Sunday, February 22, 2009

நான் கடவுளா?

இல்லை , நான் எழுதப் போவது திரைப்பட விமர்சனம் அல்ல.கடவுள் நம்பிக்கை ,ஜோதிடம் ,மதம் சார்ந்த நம்பிக்கைகள் பற்றி ஆளாளுக்கு பதிவுகளை போட்டு பயங்கரமாய் விவாதம் செய்கிறபோது நான் மட்டும் தேமேயென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் கருத்து கந்தசாமி ஆகி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். என்ன நான் கொஞ்சம் லேட். கடவுள் ,மதம் என்பது எல்லாம் தனி நபர் நம்பிக்கை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் போவதில்லை.இது ஒரு குழப்பமான விஷயம்.இருக்குப்பா என்று சொன்னால்சில பேர் படித்து விட்டு போவார்கள் ,இல்லை என்று சொன்னால் போதும் நிறைய பேர் படிப்பதோடு மட்டுமல்லாமல் கமென்ட் பண்ணுவார்கள் என்று நினைத்து இந்த பதிவை போடவில்லை (நம்ம்புங்க சார்).

கடவுள் நம்பிக்கை என்பதை அடிப்படையாக வைத்து மக்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,ஆஸ்திகர்கள்,நாஸ்திகர்கள்,ஆஸ்திகநாஸ்திகர்கள் (அதாவது ரெண்டுங்கெட்டான்). விபரம் தெரியாத வரை எல்லோரும் ஆஸ்திகர்களே,கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் சில பேர் நாஸ்திக கரை ஒதுங்குவார்கள் தைரியமாக,பலர் ஆஸ்திகர்கள்,என்னைப் போன்று நட்டாத்தில் நின்று கொண்டு எந்த பக்கம் ஒதுங்குவது என்று பேந்தப் பேந்த முழிப்பவர்களுக்கு இந்த பதிவு.ஓவர் பில்ட் அப் வேண்டாம் விஷயத்திற்கு வருகிறேன்.

கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும், அல்லது யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கக் கூடும்.தனி ஒரு மனிதன் ஒரே நாளில் இந்த மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியாது.இயற்கையிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் ,தன்னை விட சக்தி வாய்ந்ததான ஒன்றைப் பணிந்து வணங்கும் பழக்கத்தின் அடிப்படை என்னவாக இருக்க முடியும்?உயிர் பயம்.அல்லது காட்டுமிராண்டிகளாக இருந்த மனிதனை வழிக்கு கொண்டு வர யாராலோ ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை.நாளடைவில் அதற்குப் பல்வேறு முகங்கள் ஏற்பட்டு விரிவடைந்திருக்க வேண்டும்.சடங்குகளை ஏற்படுத்தி அதை தொடர்வதால் உண்டாகும் நன்மைகளின் பட்டியல் ஏற்பட்டு விட்டது இப்போது.

கடவுள் இருக்கிறாரா இல்லையா?என்று யோசிக்கக் கூடத் தயாராக இல்லை பலர்.என் நண்பர் ஒருவரிடம் சில வருடங்களுக்கு முன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சொன்னது,"உன் தாய் கற்புடையவள் என்பதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளாய்? பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் நீதான் என்பதை எப்படி நம்புகிறாயோ அப்படித்தான் இதுவும்"என்று கொதித்தார்.sensitive விஷயம்.

எங்கும் நிறை பரப்ரம்மம்,ஆதியும் அந்தமும் இல்லாத,இது என்னவாக இருக்க முடியும்?அறிவியல் ரீதியாக கதிர் வீச்சு இல்லாத பொருள்களே இல்லை என்கிறார்கள் .மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான்.ஒரு பாட்டரி போல. ஆக வெளியில் இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது ,அல்லது எங்கும் இருக்கிறது.

சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை.இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே.இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம்.நோய்களை குணப்படுத்துவது உட்பட.சாமியார்கள் செய்வது இதைத்தான்.ஆனால் இது எல்லாராலும் முடியும்.ஜப்பானியர்கள் இதை reiki என்று பெயரிட்டு இதை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்.மனோ சக்தி பல அற்புதங்களைச் செய்யக்கூடியது.ரெய்கியின் அடிப்படைத் தத்துவம் அதுதான்,cosmic energy யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,உங்கள் மனம் அதற்கு எந்த அளவு உபயோகப்படும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு.எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது.இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம்.ஏனெனில் இந்தப் பதிவைப் படிக்கும் போதே உங்களுக்கு புரிந்திருக்கும் எனக்கு எதையும் சுருக்கமா சொல்லத் தெரியாதுன்னு.

