பம் அடைவதால் பெயரை மாற்றிக் கொள்கிறேன் என்று அறிக்கை விட்டு விட்டு "மஞ்சமாக்கான்,காத்துவாயன்,திருவாழத்தான் "போன்ற வித்தியாசமான பெயர்களை வைத்துக் கொள்ளலாம்.


இசங்கள் பேசுதல்:
நீங்கள் புத்திசாலி என்று சும்மாவெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதற்காகத்தான் இது.முன் ,பின் நவீனத்துவம் ,க்யுபிசம்,கம்யுனிசம் ,அந்த இசம் ,இந்த இசம் என்று அடிக்கடி பதிவிலும் ,அடுத்தவருக்கு பின்னூட்டம் போடும்போதும் வார்த்தைகளை உபயோகியுங்கள்.பயம் வேண்டாம்,யாரும் அப்படின்னா என்ன? என்று கேட்க மாட்டார்கள்,கேட்டால் அவர்களின் அறியாமை வெளிப்பட்டு விடும் என்ற பயத்தினால், ஆமாம் போட்டு வைப்பார்கள்.அதையும் மீறி யாராவது ஒரு அப்பாவி கேட்டு விட்டால் ,கவலை வேண்டாம் ! அதை சாக்காக வைத்து ஒரு பதிவு போடுங்கள்.உங்கள் விளக்கத்தை புரிந்து கொள்ள கோனார் நோட்ஸ் தேவைப்படும் படி பார்த்துக் கொண்டால் போதும்.அடுத்து விளக்கம் கேட்க ஒரு பயலுக்கும் தைரியம் வராது.

பி.கு :தலைப்பை பாருங்கள் ,'பிரபலமான பதிவர்' ஆக என்றுதான் உள்ளது , 'நல்ல பதிவராக' என்று இல்லை.நல்ல பதிவராக ஆக இருக்கும் ஒரே வழி, நிறையப் படிப்பதுதான்.அப்படியே கொஞ்சம் மேல வலது பக்கம் பாத்தீங்கன்னா ஒரு லிஸ்ட் இருக்கும் ,நான் விரும்பி படிக்கிரவங்கன்னு.அவங்களையும் அவங்களைப் போல உள்ள நல்ல பதிவர்களின் ,நல்ல பதிவை படிப்பதினால் நீங்களும் நல்லா எழுத வாய்ப்பு உண்டு.நானும் அதே முயற்சியில் உள்ள ஆளுதான்.அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் , இந்த பதிவு பெயரை மாற்றிக்கொண்ட தாமிராவையும் , 'எதிர்ப் பதிவுத்திலகம்' வால்பையனையும் காயப்படுத்தாது என்கிற நம்பிக்கையில் போட்டது. பெரிய மனுஷங்க பெரிய மனுஷங்கதான் ,மன்னிச்சிடுவாங்க.

48 comments:

சாலிசம்பர் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

கலக்கிட்டிங்க போங்க!

உங்க எழுத்தே பிரபலபதிவரோட எழுத்து மாதிரி தான் இருக்கு!

தொடர்ந்து எழுதுங்க தல!

கோவி.கண்ணன் said...

அருமையான யோசனைகள் !

கே.ரவிஷங்கர் said...

இங்கேயும் survival of the
fittest தத்துவம் உண்டு.


வாழ்த்துக்கள்!

Anonymous said...

யப்பா.........
கலக்கல் போங்க, ....

ஸ்ரீதர் said...

நன்றி வால்பையன்

நன்றி திரு.கண்ணன்

நன்றி ரவிசங்கர் , survival of the fittest என்கிற விஷயம் இல்லாத இடமே இல்லை.

நன்றி மணி .

Cinema Virumbi said...

தூள் கெளப்பிட்டீங்க மாமு! உடனே நாலஞ்சு ஐடியாவைக் கடைப் பிடிக்கிறேன்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com
http://cinemavirumbi.tamilblogs.com

ஸ்ரீதர் said...

நன்றி சினிமா விரும்பி.கடைபிடிங்க , வித்தியாசமான விளைவுகளுக்கு கம்பெனிபொறுப்பல்ல.

Kanna said...

//எதிர்ப் பதிவு:

இது மிக முக்கியமான ஒன்று.யார் எதைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ளாதீர்கள்.உலகம் உருண்டையானது என்றால் கூட எதிர் பதிவு போடுங்கள்.இதனால் சம்பந்தப் பட்டவரும் அவருடைய பதிவுகளை படிப்பவர்களும் உங்களை கவனிக்க வேண்டியதாகிறது//

ஹி..ஹி

நான் பத்துகுள்ள வந்துட்டனா..?

