Monday, April 13, 2009

இனா வானாக்களின் வாழ்க்கைத் தத்துவம்

அறிவைத் தவிர்.

ஆளுகைக்கு உட்படு.

இலவசம் என்றால் உடனே வாங்கு.

ஈடாக வாழ்க்கையை கொடு.

உண்மையை மதியாதே.

ஊர் எப்படிப் போனால் நமக்கென்ன.

எதையும் கண்டுகொள்ளாதே.

ஏற்பதே மகிழ்ச்சி.

ஐந்தறிவே போதுமானது .

ஒரு ஓட்டு ஆயிரம் ரூபாய்.

ஓட்டு போடும் முன் காசு வாங்கிவிடு.

ஔவை சொன்னதெல்லாம் பழங்குப்பை.

இஃதே வாழ்க்கைத் தத்துவம்.

இனா வானா - இளிச்ச வாயன்னு அர்த்தமில்லீங்க.'இந்திய வாக்காளர்' ங்கறதோட சுருக்கம்.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

6 comments:

பழமைபேசி said...

இனா வானா = இந்த சிலேடை காலத்துக்கேற்ற மாதிரி இருக்குங்க...

நவீன ஆத்திச்சூடியும் பலே பலே!!

ஸ்ரீதர் said...

மிக்க நன்றி பழமை.

வெங்கட்ராமன் said...

உண்மையை உரக்கச் சொல்லும் பதிவு.

ஸ்ரீதர் said...

மிக்க நன்றி .

ஆபிரகாம் said...

ரசித்தேன்...

ஸ்ரீதர் said...

நன்றி ஆபிரகாம்.