இருப்பினும் சுருக்கமாக சொல்ல முயற்சித்தால், நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு காந்த சக்திப் புலத்தை, அதன் செயல்களை எளிதாகச் சொல்ல முன்னோர்கள் கையாண்ட விதம் வேறொன்றாக மாறி அல்லது மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு வேரூன்றி கிளை பரப்பி அசைக்க முடியாமல் ஆகிவிட்டது இப்போது.அதற்காக ஏற்படுத்தப்பட்ட சில வழிமுறைகள் மருவி வெறும் சடங்காக மாறி விட்டது.கையில் இருப்பது வெறும் சாவிதான்.எந்தப் பூட்டை திறக்கும் என்கிற விவரத்தையெல்லாம் எப்போதோ தொலைத்தாயிற்று.

17 comments:

கார்க்கி said...

//இருப்பினும் சுருக்கமாக சொல்ல முயற்சித்தால், நீங்கள் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருப்பது ஒரு காந்த சக்திப் புலத்தை, அதன் செயல்களை எளிதாகச் சொல்ல முன்னோர்கள் கையாண்ட விதம் வேறொன்றாக மாறி அல்லது மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு வேரூன்றி கிளை பரப்பி அசைக்க முடியாமல் ஆகிவிட்ட//

sariyaa sonniingka. vaaraavaaraam padiththathil pidiththathunu oru pathivu pooduveen. intha vaaraam intha pathivai podalaamaa? unga anumathi thevai

ஸ்ரீதர் said...

Nantri Karki.Thaaraalamaaka seiyunkal.Anumathi ellaam kotukka vaendiyathillai.umkal moolamaaka en karuththu innum silarai sentru atainthaal enakku santhoshame.

கார்க்கி said...

romba nandri. naalaiyee podaren

Massattra Kodi said...

நன்றாக இருக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தனி மனித அனுபவம்.


அன்புடன்
மாசற்ற கொடி

Massattra Kodi said...

நன்றாக இருக்கிறது. என்னை பொருத்தவரை கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தனி மனித அனுபவம்.


அன்புடன்
மாசற்ற கொடி

ஸ்ரீதர் said...

நன்றி மாசற்ற கொடி.தனிமனித அனுபவம் என்பது எல்லோரும் சொல்லும் வார்த்தைதான்.நீங்கள் எவ்விதம் கடவுளை உணர்ந்தீர்கள் அல்லது தெரிந்து கொண்டீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? கண்டிப்பாக இது ஒரு arguement க்காகவோ அல்லது நான் எழுதியதை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகவோ சொல்லவில்லை. நான் கடவுள் குறித்த உங்கள் அனுபவத்தை தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன்.

கார்க்கி said...

சகா,

இதை என் பதிவில் போட்டு அதுக்கு யூத்ஃபுல் விகடனில் குட் ப்லாகில் போட்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல விஷயத்தை சிலரிடம் கொண்டு சென்ற திருப்தி எனக்கு

தாமிரா said...

ஃப்ரெண்ட்லியான நடை. விவாததிற்குரிய தேவையான கருத்து. கருத்துகளில் மாற்று இருந்தாலும் பாராட்டுகள் ஸ்ரீதர்.! சின்ன வயதில் ஒரு மருத்துவர் ஒருவர் கடவுள் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கு அளித்த அந்த பதிலை அப்படியே இந்த பதிவில் காண்கிறேன்.

தாமிரா said...

Massattra Kodi said...
நன்றாக இருக்கிறது. என்னை பொருத்தவரை கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தனி மனித அனுபவம். //

ரசனையான வரிகள்.. ஹாஹா.. அழகு.!

தாமிரா said...

வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்கள் பிளீஸ்.!

ஸ்ரீதர் said...
This comment has been removed by the author.
ஸ்ரீதர் said...

இதை என் பதிவில் போட்டு அதுக்கு யூத்ஃபுல் விகடனில் குட் ப்லாகில் போட்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல விஷயத்தை சிலரிடம் கொண்டு சென்ற திருப்தி எனக்கு//


மிகவும் நன்றி .உங்கள் பதிவுகளையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.உங்களுடைய புட்டிக் கதைகள் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னுடைய மற்ற பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.மிக்க நன்றி.

ஸ்ரீதர் said...

மிகவும் நன்றி தாமிரா .உங்கள் பதிவுகளையும் நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.

Mahesh said...

நல்ல பதிவு ஸ்ரீதர்... இதே மாதிரி நானும் ஒரு ஜல்லியடித்தேன் :))))
http://thuklak.blogspot.com/2009/02/blog-post_11.html

ஸ்ரீதர் said...

Word verification ஐ modify செய்து விட்டேன் தாமிரா.

அறிவே தெய்வம் said...

தொடர்ந்து எழுதுங்கள்

சரியான வழியில் போகிறீர்கள்.

வாழ்த்துக்கள்

கிருஷ்ணமூர்த்தி said...

ஆக, நீங்களும் கடவுள் என்று ஒன்று இருக்கிறதா அல்லது மாயையா என்கிற விஷயத்தைத் தொட்டு, நடுவாந்தரத்தில் தொங்குவதையும் அறிந்திருக்கிறீர்கள்!

போதுமே, கரை தொட்டு விடும் தூரம் தான்!