அப்பிடின்னா நீங்களும் வாங்க..

www.venkatesh-kanna.blogspot.com

அதிஷா said...

கடைசியா சொன்னீங்க பாருங்க நிறைய வாசிக்கணும்னு உண்மையாகவே நல்ல பாய்ண்ட் நண்பா!

வாசிப்பு தான் பிரச்சனையே!

_______

நல்ல பதிவு கெட்ட பதிவுனு எப்படி பிரிச்சு பாக்கறது?

சென்ஷி said...

// கோவி.கண்ணன் said...

அருமையான யோசனைகள் !//

ரிப்பீட்டே :)

அறிவே தெய்வம் said...

\\பின்னூட்டம் இடுதல்: நம்மைப் போல் இல்லாமல் நல்ல பதிவர்களும் இருக்கிறார்கள் .கன்னா பின்னாவென்று எல்லோருடைய ப்ளாகிலும் நுழைந்து அவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுங்கள்.அவர்கள் எழுதிய இரண்டு வரிகளை காப்பி செய்து போட்டு 20 வரிகள் பாராட்டுங்கள்.முதல் பத்து பின்னூட்டங்களுக்குள் அமைவது சிறப்பு.ஒரு கட்டத்தில் அவர்களே "யார்ரா இவன்" என்று நம்ம கடைப் பக்கமும் வருவார்கள்.வந்து விட்டால் வேறு வழியில்லாமல் நம்முடைய பதிவுகளையும் படிப்பதற்கு சாத்தியம் உள்ளது.\\

வாழ்த்துக்கள்

தமிழ்நெஞ்சம் said...

இப்படிச் செய்தும் நம்ம கடைப்பக்கம் எட்டிப்பாக்காத ஆட்கள் மில்லியன் கணக்கில் இருக்காங்க தல..

//ஒரு கட்டத்தில் அவர்களே "யார்ரா இவன்" என்று நம்ம கடைப் பக்கமும் வருவார்கள்.வந்து விட்டால் வேறு வழியில்லாமல் நம்முடைய பதிவுகளையும் படிப்பதற்கு சாத்தியம் உள்ளது.

தமிழ்நெஞ்சம் said...

ஜூ ப் ப ரு

//"மஞ்சமாக்கான்,காத்துவாயன்,திருவாழத்தான் "போன்ற வித்தியாசமான பெயர்களை வைத்துக் கொள்ளலாம்.

சாலிசம்பர் said...

/நமீதாவின் எழுச்சிக்கு காரணம் என்ன//

சூப்பர்.வீட்டுல சொல்லி சிரிச்சுக்கிட்டுருந்தேன்.

Subankan said...

//.அவர்கள் எழுதிய இரண்டு வரிகளை காப்பி செய்து போட்டு 20 வரிகள் பாராட்டுங்கள்.முதல் பத்து பின்னூட்டங்களுக்குள் அமைவது சிறப்பு.//


நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஸ்ரீ, அதிலும் நான் மேலே காட்டிய வரிகள் பதிவுலகின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் முதல் பத்து பின்னூட்டங்களும் மீ த பஸ்டு, மீ த செகண்டு என பத்து வரைக்கும் அமைந்துவிடுவதால் இவ்வாறு இருபது வரி புகழ்ந்து முடிக்கையில் என்னைப் போல பதினாறாவதுக்கு வந்துவிடும். இருந்தாலும் பரவாயில்லை. பின்னூட்டம்தான் நமது இலட்சியம் இல்லையா?

//யாருக்காவது பின்னூட்டம் போட்டால் சும்மா வராதீர்கள்.நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாருங்கள்//

அப்படியே நம்ம கடைப்பக்கமும் வந்து பார்க்கலாமே!

யாருப்பா அது, இருபது வரி ஆச்சான்னு கொஞ்சம் எண்ணிச் சொல்லுங்கப்பா

Subankan said...

அந்தப் பின்னூட்டம் சும்மா உலுலாய்க்கு, மனசில ஏதும் வச்சுக்காதீங்க. பதிவு அருமை. ரசித்துச் சிரித்தேன்.

Mrs.Menagasathia said...

சூப்பர் கலக்கிட்டீங்க,நல்ல பதிவு.

