Thursday, March 19, 2009

ஜோதிடர்-ஜோதிடம்-பாகம் 3

ஜோதிடம் என்பதன் அடிப்படை 'எல்லாம் ஒன்றில் இருந்து வந்தது என்பதால் எல்லாமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது ' என்பதுதான். (Big Bang Theory )
கோள்களின் சாரத்தை வைத்து நடக்கப் போவதை துல்லியமாக கணிக்கக் கூடிய கணித முறைகள் இருந்திருக்கின்றன.ஆமாம் இப்போது அவை இல்லை.நமக்கு கிடைத்திருப்பதை வைத்து ஓரளவே நம்மால் கணிக்க முடியும்.இதில் தங்கள் அனுபவத்தின் மூலம் சிலர் இந்த அமைப்பு இருந்தால் இப்படி நடக்கிறது என்று வெளியிட்டுள்ளனர்.பெரும்பாலும் சரியாகத்தான் உள்ளது. இது ஒரு அறிவியல் மட்டுமே.இதில் கடவுள் என்கிற விஷயம் பின்னால்தான் நுழைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.ஏனெனில் பழைய நூல்கள் என்று கருதப்படும் பலவற்றில்,இப்படி இருந்தால் இது நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளதே தவிர,இந்த கடவுளை வணங்கி இந்த பரிகாரம் செய் என்று சொல்லப் படவில்லை.நான் முதன் முதலில் இந்த துறையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக படித்த நூலில் உள்ள ஒரு வாசகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Fools obey planets, wiseman cange it என்பதே அது.' தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் ' என்பது வள்ளுவம்.

இதை வெறும் அறிவியலாக மட்டுமே பார்ப்பதும் அதனிடத்தில் வாழ்க்கையை ஒப்படைத்து அதன்படி நடப்பதும் தனி மனித விருப்பம்.நான் பார்த்த வரையில் எந்த ஒரு விஷயமும் மாறுதலுக்கு உரியதே.எத்தனையோ கடினமான சூழ்நிலைகளில் இருந்து எந்தவிதமான வழிபாடோ ,பரிகாரங்களோ செய்யாமல் மீண்டவர் பலர்,நான் பார்த்திருக்கிறேன்.இது வேதத்தின் ஒரு பகுதியாக சொல்லப் படுகிறது.ஆனால் இதனுடைய எல்லா பகுதிகளும் நம்மிடம் உள்ளதா என்றால் இல்லை.நடைமுறையில் எத்தனை பேரால் நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடியும்.இதில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் நடந்ததை சொல்வர், ஆனால் நடக்கப் போவதை உறுதி பட சொல்ல முடியாதவர்களே.நடந்தது நமக்கே தெரியும் அதை காசு கொடுத்துக் கேட்பானேன்?நான் இந்தக் கலையை ஒருநாளும் குறை சொல்ல மாட்டேன்.இது எதற்காக சொல்லப் பட்டதோ ,இன்று அதற்காக பயன்படவில்லை என்பதே என் கருத்து .யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.

இன்று இது நல்ல வருமானம் தரக் கூடிய ஒரு துறையாக உள்ளது என்பதாலேயே பல பேர் விஷயம் தெரியுமோ தெரியாதோ வந்து விடுகின்றனர்.அதை செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று ஆயிரக் கணக்கில் பணம் வசூலிக்கின்றனர், இவர்களிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பரிகாரமும் எந்த ஒரு நூலிலும் குறிப்பிடப் படவில்லை என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்,எங்கோ ஒன்றிரண்டு சொல்லப் பட்டிருக்கலாம்,அவைகள் சொல்லப் பட்டதும் மன அமைதிக்காகத்தான். ஆனால் அதற்க்கு கைகால் வைத்து பல பரிகாரங்களை உற்பத்தி செய்து விட்டனர். உண்மையில் கடவுள் என்று ஒருவர் இருப்பாராகின் அவருக்கு நாம் ஏதும் தந்து நிறைய வேண்டி இருக்குமா என்ன? எனவே என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால்,முடிந்தவரை ஜாதகம் பார்ப்பதை தவிருங்கள் ,எல்லாமும் உங்களுக்குள்ளேயே உள்ளது, இல்லை பார்த்துதான் ஆக வேண்டும் என்றால்,எவர் இதை தொழிலாகச் செய்யாமல் இருக்கிறாரோ அவரிடம் பாருங்கள். அந்த கல்லைப் போட்டால் அது நடக்கும் இது நடக்கும் என்பதை எல்லாம் நம்ப வேண்டாம்.நம் தலையில்தான் கல் விழும் கடைசியில்.எதையும் ஆராயாமல் சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை.கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்த துறையைப் பற்றி நிறையப் படித்து ,பார்த்து இந்த பதிவை எழுதி உள்ளேன்.இந்த பதிவில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் ,பதில் சொல்வது என் கடமை.

4 comments:

thevanmayam said...

இதை வெறும் அறிவியலாக மட்டுமே பார்ப்பதும் அதனிடத்தில் வாழ்க்கையை ஒப்படைத்து அதன்படி நடப்பதும் தனி மனித விருப்பம்.நான் பார்த்த வரையில் எந்த ஒரு விஷயமும் மாறுதலுக்கு உரியதே.எத்தனையோ கடினமான சூழ்நிலைகளில் இருந்து எந்தவிதமான வழிபாடோ ,பரிகாரங்களோ செய்யாமல் மீண்டவர் பலர்,நான் பார்த்திருக்கிறேன்///

வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்!

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

ஸ்ரீதர் said...

nantri thaevanmayam.

supersubra said...

பரிகாரம் என்பதை இப்படி புரிந்து கொண்டால் நல்லது. உங்கள் கர்ம வினைப்படி (கர்ம விளைவு அல்ல) ஒரு வினை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நடக்கும். உதாரணமாக உங்கள் 15வது வயதில் ஒரு ரௌடி இடம் அடி வாங்குவீர்கள் என்பது விதி. கட்டாயம் அது நடக்கும். ஆனால் அதனால் மருத்துவ மனையில் சேருவீர்களா அல்லது அவனை ரெண்டு போடு போட்டுவிட்டு நீங்கள் செல்வீர்களா என்பது உங்கள் உடம்பை நீங்கள் எப்படி தயார் படுத்தி வைத்திருகிறீர்கள் என்பதை பொருத்தது. ஜோதிடம் ஒரு தீய வினைக்கான காலத்தை சொல்லும் பொழுது நீங்கள் மனதளவில் உங்களை தயார் படுத்தி அதன் தாக்கங்களில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். இது தான் பரிகாரம் என்பது. கோவில் சென்று இந்த காரியத்தை செய்தால் தப்பிக்கலாம் என்ற கருத்தை நம்பி அதை செய்யும் பொழுது மனதளவில் இந்த கடின காலம் நம்மை பாதிக்காது என்ற நம்பிக்கை பெறுகிறார் அது அவரை அந்த கடின கால கட்டத்தை தாண்டி செல்ல உதவுகிறது என்பது என் கருத்து.