//யாருக்காவது பின்னூட்டம் போட்டால் சும்மா வராதீர்கள்.நம்ம கடைப் பக்கமும் கொஞ்சம் வாருங்கள் என்று கூச்சப் படாமல் அழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.நாலு தடவை கூப்பிட்டால் தானாக வருவார்கள்.வந்ததற்கு அடையாளமாக வேறு வழியில்லாமல் நம்ம பதிவை பாராட்டி பின்னூட்டம் இடுவார்கள். //

ஹி.. ஹி அப்படியே நம்ம பக்கமும் வாங்க.நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு புரியுது எழுதியவருக்கே பலனான்னு கேட்பது புரியுது...

http://sashiga.blogspot.com

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

ஓட்டு பட்டையை நிறுவியதற்க்கு நன்றி

நன்றி
தமிழ்ர்ஸ்

Sukumar Swaminathan said...

நெசமாவே நல்லா எழுதுறீங்க...

TamilhackX said...

கலக்கிட்டிங்க ஸ்ரீதர்
வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நல்ல யோசனைகள்

பாலா... said...

நான் முதல்ல பாலோயராய்க்கிறேன்.

கிரி said...

:-))))

பழமைபேசி said...

//பாலா... said...
நான் முதல்ல பாலோயராய்க்கிறேன்.
//

நானும் அண்ணன் வழிலயே...

சித்து said...

நெம்ப நல்ல இருக்கு ஓய். ரூம் போட்டு யோசித்தேலோ???

அன்புடன் அருணா said...

சும்மா கலக்கிடிட்டீங்க போங்க!!!
அன்புடன் அருணா

jothi said...

super,.

// இது மிக முக்கியமான ஒன்று.யார் எதைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ளாதீர்கள்.உலகம் உருண்டையானது என்றால் கூட எதிர் பதிவு போடுங்கள்.இதனால் சம்பந்தப் பட்டவரும் அவருடைய பதிவுகளை படிப்பவர்களும் உங்களை கவனிக்க வேண்டியதாகிறது. //

எனக்கு தெரிந்த வரையில் ஒருவர் இருக்கிறார். Bad example.

ஸ்ரீதர் said...

நன்றி கண்ணா ,கண்டிப்பா உங்க பதிவுகளையும் படிச்சுடறேன் .

ஸ்ரீதர் said...

நன்றி அதிஷா , என்னைப் பொறுத்தவரையில் எல்லோரும் நல்ல பதிவர்களே.நல்லது கெட்டது என்று சொல்வதை விட நம் ரசனையைப் பொறுத்து பிடித்தது பிடிக்காதது என்று வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.

ஸ்ரீதர் said...

நன்றி சென்ஷி

ஸ்ரீதர் said...

வருகைக்கு நன்றி அறிவே தெய்வம்.

ஸ்ரீதர் said...

வருகைக்கு நன்றி தமிழ் நெஞ்சம்.நான் கண்டிப்பா வருவேன்.

ஸ்ரீதர் said...

வருகைக்கு நன்றி ஜாலி மன்னிக்கவும் சாலி சம்பர்.

ஸ்ரீதர் said...

நன்றி சுபாங்கன்.உங்கள் பதிவுகளும் அருமை .என்னைப் போன்ற ஆட்களுக்குப் பயனுள்ளது.

ஸ்ரீதர் said...

நன்றி Mrs. மேனகா . நான் நல்லா சாப்பிடுவேன், தயிரும் ,வெந்நீரும் நல்லா செய்வேன்.

ஸ்ரீதர் said...

வருகைக்கு நன்றி சுகுமார் சுவாமிநாதன்.

ஸ்ரீதர் said...

வருகைக்கு நன்றி தமிழ் ஹேக்ஸ்.

ஸ்ரீதர் said...

நன்றி நசரேயன் .

ஸ்ரீதர் said...

நன்றி பாலா.

ஸ்ரீதர் said...

நன்றி கிரி .

ஸ்ரீதர் said...

வாங்க பழமை அண்ணே.நான் உங்க பாலோயர் தெரியுமா?

ஸ்ரீதர் said...

நன்றி சித்து அண்ணே ,இதுக்கு ரூமெல்லாம் போட வேண்டாம்ணே,நம்ம மக்கள் செய்யுறத பாக்கறமில்ல.

ஸ்ரீதர் said...

நன்றி அருணா .

ஸ்ரீதர் said...

நன்றி ஜோதி . இது யாரையும் குறிப்பிட்டு எழுதுனது இல்ல . ஜாலியா எடுத்துக்குங்க.

விக்னேஷ்வரி said...

Interesting post.

ஸ்ரீதர் said...

நன்றி விக்னேஷ்வரி.

டக்ளஸ்....... said...

அப்பிடி போடு தமாசு...!